Published:Updated:

``பழைமை, புதுமையை இணைத்து, இந்தியாவை உருவாக்க எண்ணினார் பாரதி!” - பிரதமர் மோடி

முதல்வரைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்கிய பிரதமர் மோடி, பாரதியாரை `பன்முகத்தன்மைகொண்டவர்’ என்று குறிப்பிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வானவில் பண்பாட்டு மையம் சார்பில், மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று மாலை காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

பாரதியார்
பாரதியார்

இந்த நிகழ்ச்சியில் முதலில் மகாகவி பாரதியின் பெருமைகள் குறித்துப் பேசிய முதல்வர் பழனிசாமி, ``பாரதியின் கொள்கைகளை தமிழக அரசு நடைமுறைபடுத்திவருகிறது” எனப் பெருமிதம்கொண்டார். தொடர்ந்து பேசியவர், ``பக்தி, புரட்சி, காதல், தியாகம், அரசியல் கவிதை உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கியவர் பாரதி” என்றார். மேலும் ``பாரதி வாழ்ந்த இல்லத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நினைவிடமாக மாற்றினார்” என்பதையும் குறிப்பிட்டார்.

பாரதியார் பிறந்தநாள்: `கட்டாயக் கல்வியை உறுதி செய்வோம்!’– எட்டயபுரத்தில் உறுதியேற்ற இளம் பாரதிகள்

முதல்வரைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்கிய பிரதமர் மோடி, பாரதியாரை `பன்முகத்தன்மை கொண்டவர்’ என்று குறிப்பிட்டார். ``அவர் கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், சமூக சேவையாளர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத்தன்மைகொண்டவர். 39 ஆண்டுகளில் அவர் பல சாதனைகளை செய்திருக்கிறார்” என்றார். தொடர்ந்து, ``தமிழ் மொழியும், தாய்நாடும் தனது இரண்டு கண்கள் என பாரதி நினைத்தார்.

`அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பதில்லையே;

இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...’

இன்றைய இளைய தலைமுறை அவரைப் பின்பற்ற வேண்டும். இளைஞர்கள் எத்தனை தடை வந்தாலும் இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும். பழைமை மற்றும் புதுமையை இணைத்து இந்தியாவை உருவாக்க அவர் எண்ணினார்” என்றார்.

மோடி
மோடி

மேலும் , ``பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் முன்னேற்றம் குறித்துத் தொடர்ந்து பேசினார். பெண்கள் வலிமை பெற வேண்டும், ஆண்களுக்கு நிகராக உயர வேண்டும் என எண்ணினார் பாரதி” எனப் புகழாரம் சூட்டினார்.

இறுதியாக,

``இனியொரு விதி செய்வோம்;

அதை எந்த நாளும் காப்போம்;

தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்!” என்று பாடினார், என்றவர்,

`அவருடைய பாடல்களை அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டும்’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு