Published:Updated:

``புதிய இந்தியாமீதான உலகத்தின் பார்வையை மோடி வடிவமைத்திருக்கிறார்!" - அமைச்சர் ஜெய்சங்கர் புகழாரம்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

``வெளிநாடுகளுக்குச் செல்லும் ஒவ்வொர் இந்தியருமே, தங்களின் பின்னால் இந்திய அரசாங்கமே இருக்கிறது என்ற நம்பிக்கைகொண்டிருக்கின்றனர்." - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

``புதிய இந்தியாமீதான உலகத்தின் பார்வையை மோடி வடிவமைத்திருக்கிறார்!" - அமைச்சர் ஜெய்சங்கர் புகழாரம்

``வெளிநாடுகளுக்குச் செல்லும் ஒவ்வொர் இந்தியருமே, தங்களின் பின்னால் இந்திய அரசாங்கமே இருக்கிறது என்ற நம்பிக்கைகொண்டிருக்கின்றனர்." - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

Published:Updated:
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு எட்டு ஆண்டுக்கால ஆட்சியை நிறைவுசெய்ததையடுத்து, பல்வேறு மாநிலங்களில் மாநாடு நடத்தி பா.ஜ.க அதன் சாதனைகளை மக்களிடையே கூறிவருகிறது. காங்கிரஸும் பதிலுக்கு, பா.ஜ.க-வின் எட்டு ஆண்டுக்கால ஆட்சியின் குறைகளைக் குறிப்பிட்டுக் கடந்த வாரத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. காங்கிரஸ் மட்டுமல்லாமல், மற்ற எதிர்க்கட்சிகளும்கூட பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை குறித்து பா-ஜ-க-வைச் சாடிவருகின்றன. இந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மோடியின் எட்டு ஆண்டுக்கால ஆட்சி குறித்து, `புதிய இந்தியாமீதான உலகத்தின் பார்வையை மோடி வடிவமைத்திருக்கிறார்' எனப் பாராட்டியிருக்கிறார்.

இது குறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், ``வேற்றுமைகள் நிறைந்த இந்த உலகில், எங்களின் சுதந்திரத்தை நாங்கள் நிலைப்படுத்தியிருக்கிறோம். பெருந்தொற்று உலகில், நிவாரணத்தின் ஆதாரமாக நாங்கள் விளங்கினோம்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

நிலையற்ற, ஒளிபுகா இந்த உலகில், வெளிப்படையாகவும், எளிதில் மீண்டுவரக்கூடியவர்களாகவும் நாம் இருந்தோம். மேலும், உலகளாவிய பிரச்னைகளை எதிர்கொள்வதில், நன்மைக்கான சக்தியாக இன்று நாம் இருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்குச் செல்லும் ஒவ்வொர் இந்தியருமே, தங்களின் பின்னால் இந்திய அரசாங்கமே இருக்கிறது என்ற நம்பிக்கைகொண்டிருக்கின்றனர். இத்தகைய மாற்றங்கள் அனைத்துமே, பிரதமர் மோடி முன்னிருந்து நடத்தியதால்தான் நிகழ்ந்திருக்கின்றன" எனக் கூறியிருக்கிறார்.

முன்னதாக இமாச்சலப் பிரதேசம், சிம்லாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட மோடி, ``கடந்த எட்டு ஆண்டுகளில் ஒரு முறைகூட என்னைப் பிரதமராக நான் நினைத்ததே இல்லை. 130 கோடி மக்களின் பிரதான சேவகன் நான்" என மக்கள் முன்னிலையில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism