Published:Updated:

பிரதமர் வருகை கன்ஃபார்ம்; இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் - திண்டுக்கல்லில் ஏற்பாடுகள் தீவிரம்!

பிரதமர் மோடி - இளையராஜா

பிரதமர் மோடி இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டங்களை வழங்கவிருக்கிறார் எனப் பல்கலை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

பிரதமர் வருகை கன்ஃபார்ம்; இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் - திண்டுக்கல்லில் ஏற்பாடுகள் தீவிரம்!

பிரதமர் மோடி இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டங்களை வழங்கவிருக்கிறார் எனப் பல்கலை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
பிரதமர் மோடி - இளையராஜா

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியிலுள்ள காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கவிருக்கிறார். மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர். 

ஹெலிகாப்டர்
ஹெலிகாப்டர்

பெங்களூரில் `வந்தே பாரத்' ரயில் சேவை தொடக்கம் உள்ளிட்ட மூன்று நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர், மதுரை விமான நிலையத்துக்கு வரவிருக்கிறார். அங்கிருந்து காந்தி கிராமப் பல்கலைக்கழகத்துக்கு வந்து பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். இதையொட்டி நேற்று காலை முதல் மூன்று ராணுவ ஹெலிகாப்டர்கள் ஹெலிபேட் தளத்தில் இறக்கி ஒத்திகை பார்க்கப்பட்டன. மேலும் பிரதமர் வருகையையொட்டி, மதுரை-திண்டுக்கல் சாலை மூடப்பட்டு போக்குவரத்து மாற்றப்பட்டிருக்கிறது. மதுரை-திண்டுக்கல் இடையே நான்குவழிச் சாலையை ஒட்டியிருக்கும் பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஒரு வாரமாக போலீஸார் பல்கலைக்கழகம் உட்பட மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய்களுடன் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். பல்கலை வளாகம் மற்றும் மதுரை முதல் திண்டுக்கல் வரை 5 ஆயிரம் போலீஸார் மூன்று அடுக்கு பாதுகாப்புப்பணியை மேற்கொண்டுவருகின்றனர். திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு நாள்களுக்கு டிரோன்கள் பறக்கவும் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் சாலை மார்க்கமாக வர வாய்ப்பு இருக்கிறது என்பதால், மதுரை விமான நிலையம் முதல் திண்டுக்கல் வரை பாதுகாப்பு வாகனங்களுடன் இன்று ஒத்திகை நடத்தப்படவிருக்கிறது. 

பரிசோதனை
பரிசோதனை

நேற்று பிரதமர் அலுவலகம் மூலம் உறுதிசெய்யப்பட்டு, அழைப்பிதழ் தயாரானது. அதில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, வேந்தர் அண்ணாமலை ஆகியோர் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன. அழைப்பிதழ் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. கல்வியாளர்கள்,  மாணவர்களுக்கென ஏற்கெனவே தனி அழைப்பிதழ் தயாரித்து கொடுக்கப்பட்டுவிட்டன.

காந்தி கிராமப் பல்கலைக்கழகம்
காந்தி கிராமப் பல்கலைக்கழகம்

இந்த நிகழ்ச்சியில் பிரதமர், மோடி இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டங்களை வழங்கவிருப்பதாக பல்கலை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஆந்திராவுக்குச் செல்லும் பிரதமர், சனிக்கிழமை ஆந்திரா, தெலங்கானாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவிருக்கிறார்.