Published:Updated:

`லாக்டெளன் 4.0 உண்டு.. ஆனால், அது முற்றிலும் மாறுபட்டது!'- பிரதமர் மோடி அறிவிப்பு

மோடி
மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்தியாவில் மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. சில தளர்வுகளுடன் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவில் நோய்த் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து மாநில முதல்வர்களுடன் நேற்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் பல்வேறு மாநில முதல்வர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுடன் உரையாற்றுவார் என பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் மோடி மற்றும் முதல்வர்கள்
பிரதமர் மோடி மற்றும் முதல்வர்கள்

பிரதமர் நரேந்திர மோடி தற்போது நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். பிரதமர் உரையிலிருந்து, ``உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு 3 லட்சம் பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. ஒரு வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தை சின்னாபின்னமாக்கியிருக்கிறது. கொரோனாவுக்கு எதிராக 4 மாதங்களாக ஒட்டுமொத்த உலகமே போராடி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிராக கடந்த 4 மாதமாக போராடி வருகிறோம். உலகம் முழுவதும் இந்த வைரஸ் பெரும் நாசத்தை ஏற்படுத்திவிட்டது, உலகம் முழுவதும் 42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மனித இனத்தால் கற்பனை செய்து பார்க்க முடியாத மிகப் பெரிய பாதிப்பு. நாம் இதற்கு முன்னர் இப்படியான ஒரு பேரிடரை கேள்விப்பட்டதும் பார்த்ததும் இல்லை. கொரோனா போன்ற தாக்குதல் நாம் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று.

கொரோனா மனிதர்களுக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது. கொரோனாவுக்குப் பிந்தைய உலகை இந்தியா வழிநடத்த வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் முக்கிய கட்டத்தில் இருக்கிறோம். இது விட்டுவிடும் நேரமல்ல. நாம் வெற்றி பெற வேண்டும். உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன.

`லாக்டெளன் 4.0 உண்டு.. ஆனால், அது முற்றிலும் மாறுபட்டது!'- பிரதமர் மோடி அறிவிப்பு

உலகுக்கே இந்தியா நம்பிக்கை ஒளியை கொடுத்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி உலகின் வளர்ச்சிக்கு வித்திடும். யாரையும் சார்ந்திராமல் தன்னம்பிக்கையுடன் இருப்போம் என 130 கோடி மக்களும் உறுதி ஏற்போம். உலகம் எப்போதும் ஒரே குடும்பம் என்பதுதான் இந்தியாவின் நிலை. நமக்கு எப்போதும் சுயநலம் இருந்ததில்லை. உலகின் கொள்கைகளை இந்தியா மாற்றி அமைத்து வருகிறது. வலிமையான இந்தியாவை உருவாக்க இதுவே சரியான தருணம். இதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

21-வது நூற்றாண்டு இந்தியாவுக்கானது என்பதை நிரூபிக்கவேண்டிய நேரம் இது. இந்தியா மிகச்சிறப்பாக செயலாற்றும் என உலகம் இப்போது நம்புகிறது. மனிதகுலத்தின் நலனுக்கு நம்மால் பெரிய பங்களிப்பு அளிக்கமுடியும். இந்தியாவின் வளர்ச்சியில் ஐந்து முக்கிய அம்சங்கள் உள்ளன. பொருளாதாரம், உட்கட்டமைப்பு இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய அம்சம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ரூ.20 லட்சம் கோடிக்கு பொருளாதார சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. இந்தத் திட்டங்கள் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் கிடைக்கும். உலக நாடுகளுக்கு பொருள்கள் மற்றும் சேவைகளை அளிப்பதில் இந்தியா இடம் பெற வேண்டும் என்பதே திட்டத்தின் முக்கிய நோக்கம். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் கொரோனா மீட்பு பணிக்கு வழங்கப்படும்.

`லாக்டெளன் 4.0 உண்டு.. ஆனால், அது முற்றிலும் மாறுபட்டது!'- பிரதமர் மோடி அறிவிப்பு

கொரோனா பாதிப்பை சமாளிக்க உள்நாட்டு தொழில்துறையே உதவி செய்தது. இன்று நம்மிடம் வளங்கள் உள்ளன. நம்மிடம் சக்தி உள்ளது. உலகின் மிகச்சிறந்த திறமையாளர்கள் நம்மிடம் உள்ளனர். நாம் சிறந்த தயாரிப்புகளை உருவாக்குகிறோம். நம்முடைய தரத்தை மேம்படுத்துகிறோம். நம்மால் முடியும் நாம் அதைச் செய்வோம். நம்மால் முடியாது என எதுவும் இல்லை. நம்மிடம் வலுவான தீர்வு இருந்தால் எந்தப் பாதையும் கடினம் இல்லை.

இந்த வைரஸ் பாதிப்பு ஆரம்பித்தபோது இந்தியாவிலிருந்து ஒரு பிபிஇ கிட்களை கூட உற்பத்தி செய்யவில்லை. அப்போது நம்மிடம் N95 மாஸ்க்-களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் இருந்தது. ஆனால், இன்று ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் PPE கிட்களையும் மற்றும் N95 மாஸ்க் உருவாக்குகிறோம்.

நான்காம்கட்ட ஊரடங்கு மீண்டும் நீடிக்கப்படுகிறது. ஆனால், முற்றிலும் மாறுபட்டதாக அது இருக்கும். இதன் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். ஊடரங்கு தொடர்பான அறிவிப்பு மே 18-ம் தேதிக்கு முன்னர் அறிவிக்கப்படும்'' என பிரதமர் கூறியுள்ளார்

அடுத்த கட்டுரைக்கு