Published:Updated:

பாமக 2.0: புதிய தலைவர் அன்புமணி ராமதாஸின் திட்டம் என்ன?

அன்புமணி ராமதாஸ்

"பா.ம.க 2.0 என்பது `அனைவருக்கும் உரிமை. அனைவருக்கும் வளர்ச்சி’ என்பதை உள்ளடைக்கியது." - வழக்கறிஞர் பாலு.

பாமக 2.0: புதிய தலைவர் அன்புமணி ராமதாஸின் திட்டம் என்ன?

"பா.ம.க 2.0 என்பது `அனைவருக்கும் உரிமை. அனைவருக்கும் வளர்ச்சி’ என்பதை உள்ளடைக்கியது." - வழக்கறிஞர் பாலு.

Published:Updated:
அன்புமணி ராமதாஸ்

சென்னை திருவேற்காட்டில், பாமக சார்பில் நடைபெற்ற மாநில சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டார். இவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

அன்புமணி ராமதாஸ், ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி
அன்புமணி ராமதாஸ், ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், “பா.ம.க இளைஞரணித் தலைவர் பொறுப்பு யாருக்கு என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. கட்சியின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு கிராமம், மாவட்டம்வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போகிறோம். குறிப்பாக, குடிநீர் பிரச்னைகள், சேலம் உபரிநீர்த் திட்டம், அத்திக்கடவு திட்டம் உள்ளிட்டவற்றைச் செயல்படுத்தவிருக்கிறோம். பா.ம.க 2.0 செயல் திட்டம் மூலம் மக்களின் அன்றாடப் பிரச்னைகளைச் சரிசெய்து, மக்களின் ஆதரவைப் பெறுவோம்” என்று தெரிவித்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘பா.ம.க 2.0’ என்கிற செயல் திட்டத்தை முன்னிறுத்தி தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார் அன்புமணி ராமதாஸ். `அந்தத் திட்டத்தின் சிறப்புகள் என்னென்ன?’ என்கிற கேள்வியை பா.ம.க வழக்கறிஞர் பாலுவிடம் முன்வைத்தோம்.

“2.0 மாடல் என்ன... எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்போகிறோம்... என்பதற்கான ஆலோசனையில் இருக்கிறோம். இந்தத் திட்டத்தை விரைவில் அறிவிக்கப்போகிறோம் என்று தலைவர் கூறியிருக்கிறார். ‘அனைவருக்கும் உரிமை. அனைவருக்கும் வளர்ச்சி’ என்பதை அடிப்படையாகக்கொண்டு உருவாகும் இந்தத் திட்டத்தில், வருங்கால தமிழகத்துக்கான தேவை என்ன... பாட்டாளி மக்கள் கட்சி எதற்கு முக்கியத்துவம் கொடுத்துப் பயணிக்க வேண்டும் என்பதையெல்லாம் பிராதனப்படுத்தி அதற்கான வரைவைத் தயார் செய்துகொண்டிருக்கிறோம் எனச் சொல்லியிருக்கிறார்.

பா.ம.க வழக்கறிஞர் பாலு
பா.ம.க வழக்கறிஞர் பாலு

பா.ம.க என்றால் சாதிக்கட்சி என்று பார்ப்பதை மாற்ற வேண்டும். அந்த வளையத்துக்குள் பா.ம.க-வை வளைப்பதற்கான முயற்சிகளை முறியடிக்க வேண்டும். அதற்கான செயல் திட்டம் வகுக்க வேண்டும். எல்லோரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய திட்டங்களாக இதில் இருக்கும். பொதுவாக பா.ம.க அப்படித்தான் இருந்திருக்கிறது. புகையிலை ஒழிப்பு, மது ஒழிப்பு, சமூகநீதிப் பிரச்னை, 108 ஆம்புலன்ஸ், கிராமப்புற சுகாதாரம்... என எல்லாமே அனைத்து மக்கள் பிரச்னைகளுக்கான தீர்வைத்தான் பா.ம.க முன்னெடுக்கிறது, முன்னெடுத்திருக்கிறது. ஆனால், இதை சாதிக் கட்சி என்கிற குறுகிய வட்டத்துக்குள் அடைக்கிறார்கள். அதை முறியடிக்க வேண்டும். அந்தத் தோற்றத்தை மாற்ற வேண்டும். அதற்கான முயற்சியைச் செய்வோம் என்று சொல்லியிருக்கிறார் தலைவர். விவசாயத்தை மேம்படுத்துவது, தமிழக இளைஞர்களின் திறன் மேம்பாடு ஊக்குவிப்பது... இதையெல்லாம் உள்ளடக்கிய திட்டத்தை பா.ம.க 2.0 என்று விரைவில் வெளியிடுவோம் எனச் சொல்லியிருக்கிறார்” என்கிறார் வழக்கறிஞர் பாலு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism