Published:Updated:

`பனாரஸ் பல்கலையில் தமிழ் இருக்கை; இலங்கைக்கு உதவி; உள்கட்டமைப்பு மேம்பாடு!' - மோடி ஸ்பீச் ஹைலைட்ஸ்

பெங்களூரு-சென்னை 4 வழி விரைவு சாலையின் 3-ம் கட்ட பணிகளுக்கும், துறைமுகம் - மதுரவாயல் 2 அடுக்கு மேல் நிலை சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

`பனாரஸ் பல்கலையில் தமிழ் இருக்கை; இலங்கைக்கு உதவி; உள்கட்டமைப்பு மேம்பாடு!' - மோடி ஸ்பீச் ஹைலைட்ஸ்

பெங்களூரு-சென்னை 4 வழி விரைவு சாலையின் 3-ம் கட்ட பணிகளுக்கும், துறைமுகம் - மதுரவாயல் 2 அடுக்கு மேல் நிலை சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

Published:Updated:

பிரதமர் மோடி தமிழ்நாட்டில் அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று மாலை ஐந்து மணியளவில் சென்னை வந்தடைந்தார். அவரை தமிழக ஆளுநர் ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு, தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி உள்ளிட்டோர் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

பிரதமர் மோடி வருகையையொட்டி, சென்னையில் 22,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பாஜக
பாஜக

தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி இன்று சென்னை வந்திருக்கிறார். நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வரவேற்புரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் முன்னிலை வழங்கினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னர் பிரதமர் மோடி, பெங்களூரு-சென்னை 4 வழி விரைவு சாலையின் 3-ம் கட்ட பணிகளுக்கும், துறைமுகம் - மதுரவாயல் 2 அடுக்கு மேல் நிலை சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

அதைத் தொடர்ந்து, `தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்..!' எனக் கூறி தனது உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, ``மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருவது என்பது எனக்குச் சிறப்பான தருணம். தமிழ்நாடு ஒரு சிறப்பான பூமி. தமிழ்நாடும், தமிழ்நாட்டின் கலாசாரமும் சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு துறையிலும் தமிழகத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் தலை சிறந்தவர்களாக விளங்குகின்றனர். தமிழ்நாட்டுக்கு வருவது எப்போதும் மகிழ்ச்சிக்குரியதுதான். செவித்திறன் குறைபாடுடையோர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மாணவிகள் சாதனை படைத்திருக்கின்றனர்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

தமிழ்நாடு மண் என்பது சிறப்பு வாய்ந்தது. தமிழ்மொழி நிலையானது. தமிழ்க் கலாசாரம் உலகளாவியது. தமிழ்நாட்டில் ரூ.31,000 கோடியிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. பெங்களூரு-சென்னை விரைவு சாலை திட்டம் இரு முக்கிய நகரங்களை இணைக்கிறது. மதுரை-தேனி அகல ரயில் பாதை திட்டம் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். எதிர்கால தேவையை நோக்கமாகக் கொண்டு நவீன திட்டங்கள் தீட்டப்படுகின்றன. உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்திய அரசு செயல்படுகிறது. தலைசிறந்த கட்டமைப்பு வசதிகளால் மட்டுமே தலைசிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும். அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களும் அனைவரையும் சென்று சேரும் விதமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தேசிய கல்விக் கொள்கை தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் பயனளிக்கும். தேசிய கல்விக் கொள்கையால் மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகளைத் தமிழ் மொழியில் கற்க முடியும். தமிழ் மொழியை மேலும் வளர்க்க மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. பனாரஸ் இந்து பல்கலையில் தமிழ் மொழி படிப்பதற்காக பாரதியார் பெயரில் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு நிதி உதவி, எரிபொருள் உணவு, மருந்து உள்ளிட்ட உதவிகளை இந்தியா செய்து வருகிறது. இலங்கை மக்களுக்கும், தமிழர்களுக்கும் இந்தியா துணை நிற்கும்" என்றார்.