Published:Updated:

``நாடாளுமன்றத்தில் அதானி பற்றிய விவாதத்தைத் தடுக்க மோடி அனைத்தையும் செய்வார்!" - ராகுல் காந்தி

ராகுல் காந்தி, அதானி - மோடி

``அதானி பற்றிய விவாதத்தைத் தடுக்க மோடி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார். அதற்குக் காரணமும் இருக்கிறது. அது என்னவென்று உங்களுக்கும் தெரியும்." - ராகுல் காந்தி

Published:Updated:

``நாடாளுமன்றத்தில் அதானி பற்றிய விவாதத்தைத் தடுக்க மோடி அனைத்தையும் செய்வார்!" - ராகுல் காந்தி

``அதானி பற்றிய விவாதத்தைத் தடுக்க மோடி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார். அதற்குக் காரணமும் இருக்கிறது. அது என்னவென்று உங்களுக்கும் தெரியும்." - ராகுல் காந்தி

ராகுல் காந்தி, அதானி - மோடி

அதானி குழும நிறுவனங்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டிருப்பதாக ஜனவரி மாதம் 24-ம் தேதி ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் அதானி குழுமத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் முதலீடு செய்திருப்பது வெளிவர, அரசியல் வட்டாரங்களிலும் இது விவாதப்பொருளானது.

அதானி - ஹிண்டன்பர்க்
அதானி - ஹிண்டன்பர்க்

அதன் ஒருபகுதியாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும், அதானி விவகாரத்தை நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மேற்பார்வையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என முழக்கமிட்டுவருகின்றன.

நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திவருகின்றன. ஆனால், நாடாளுமன்றத்தில் இந்தப் பேச்சு எழும்போதெல்லாம் விவாதிக்கப்படாமலேயே அவை ஒத்திவைக்கப்படுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, `நாடாளுமன்றத்தில் அதானி பற்றிய விவாதத்தைத் தடுக்க மோடி அனைத்தையும் செய்வார்' என விமர்சித்திருக்கிறார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
ட்விட்டர்

செய்தியாளர்களிடம் இன்று பேசிய ராகுல் காந்தி, ``அதானி பற்றிய விவாதத்தைத் தடுக்க மோடி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார். அதற்குக் காரணமும் இருக்கிறது. அது என்னவென்று உங்களுக்கும் தெரியும். அதானி விவகாரத்தில் விவாதம் நடத்தப்பட்டு, உண்மை வெளிவர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். லட்சக்கணக்கான கோடிகளில் ஊழல் நடந்திருக்கிறது. அது வெளிவர வேண்டும்.

அதானி - மோடி
அதானி - மோடி

அதானியின் பின்னாலிருக்கும் சக்தி என்ன என்பதை நாடு அறிய வேண்டும். சில வருடங்களாகவே, அரசாங்கத்தைப் பற்றியும், நாம் இருவர் நமக்கு இருவர் பற்றியும் நான் பேசிவருகிறேன். ஆனால், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசாங்கம் அஞ்சுகிறது, அதோடு அரசாங்கம் அதை விரும்பவுமில்லை. எனவே, நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்" என்று கூறினார்.