Published:Updated:

``சில நாள்களாகவே மொழி அடிப்படையில் சர்ச்சையைக் கிளப்ப முயற்சி நடக்கிறது” - பிரதமர் மோடி

பிரதமர் மோடி

``பா.ஜ.க ஒவ்வொரு மாநில மொழியிலும் இந்திய கலாசாரத்தின் பிரதிபலிப்பைக் காண்கிறது'' என பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

``சில நாள்களாகவே மொழி அடிப்படையில் சர்ச்சையைக் கிளப்ப முயற்சி நடக்கிறது” - பிரதமர் மோடி

``பா.ஜ.க ஒவ்வொரு மாநில மொழியிலும் இந்திய கலாசாரத்தின் பிரதிபலிப்பைக் காண்கிறது'' என பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

Published:Updated:
பிரதமர் மோடி

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், ``பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் எட்டு ஆண்டுகள், நாட்டின் சீரான வளர்ச்சி, சமூகநீதி மற்றும் சமூகப் பாதுகாப்புக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. சிறு விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை இந்த எட்டு ஆண்டுகளில் பாஜக அரசு பூர்த்தி செய்துள்ளது. அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்கை நிர்ணயம் செய்யவேண்டிய நேரம் இது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

உலகமே இன்று இந்தியாவை மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கிறது. அதேபோல் நாட்டு மக்கள் பா.ஜ.க-வை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கின்றனர். கடந்த சில நாள்களாகவே மொழி அடிப்படையில் சர்ச்சையைக் கிளப்ப முயற்சி நடைபெற்றுவருகிறது. பா.ஜ.க ஒவ்வொரு மாநில மொழியிலும் இந்திய கலாசாரத்தின் பிரதிபலிப்பைக் காண்கிறது.தேசிய கல்விக் கொள்கையில் ஒவ்வொரு மாநில மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்'' என்றார்.

இந்தியாவில் கடந்த சில நாள்களாகவே இந்தித் திணிப்பு பற்றிய சர்ச்சை நிலவிவரும் நிலையில் பிரதமர் மோடியின் இந்தப் பேச்சு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism