Published:Updated:

``2024-ல் மீண்டும் பிரதமராக வேண்டும்..!" - நரேந்திர மோடிக்கு ராக்கி கயிறு அனுப்பிய பாகிஸ்தான் சகோதரி

மோடிக்கு ராக்கி கயிறு அனுப்பிய பாகிஸ்தான் சகோதரி

இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானைப் பூர்வீகமாகக்கொண்ட குவாமர் மோசின் ஷேக் என்ற பெண் சுமார் 25 ஆண்டுகளாக பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு, வாழ்த்து அட்டை அனுப்பி ரக்‌ஷா பந்தனைக் கொண்டாடிவருகிறார்.

நாடு முழுவதும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை ஆகஸ்ட் 11-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கும், ஆண்கள் தங்கள் சகோதரிகளுக்கும் ராக்கி என்ற கயிற்றைக் கட்டி மகிழ்வார்கள். வட மாநிலங்களில் இந்தப் பண்டிகை கோலாகலாமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானைப் பூர்வீகமாகக்கொண்ட குவாமர் மோசின் ஷேக் என்ற பெண் சுமார் 25 ஆண்டுகளாக பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு, வாழ்த்து அட்டை அனுப்பி ரக்‌ஷா பந்தனைக் கொண்டாடிவருகிறார்.

மோடி
மோடி

அந்த வகையில் இந்த ஆண்டும் அவர் பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு அனுப்பியிருக்கிறார். இது தொடர்பாக குவாமர் மோசின் ஷேக் எழுதியிருக்கும் கடிதத்தில், ``இந்த ஆண்டு பிரதமர் மோடி டெல்லியில் தன்னை நேரில் சந்திக்கும் வாய்ப்பை எனக்குக் கொடுப்பார் என்று நம்புகிறேன். இந்தச் சந்திப்புக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன். ரேஷ்மி ரிப்பனைக்கொண்டு நானே ராக்கி கயிற்றைத் தயாரித்திருக்கிறேன்.

மோடிக்கு ராக்கி கயிறு அனுப்பிய பாகிஸ்தான் சகோதரி
மோடிக்கு ராக்கி கயிறு அனுப்பிய பாகிஸ்தான் சகோதரி

பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன், நல்ல உடல்நலத்துடன் இருக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தித்தேன். 2024-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றிபெற்று பிரதமராக மீண்டும் மோடி தேர்வு செய்யப்படுவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பிரதமர் மோடி இதற்கான அனைத்துத் தகுதிகளையும்கொண்டவர் என்பதால் ஒவ்வொரு முறையும் அவரே பிரதமராக வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.