Election bannerElection banner
Published:Updated:

தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி... அடம்பிடிக்கும் அன்புமணி! - சமாதான முயற்சியில் அ.தி.மு.க?

ராமதாஸ் - அன்புமணி
ராமதாஸ் - அன்புமணி

ராமதாஸுக்கும் உடல்நிலை சரியில்லை, அன்புமணியும் பிரசாரத்துக்கு வர விரும்பவில்லை என்ற நிலையில் பா.ம.க சார்பில் கூட்டணிக் கட்சிகளுடன் யார் பிரசாரத்துக்குச் செல்வார்கள் என்பதை அறிந்துகொள்ள தைலாபுரம் வட்டாராத்தில் விசாரணை செய்தோம்...

அ.தி.மு.க கூட்டணியில் பாம.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 23 சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தொகுதிப் பங்கீட்டில் பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் முழு திருப்தி இல்லை என்கின்றனர் தைலாபுரத்தினர். அதாவது பா.ம.க சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள். ஆனால், அது கிடைக்கவில்லை. அதேபோல திருத்தணி, திருவள்ளூர் தொகுதிகளைக் கேட்டதற்கு கும்மிடிப்பூண்டி, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்படி, கிட்டத்தட்ட நான்குக்கும் மேல் பா.ம.க கேட்காத தொகுதிகளை, அவர்களுக்குச் சம்பந்தமே இல்லாத தொகுதிகளை ஒதுக்கியதுதான் அந்த அதிருப்திக்குக் காரணம் என்கின்றனர் பா.ம.க-வினர். தொகுதிப் பங்கீட்டில் அதிருப்தி ஏற்பட்டதால் அன்புமணி ராமதாஸ் பிரசாரத்துக்கு வர முடியாது என தனது ஆதரவாளர்களிடம் பேசுவதுபோல அ.தி.மு.க-வுக்குத் தகவலைக் கடத்திவிட்டதாகத் தகவல் கிடைத்தது.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

ராமதாஸுக்கும் உடல்நிலை சரியில்லை, அன்புமணியும் பிரசாரத்துக்கு வர விரும்பவில்லை என்ற நிலையில் பா.ம.க சார்பில் கூட்டணிக் கட்சிகளுடன் யார் பிரசாரத்துக்குச் செல்வார்கள் என்பதை அறிந்துகொள்ள தைலாபுரம் வட்டாரத்தில் விசாரித்தோம்...

Election Updates: பென்னாகரத்தில் - ஜி.கே.மணி; ஆத்தூரில் - திலகபாமா: பா.ம.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு

``கூட்டணியில் எங்களுக்கு முதலில் 23 இடங்களை ஒதுக்குவதுபோல ஒதுக்கிவிட்டு, பா.ம.க கேட்ட எந்தத் தொகுதியையும் தரவில்லை. அதனால் மருத்துவரும், அன்புமணி ராமதாஸும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். வன்னியர்களின் வாக்குகளுக்காக நமக்குக் கூட்டணியில் முக்கியத்துவம் தருவதுபோலப் போக்குக்காட்டி அ.தி.மு.க-வினர் வீக்காக இருக்கும் தொகுதிகளை நம் தலையில் கட்டிவிட்டனர் என அன்புமணி கடும் மன உளைச்சலில் இருக்கிறார். வெளியில் பார்ப்பவர்களுக்கு பா.ம.க-வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கியிருப்பதுபோல இருக்கும். ஆனால், உண்மையில் நமக்கு அவர்கள் ஒதுக்கியது வெறும் 18 தொகுதிகள்தான்.

இப்படி நம்மை ஏமாற்றிவிட்டார்களே என அ.தி.மு.க தலைமை மீது கடும் கோபத்தில் இருக்கிறார் அன்புமணி. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மருத்துவர் ராமதாஸால் பரப்புரையில் பங்கேற்க முடியாது. கட்சி மீட்டிங்குகளேயே அவர் ஆன்லைனில்தான் நடத்திவருகிறார். அதனால் அன்புமணி ராமதாஸ்தான் கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் பரப்புரை செய்ய வேண்டும். ஆனால், தொகுதி ஒதுக்கீட்டில் தங்களை அ.தி.மு.க ஏமாற்றிவிட்டதாக அவர் நினைப்பதால் பா.ம.க போட்டியிடும் தொகுதிகளில் மட்டும்தான் பரப்புரை செய்வேன் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இதை அ.தி.மு.க தலைமையின் காதுக்கும் கொண்டு சேர்த்துவிட்டார்” என்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட அ.தி.மு.க தலைமை, அமைச்சர் சி.வி.சண்முகத்தையும், மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.முனுசாமியையும் அன்புமணி ராமதாஸுடன் சமாதானம் பேச தைலாபுரத்துக்கு அனுப்பியிருப்பதாகக் கூறுகின்றனர். சமாதானத்தில் உடன்பாடு ஏற்பட்டதா இல்லையா என்பது பரப்புரைகள் தீவிரமடையும்போதுதான் தெரியவரும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு