Published:Updated:

அ.தி.மு.க-வுக்கு `ஆட்டம்' காட்ட தயாராகும் பா.ம.க, தே.மு.தி.க!

சசிகலா, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம்
சசிகலா, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ( Photo: Vikatan )

விக்கிரவாண்டி வெற்றியை தங்களின் வெற்றியாகவே பா.ம.க பார்க்கிறது. `சோர்ந்துகிடந்த தே.மு.தி.க தொண்டர்களும் இப்போது உற்சாகமாகி விட்டார்கள். 'எல்லாம் எங்களால்தான்' என்று அ.தி.மு.க நிர்வாகிகளிடமே சொல்லிவருகின்றனராம்.

'தி.மு.க பொதுக்குழுவில் இடைத்தேர்தல் தோல்வி பற்றி விவாதிக்கப்படுமா?''

''அதுபற்றியும் பேசப்படும் எனத் தெரிகிறது. ஆனால், சீனியர்கள் சிலர் இந்த விவகாரத்தைப் பற்றி பொதுக்குழுவில் பேச வேண்டாம் என்று ஸ்டாலினிடம் சொல்லியிருப்பதாகத் தகவல். விக்கிரவாண்டி தோல்வி குறித்து ஸ்டாலினிடம் பொன்முடி அறிக்கை கொடுத்திருப்பதாக ஒரு செய்தி பரவியது. ஆனால், அப்படி எந்த அறிக்கையும் பொன்முடி தரப்பிலிருந்து தரப்படவில்லையாம். பொதுக்குழு முடிந்த பிறகு, கட்சிக்குள் சில மாற்றங்கள் இருக்கும் என்கிறார்கள்.''

''அ.தி.மு.க முகாமில் என்ன விசேஷம்?''

''விக்கிரவாண்டி வெற்றியை அடுத்து, சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஒரு கணக்குப் போட்டுப்பார்த்திருக்கிறார். அவர் செலவழித்த தொகைக்கும் அ.தி.மு.க வாங்கிய வாக்குக்கும் வித்தியாசம் அதிகமாம். 'இவ்வளவு செலவு செய்தும் நம்மால் இந்த அளவுக்குத்தான் வெற்றி பெற முடிந்திருக்கிறது. அதனால் தி.மு.க-வை சாதாரணமாக எடை போட்டுவிடக் கூடாது' என்று எடப்பாடி பழனிசாமியிடம் சொல்லியிருக்கிறாராம்.''

''இடைத்தேர்தல் வெற்றியை, ஆளுங்கட்சியைவிட அதன் கூட்டணிக்கட்சிகள் பெரிதாகக் கொண்டாடுகின்றனவே?''

''ஆமாம்... விக்கிரவாண்டி வெற்றியை தங்களின் வெற்றியாகவே பா.ம.க தரப்பு பார்க்கிறது. 'சோர்ந்துகிடந்த தேமு.தி.க தொண்டர்களும் இப்போது உற்சாகமாகி விட்டார்கள். 'எல்லாம் எங்களால்தான்' என்று அ.தி.மு.க நிர்வாகிகளிடமே சொல்லிவருகின்றனராம். பா.ம.க, தே.மு.தி.க இரு கட்சிகளுமே உள்ளாட்சித் தேர்தலில் இதை வைத்து அ.தி.மு.க-வுக்கு ஆட்டம் காட்டுவார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.''

அமைச்சர் சி.வி.சண்முகம் - மருத்துவர் ராமதாஸ்
அமைச்சர் சி.வி.சண்முகம் - மருத்துவர் ராமதாஸ்
தே.சிலம்பரசன்

''உள்ளாட்சித் தேர்தல் கண்டிப்பாக நடக்குமா?''

''நடக்கும் என்று ஆளுங்கட்சித் தரப்பில் உறுதியாகச் சொன்னாலும், மாநிலத் தேர்தல் ஆணையத்தைவைத்து மீண்டும் நான்கு வாரகால அவகாசம் வாங்கியதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள். ஒன்று, கூட்டணிக் கட்சிகளைச் சமாளிக்க வேண்டிய நிலை. மற்றொன்று, உள்கட்சிக்குள் சீட் கொடுப்பதில் அடிதடி ஏற்பட்டு பெரும்பிளவு ஏற்படும் என்று தலைமை நினைக்கிறது. இதனால், சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்த பிறகு, உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாமா என்றுகூட எடப்பாடி தரப்பு நினைக்கிறதாம்.''

''சசிகலா வந்த பிறகா?'' - இதன் பின்னணியையும், தி.மு.க பொதுக்குழு உள்விவகாரங்களையும் விவரிக்கும் ஜூனியர் விகடன் கழுகார் பகுதியை முழுமையாக வாசிக்க > மிஸ்டர் கழுகு: சசிகலா வந்த பிறகே உள்ளாட்சித் தேர்தல்... - எடப்பாடியின் எடக்கு மடக்கு திட்டம்!

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |

"சசிகலா வெளியே வருவதில் தினகரனுக்கு விருப்பமில்லை!"

டி.டி.வி.தினகரனுக்கு தளபதிபோல் செயல்பட்ட பெங்களூரு புகழேந்தி, தற்போது தீராத பகையாளியாக மாறிவிட்டார். 'புகழேந்தி, தி.மு.க-வில் இணையப்போகிறார்' என்று பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில், சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் சந்தித்து அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இதற்கிடையில் புகழேந்தியை '24-ம் புலிகேசி' என தினகரன் விமர்சிக்க, 'தினகரனின் ரகசியங்களை வெளியிடுவேன்' என புகழேந்தி கொதிக்க... அ.ம.மு.க-வில் அனல் பறக்கிறது!

"சின்னம்மா சிறைக்குச் செல்லும் முன் ஆட்சியை எடப்பாடி பழனிசாமியிடமும், கட்சியை தினகரனிடமும் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். ஆனால், தனிக்கட்சி ஆரம்பித்து தொண்டர்களை ஏமாற்றிவிட்டார் தினகரன். சசிகலா வெளியே வருவதற்கு தினகரன் என்ன முயற்சி எடுத்தார்? அதற்காக ஒரு மனுவாவது கொடுத்திருப்பாரா? அவ்வளவு ஏன்... சசிகலாவைப் பார்க்க சிறைக்கு வரும்போதுகூட வழக்கறிஞர்களையும் அரசு அதிகாரிகளையும் சந்தித்து ஆலோசனை கேட்டதில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், சசிகலா வெளியே வருவதில் தினகரனுக்கு விருப்பமில்லை" என்கிறார் புகழேந்தி.

புகழேந்தி
புகழேந்தி
க. தனசேகரன்

- இவரது பேட்டியை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > "சசிகலா வெளியே வருவதில் தினகரனுக்கு விருப்பமில்லை!" - உண்மையை உடைக்கும் பெங்களூரு புகழேந்தி

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |

அடுத்த கட்டுரைக்கு