வன்னியர் சமுதாயத்தின் அடையாளமாகக் கருதப்படும் அக்னிக் கலசத்தைத் தன் வலது கை புஜத்தில் டாட்டூவாகக் குத்தியிருக்கிறார், பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.

சமீபத்தில் நடைபெற்ற பா.ம.க இணையவழிக் கூட்டத்தில், அன்புமணியே அக்னி டாட்டூவை வெளிப்படையாகக் காட்டினார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதால், தொண்டர்கள் உணர்ச்சிவசத்தில் ஆரவாரம் செய்கிறார்கள்.

இதை கவனித்த, தருமபுரி தொகுதி எம்.பி-யான செந்தில்குமார் (தி.மு.க) ட்விட்டரில் ராமதாஸையும் அன்புமணியையும் கடுமையாக விமர்சித்து கருத்துகளை எழுதிவருகிறார். ‘‘சின்ன வயசில் தடுப்பு ஊசி போட்ட இடத்தில் தழும்பு இருக்கும். உங்கள் பெற்றோர் சாதி மறுப்பு, சமூகநீதி சொல்லிக் கொடுக்கலைனா மனதிலுள்ள அசுத்தம் இப்படித்தான் பெரிய தழும்பாகக் கையில் வரும். இந்தச் சமூக நோய்க்கு மருத்துவம் அவசியம் மருத்துவரே’’ என்று செந்தில்குமார் பதிவிட்டிருந்த ‘ட்வீட்’ பலத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

‘‘அக்னிக் கலசத்தை ‘தழும்பு’ என்று சிறுமைப்படுத்தி விமர்சனம் செய்த செந்தில்குமார், வன்னியர் சமுதாயத்தின் துரோகி. இதற்குக் காரணமான மு.க.ஸ்டாலினை ஒருபோதும் மன்னிக்கக் கூடாது’’ என்று குறிப்பிட்டு தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் வன்னியர் சங்கம் சார்பில் போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள். தி.மு.க., பா.ம.க இடையேயான மோதல் முற்றியிருப்பதால், அந்த மாவட்டங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

தி.மு.க எம்.பி-யான செந்தில்குமார், ‘‘ ‘முதல்வர் வேட்பாளராகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அன்புமணி ராமதாஸ், அனைத்துச் சமூகங்களுக்கும் பொதுவானவர் இல்லை’ என்பதைக் காண்பிக்கத்தான் அந்தப் பதிவை போட்டிருந்தேன். சுய சாதிப்பற்று இருக்கலாம். பொதுத்தளத்தில் டாட்டூ படம் பகிரப்பட்டதால் விமர்சனம் செய்கிறேன்.

இந்தச் சமுதாயத்தால் அவர்களின் ஒரு குடும்பம் மட்டுமே பயனடைகிறார்கள். தேர்தல் பிரசாரத்தின்போது, ‘நானும் அன்புமணியும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவரைப்போல் நானும் மருத்துவர். ஆனால், நான் இந்த மண்ணின் மைந்தர்’ என்று கூறியதால்தான் தருமபுரி மக்கள் என்னை ஜெயிக்கவைத்தனர். அது, தேர்தலுக்கான யுக்தி. எல்லா இடத்திலும் நான் சமுதாயத்தின் பெயரைப் பயன்படுத்தவில்லையே?

ஆரம்பகாலத்தில், வன்னியர் சமுதாயத்துக்காக ராமதாஸ் இருந்தார். இப்போது, அப்படியில்லை. தி.மு.க தலைமை சொல்லி நான் விமர்சனம் செய்யவில்லை. தனிப்பட்ட முறையில்தான் செயல்படுகிறேன். நான் செய்வது தவறு என்றால், தலைமையிலிருந்து இந்நேரம் அழைத்துக் கண்டித்திருப்பார்கள்.

எந்தவொரு சமுதாயத்தின் அடையாளத்தையும் பொதுவெளியில் பெரிதாகக் கொண்டுவந்தாலும் நான் விமர்சனம் செய்வேன். ட்வீட் போட்டதற்காக பா.ம.க தரப்பிலிருந்து மிரட்டல்கள் வருகின்றன. தாக்குதல் நடத்தவும் தருமபுரியில் தூண்டி விடுகிறார்கள். அச்சுறுத்தல் குறித்து இதுவரை தலைமையிடத்தில் சொல்லவில்லை’’ என்றார்.

இது தொடர்பாக அன்புமணியிடம் விளக்கம் கேட்க போனில் தொடர்புகொண்டோம். போனை எடுத்துப் பேசிய அவரின் உதவியாளரிடம் விவரத்தைக் கூறினோம். அன்புமணியிடம் தகவல் பரிமாற்றம் செய்த அவர், ‘‘செந்தில்குமாரின் விமர்சனத்துக்கெல்லாம் அன்புமணி பதில் சொல்ல மாட்டார். எங்கள் கட்சியின் வழக்கறிஞர் பாலு பேசினால் போதுமானது’’ என்றார்.

சிறிது நேரத்தில் தொடர்பில் வந்த வழக்கறிஞர் பாலு, ‘‘தி.மு.க எம்.பி-யான செந்தில்குமாருக்கு அரசியல் தெளிவு கிடையாது. ‘நானும் மஞ்சள் சட்டைக்காரன்தான்’ என்று ஓட்டுக் கேட்டவர், இப்போது வன்னியர் இனத்தின் அடையாளமாகப் போற்றுகிற அக்னிக் கலசத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக வக்கிர கருத்தை வெளியிட்டிருக்கிறார். பா.ம.க-விடம் பிரச்னையென்றால், தி.மு.க-வில் உள்ள வன்னியத் தலைவர்களைத் தூண்டி விட்டுத்தான் குளிர் காய்வார் கருணாநிதி. தந்தையின் அதே பாணியை ஸ்டாலினும் பின்பற்றுகிறார்.

ஒரு சமுதாயத்தைப் புண்படுத்துவது தவறு என்று செந்தில்குமாரை ஸ்டாலின் இதுவரை கண்டிக்காதது ஏன்? ஸ்டாலின் சொல்லித்தான் இதெல்லாம் நடக்கிறது என்று நினைக்கிறோம். வேறு சமுதாயத்தை தி.மு.க-வினரால் இழிவுப்படுத்திப் பேசவிட முடியுமா... அப்படி விமர்சித்தால் அந்தச் சமூகத்தினர் சும்மாவிடுவார்களா?

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை வன்னியர் சமூகத்தை அரவணைப்பதைப் போன்று, நயவஞ்சகமாகப் புறக்கணிப்பதையே வேலையாக வைத்திருக்கிறது தி.மு.க. இரண்டு கட்சிகளுக்கும் கொள்கைரீதியான பிரச்னை யென்றால், அமைதியாக விட்டுவிடலாம். எங்கள் சமுதாயத்தின் அடையாளத்தை விமர்சனம் செய்தால் எப்படிப் பொறுத்துக் கொள்வோம்... செந்தில்குமாரின் இந்தச் செயலுக்கு தார்மிகப் பொறுப்பேற்று ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

வன்னியர் சமூக மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். அக்னிக் கலசத்தை டாட்டூவாகக் குத்திக்கொள்வது அன்புமணியின் தனிப்பட்ட விருப்பம். நாங்கள் மட்டுமா சாதி பார்க்கிறோம்? சாதி அரசியலை முன்னெடுத்ததே தி.மு.க-தான் என்று உலகறியும்’’ என்றார் கொதிப்புடன்.