Published:Updated:

``ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை புரொஃபஷனலாக இல்லை..!" - சொல்கிறார் அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

``அ.தி.மு.க-வில் 62 எம்.எல்.ஏ-க்கள் ஒரு பிரிவிலும், 4 எம்.எல்.ஏ-க்கள் ஒரு பிரிவிலும் இருக்கிறார்கள். எண்ணிக்கைக்கு ஏற்ப சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டும்." - அன்புமணி ராமதாஸ்

``ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை புரொஃபஷனலாக இல்லை..!" - சொல்கிறார் அன்புமணி ராமதாஸ்

``அ.தி.மு.க-வில் 62 எம்.எல்.ஏ-க்கள் ஒரு பிரிவிலும், 4 எம்.எல்.ஏ-க்கள் ஒரு பிரிவிலும் இருக்கிறார்கள். எண்ணிக்கைக்கு ஏற்ப சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டும்." - அன்புமணி ராமதாஸ்

Published:Updated:
அன்புமணி ராமதாஸ்

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், ``ஆறுமுகசாமி ஆணையத்தைவைத்து அரசியல் செய்யலாம். ஆனால், சட்டமன்றத்தில் எடுபடுமா என்பது கேள்விதான். அறிக்கை புரொஃபஷனலாக இல்லை. டெக்னிக்கலாக நிறைய விஷயங்கள் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் கூறப்படவில்லை. அ.தி.மு.க-வில் 62 எம்.எல்.ஏ-க்கள் ஒரு பிரிவிலும், 4 எம்.எல்.ஏ-க்கள் ஒரு பிரிவிலும் இருக்கிறார்கள். எண்ணிக்கைக்கு ஏற்ப சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.

அன்புமணி
அன்புமணி

நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 17 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் கூடுதல் இழப்பீடு கொடுக்க வேண்டும் என அறிக்கையில் கூறப்படுகிறது. அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களெல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் . கண்மூடித்தனமாக மனித உயிர்களைச் சுட்டுக் கொல்வது என்பது உச்சகட்ட கொடூரம். இதிலிருந்து தமிழக காவல்துறை பாடம் கற்று, இந்தச் சம்பவம்போல் இனி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தீபாவளிப் பண்டிகை அன்று டாஸ்மாக் கடைகளைத் திறந்துவைத்து இலக்கு நிர்ணயிப்பது என்பது தவறான போக்கு. சமீபத்தில் அரசு வெளியிட்டிருக்கும் தகவல்படி 35 விழுக்காடு டாஸ்மாக் மூலம் வருமானம் வந்துகொண்டிருக்கிறது என்று தெரியவருகிறது. இதை நாட்டுக்கு வளர்ச்சி என்று எடுத்துக்கொள்ளக் கூடாது, வீழ்ச்சியாகத்தான் பார்க்க முடியும். டாஸ்மாக்குக்கு இலக்கு வைக்காமல் கல்விக்கு இலக்கு வையுங்கள் அல்லது குழந்தைகளுக்கான தடுப்பூசி இலக்கை 90 விழுக்காட்டிலிருந்து 100 விழுக்காடு செலுத்துவது என்று நிர்ணயுங்கள். ஆனால் குடிக்கு இலக்கு வைக்காதீர்கள். இது நாட்டுக்கு கேடு... தமிழக அரசுக்குக் கேடு. பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தை இரு மாநில அரசுகளும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு கேரள முதல்வருடன் பேசி, தீர்வுகாண வேண்டும்" என்றார்.