நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு பரபரப்பாகத் தேர்தல் பிரசாரம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நேற்று பா.ம.க-வின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் காஞ்சிபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ``நீட் தேர்வுக்கு எதிராக இரண்டு திராவிடக் கட்சிகளும் விவாதித்துக்கொள்ள சவால் விட்டுக்கொண்டிருக்கின்றன.

நான் இப்போது ஒரு சவால் விடுகிறேன். மதுவிலக்கு பற்றி விவாதிக்கத் தயாரா? தி.மு.க., அ.தி.மு.க என இரண்டு கட்சிகளுக்கும் சேர்த்தே இந்த சவால்.
அந்த விவாதத்துக்கான மேடையை நானே ஏற்பாடும் செய்கிறேன். இரண்டு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் வாருங்கள். நானும் வருகிறேன். யார் மதுவைக் கொண்டு வந்தது... எவ்வளவு காலம் தமிழ்நாட்டில் மதுவிலக்கு இருந்தது... மீண்டும் யார் அதைத் தொடங்கியது... மதுவை யார் டாஸ்மாக் என மாற்றியது... டாஸ்மாக்கிலிருந்து யார் `பார்' திறந்தது... இந்தத் தமிழ்நாட்டை குடிகார நாடாக மாற்றியது யார் என விவாதிப்போம், தயாரா?" எனச் சவால் விட்டார்.