Published:Updated:

``கதை கேளு கதை கேளு..." மாற்றிப் பேசும் ராமதாஸ் - ஒரு ரீவைண்ட் பார்வை!

ராமதாஸ்
ராமதாஸ்

"தமிழக அரசியலில் எனக்குப் பொய் பேச வராது... எப்போதும் உண்மையைத்தான் பேசுவேன்!" என்கிறார் ராமதாஸ். 'பொய் சொல்லமாட்டார். மாற்றி வேண்டுமானால் பேசுவார்' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

அப்போ:

"சிகரெட் பிடிக்கவும் தண்ணியடிக்கவும் ரசிகர்களுக்கு ரஜினி கற்றுக் கொடுத்திருக்கிறார்."

இப்போ:

"கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு விருது வழங்கப்படவிருப்பதில் மகிழ்ச்சி. திரைத்துறையில் மேலும் சாதிக்க வாழ்த்துகள்!"

*

ராமதாஸ்
ராமதாஸ்

அப்போ:

"தந்தை பெரியாருக்குப் பிறகு... அண்ணல் அம்பேத்கருக்குப் பிறகு நமக்குக் கிடைத்த நல்ல தலைவர் கருணாநிதி!"

"அற்புதமான காரியத்தைக் கருணாநிதி செய்திருக்கிறார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற சட்டம்தான் அது. அப்பொழுது நான் டெல்லியில் இருந்தேன். காலை 7 மணிக்கு கருணாநிதியைத் தொடர்பு கொண்டு பெரியாரின் நெஞ்சிலே தைத்திருந்த முள்ளை நீக்கிவிட்டீர்களே என்று நான் அவரைப் பாராட்டினேன்!"

இப்போ:

"கருணாநிதிமீது இந்திய அரசு ஊழலுக்காக ஒரு கமிஷனே போட்டது."

"கதை கேளு கதை கேளு... சட்டப்பேரவையில் தி.மு.க-வும் கருணாநிதியும் மாண்பை மீறிய கதைகளைச் சொல்லவா?"

*

அப்போ:

"எங்களை ஜெயலலிதா மரியாதையாக நடத்தவில்லை. தன்மானத்தை இழந்துவிட்டு, அ.தி.மு.க கூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை'' (2001 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகியபோது)

இப்போ:

"ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க இரண்டாக உடைந்ததற்குக் கொள்கை மாறுபாடுகள் அல்ல, பதவிகளைப் பயன்படுத்திக் கொள்ளையடிப்பதில் ஏற்பட்ட போட்டிதான் காரணம்!''

(`கழகத்தின் கதை-அ.தி.மு.க தொடக்கம் முதல் இன்றுவரை' என்று அவர் எழுதிய புத்தகத்தில்தான் அ.தி.மு.க-வை இப்படிக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் ராமதாஸ்.)

ராமதாஸ்
ராமதாஸ்

- "தமிழக அரசியலில் எனக்குப் பொய் பேச வராது... எப்போதும் உண்மையைத்தான் பேசுவேன்!"

அண்மையில் அவர் எழுதிய 'சுக்கா மிளகா சமூகநீதி?' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இப்படித் திருவாய் மலர்ந்தருளினார். 'பொய் சொல்லமாட்டார். மாற்றி வேண்டுமானால் பேசுவார்' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அவர் இதற்கு முன்பு எப்படியெல்லாம் மாற்றிப்பேசியிருக்கிறார் என ரீவைண்ட் பண்ணிப் பார்க்கலாமா?

> முழுமையான பார்வையை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > அப்போ... இப்போ... அப்பப்போ! - ராமதாஸ் டைம்லைன் https://bit.ly/3cpLpZs

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு