Published:Updated:

``அவர் என்னுடைய மிகப்பெரிய ஆசிரியை!" - தாயார் ஹீராபென் குறித்து மோடி நெகிழ்ந்து உதிர்த்த வார்த்தைகள்

மோடி - ஹீராபென் மோடி

``தூய்மைப் பணிகளில் ஈடுபடுவோர்மீது ஆழ்ந்த மரியாதை வைத்திருந்தார். வாட்நகரிலுள்ள எங்கள் வீட்டை ஒட்டியிருக்கும் சாக்கடையைச் சுத்தம் செய்ய யாராவது வந்தால், அவர்களுக்கு டீ கொடுக்காமல் விட மாட்டார்." - பிரதமர் மோடி

``அவர் என்னுடைய மிகப்பெரிய ஆசிரியை!" - தாயார் ஹீராபென் குறித்து மோடி நெகிழ்ந்து உதிர்த்த வார்த்தைகள்

``தூய்மைப் பணிகளில் ஈடுபடுவோர்மீது ஆழ்ந்த மரியாதை வைத்திருந்தார். வாட்நகரிலுள்ள எங்கள் வீட்டை ஒட்டியிருக்கும் சாக்கடையைச் சுத்தம் செய்ய யாராவது வந்தால், அவர்களுக்கு டீ கொடுக்காமல் விட மாட்டார்." - பிரதமர் மோடி

Published:Updated:
மோடி - ஹீராபென் மோடி

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக் குறைவால் அகமதாபாத்திலுள்ள யூ.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பிரதமருக்கு ஆறுதலும், அவர் தாயார் மறைவுக்கு இரங்கலும் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி தன் தாயார் குறித்து அவ்வப்போது பகிர்ந்துகொண்ட சில தகவல்களின் தொகுப்பைக் காணலாம்.

பிரதமர் மோடி, தன் தாயார் ஹீராபென் மோடி குறித்து, ``என் அம்மா எல்லா அம்மாக்களையும்போல மிகவும் எளிமையானவர். இளம் வயதிலேயே தாயை இழந்தார். அதனால் என் பாட்டியின் முகமோ, மடியின் சுகமோகூட என் அம்மாவுக்கு நினைவில் இல்லை எனக் கூறுவார். அவரின் குழந்தைப் பருவம் முழுவதையும் தன் தாய் இல்லாமல்தான் கழித்தார். என்னுடைய சிறுவயதில் குடும்பத்தினருடன் வாட்நகரில், மண் சுவர்கள்கொண்ட சிறிய வீட்டில்தான் தங்கியிருந்தோம்.

மோடி - ஹீராபென் மோடி
மோடி - ஹீராபென் மோடி
ட்விட்டர்

அப்போது என் தாயார் சந்தித்த சவால்கள், அதை வெற்றிகரமாக சமாளித்த சாமர்த்தியம் அனைத்தும் என்னுடைய நினைவில் இருக்கின்றன. தினமும் வீட்டில் வேலை செய்வதோடு மட்டுமல்லாமல், வீட்டு வருமானத்துக்காக வெளியிலும் வேலைக்குச் சென்றார். சில வீடுகளில் பாத்திரங்களைக் கழுவியதோடு, வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க சர்க்கா (கைராட்டினம்) சுற்றவும் நேரம் ஒதுக்கினார். மழையின்போது, எங்கள் மேற்கூரை கசிந்து, வீடு தண்ணீரால் நிரம்பும். மேலிருந்து விழும் மழைநீரைச் சேகரிக்க வாளிகள், பாத்திரங்களை வைப்பார். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், உறுதியின் அடையாளமாக இருந்தவர்.

தூய்மை விஷயத்தில் எப்போதுமே மிகவும் கண்டிப்புடன் இருப்பவர். தூய்மைப் பணிகளில் ஈடுபடுவோர்மீது ஆழ்ந்த மரியாதை வைத்திருந்தார். வாட்நகரிலுள்ள எங்கள் வீட்டை ஒட்டியிருக்கும் சாக்கடையைச் சுத்தம் செய்ய யாராவது வந்தால், அவர்களுக்கு டீ கொடுக்காமல் விட மாட்டார்.

என் தந்தையின் நெருங்கிய நண்பர் ஒருவர் அருகிலுள்ள கிராமத்தில் தங்கியிருந்தார். அவரின் அகால மரணத்துக்குப் பிறகு, என் தந்தை தன்னுடைய நண்பரின் மகன் அப்பாஸை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தார். அவர் எங்களுடன் தங்கிப் படிப்பை முடித்தார். எங்கள் எல்லா உடன்பிறப்புகளுக்கும் செய்ததுபோலவே அம்மா அப்பாஸிடம் பாசமாகவும், அக்கறையுடனும் இருந்தார். ஒவ்வொரு வருடமும் ஈத் தினத்தன்று அவனுக்குப் பிடித்தமான உணவுகளை தயாரித்துக் கொடுப்பார்.

மோடி - ஹீராபென் மோடி
மோடி - ஹீராபென் மோடி
ட்விட்டர்

பண்டிகை நாள்களில், அக்கம் பக்கத்துக் குழந்தைகள் எங்கள் வீட்டுக்கு வந்து அம்மாவின் விசேஷ தயாரிப்புகளை ரசிப்பது வழக்கம். என்னுடைய தாயார் என்னுடன் இரண்டு முறை மட்டுமே வெளியே வந்திருக்கிறார்.

அகமதாபாத்தில் நடந்த ஒரு பொதுவிழாவில், ஏக்தா யாத்திரையை முடித்துக்கொண்டு லால் சௌக்கில் தேசியக்கொடியை ஏற்றிவிட்டு, ஸ்ரீநகரிலிருந்து திரும்பியபோது, அவர் என்னுடன் வந்து நெற்றியில் திலகம் பூசினார். இரண்டாவது நிகழ்வு, 2001-ல் குஜராத் முதல்வராகப் பதவியேற்றபோது வந்திருந்தார்.

முறைப்படி கல்வி கற்காமலும், கற்றுக்கொள்ள முடியும் என்பதை என் தாயார் எனக்கு உணர்த்தியிருக்கிறார். அவர் என்னுடைய மிகப்பெரிய ஆசிரியை. என்னுடைய தாயார் உட்பட அனைத்து ஆசிரியர்களையும் பொதுவில் கௌரவிக்க விரும்பியபோது என் தாயார் 'நான் ஒரு சாதாரண மனுஷி. நான் உன்னைப் பெற்றெடுத்திருக்கலாம். ஆனால், நீங்களெல்லாம் வல்லவரால் கற்பிக்கப்பட்டு வளர்க்கப்பட்டீர்கள். அதனால் என்னால் அங்கு வர முடியாது' எனக் கூறிவிட்டார். அவர் அந்த நிகழ்ச்சிக்கும் வரவில்லை.

ஹீராபென் மோடியின் பிரேதத்துக்கு அஞ்சலி செலுத்தும் மோடி
ஹீராபென் மோடியின் பிரேதத்துக்கு அஞ்சலி செலுத்தும் மோடி
ட்விட்டர்

அவர், 100-வது வயதில் அடியெடுத்து வைத்தபோது, நான் அவரைச் சந்தித்தேன். அப்போது , 'புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க்கையை வாழுங்கள்' என அவர் கூறிய விஷயம் இப்போதும் நினைவில் இருக்கிறது" எனப் பகிர்ந்திருந்தார்.