Published:Updated:

``ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலை; வந்தபின்பு வேறு நிலையா?" - அன்புமணி ராமதாஸ் காட்டம்

அன்புமணி ராமதாஸ்

"உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுவதே பா.ம.க தான்" என்கிறார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

``ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலை; வந்தபின்பு வேறு நிலையா?" - அன்புமணி ராமதாஸ் காட்டம்

"உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுவதே பா.ம.க தான்" என்கிறார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

Published:Updated:
அன்புமணி ராமதாஸ்

நேற்றைய தினம் பெரியார் சிலை மற்றும் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கான போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கு தைலாபுரம் மற்றும் திண்டிவனம் பகுதிகளில் மரியாதை செலுத்தி அடுத்தடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், ``இன்று தந்தை பெரியாரின் பிறந்தநாள் மற்றும் இட ஒதுக்கீட்டுக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த 21 தியாகிகளின் நினைவு நாள். வன்னியர் சங்கம் சார்பில் நடத்த ஒரு வாரகால சாலை மறியல் போராட்டத்தில், முதல் நாளன்றே 21 உயிர்களையும் காவல்துறை கொன்று குவித்தார்கள். அதன்பின், தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான உயிர்களை தியாகம் செய்து... பாட்டாளிகளுக்கும், தமிழர்களுக்கும் சமூக நீதியை பெற்றுத் தந்திருக்கிறார் மருத்துவர் அய்யா. வன்னியர் சமூகத்திற்கான 10.5% இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்தது. அதன்பிறகு, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை நேரிலே பலமுறை சந்தித்திருக்கிறோம். `10.5% இட ஒதுக்கீட்டை நிச்சயமாக வன்னியர் சமூகத்திற்காக கொடுப்பேன்' என்று சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உறுதி கொடுத்திருக்கிறார்.

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த  அன்புமணி.
பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த அன்புமணி.

அதை விரைவில் முதலமைச்சர் அவர்கள் சட்டமாக கொண்டுவர வேண்டும் என்பதே தமிழகத்தில் அனைத்து பாட்டாளிகளின் எதிர்பார்ப்பு. 10.5% இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி பிரச்னை. இது ஏதோ ஒரு சாதி, மதம், மொழிக்கோ உள்ள பிரச்னை அல்ல. தமிழகத்திலே, இருபெரும் சமுதாயங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. ஒன்று தாழ்த்தப்பட்ட சமுதாயம், மற்றொன்று வன்னிய சமுதாயம். இந்த இரு சமுதாய மக்கள் மட்டுமே தமிழகத்தில் 40% வரை இருக்கிறார்கள். இம்மக்கள் முன்னேறினால் தமிழ்நாடும் முன்னேறும். அந்த அடிப்படையிலேயே, இது எங்களுடைய நியாயமான கோரிக்கை. இது யாருக்கும் எதிரானது கிடையாது. மற்றவர்களின் பங்கை நாங்கள் பிடுங்கவில்லை, எங்களுடைய பங்கை தான் நாங்கள் நியாயமாக கேட்கிறோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்னும் சொல்லப்போனால் 10.5% இட ஒதுக்கீடு என்பது மிகவும் குறைவானதே. 10.5% இட ஒதுக்கீட்டிற்கும் சாதிவாரியான கணக்கெடுப்புக்கும் சம்பந்தமில்லை. சாதிவாரியான கணக்கெடுப்பு என்பது தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக உள்ள 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காக. மின்சாரக் கட்டண உயர்வை யாராவது ஏற்றுக்கொள்வார்களா? இதற்கு ஒரு கண்துடைப்பாக கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினார்கள். அதை எல்லோரும் எதிர்த்தார்கள். கொரோனா தொற்று பரவல் காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டு... வேலை வாய்ப்பு போய்விட்டது, ஊதியம் குறைந்துவிட்டது, சிலர் வேலையைவிட்டு நீக்கப்பட்டார்கள், வீட்டு வாடகை கொடுக்க முடியாத சூழல் நிலவும் இந்த சமயத்தில்... மின்சாரக் கட்டணத்தை சில இடங்களில் இரண்டிலிருந்து மூன்று மடங்கு வரை உயர்த்தியிருக்கிறார்கள். இவர்கள் சொல்லும் 100 யூனிட் கணக்கில், நாற்பது, ஐம்பது லட்சம் பேர்தான் இருக்கிறார்கள். இவர்கள் கூறும் கணக்கு சரியல்ல. அமைச்சர் அவர்கள் உண்மையை சொல்லவேண்டும்!

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

'இந்தியாவிலேயே குறைவான மின்கட்டணம் தமிழகத்தில்தான்' என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம். அமைச்சர் அவர்கள் சொல்லும் காரணம் எல்லாம் வேடிக்கையானது. 1.5 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரக் கட்டண உயர்வுக்கு இவர்கள்தான் போராடினார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலை, வந்தபின்பு ஒரு நிலையா..? இது ஒரு சரியான நிர்வாகம் கிடையாது. மின்கட்டணம், போக்குவரத்து கட்டணம், பால் விலை ஏற்றம், வீ்ட்டு வரி உயர்வு என எந்த வகையிலும் மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தினால் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். அவற்றை குறைக்கவில்லை என்றால் பா.ம.க கடுமையான போராட்டங்களை நடத்தும். 

எவ்வளவோ தேர்தல் அறிக்கைகளில் கூறியதை இவர்கள் எதுவும் செய்யவே இல்லை. அதனால் மக்களிடம் அரசின்மீது நம்பிக்கையில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் தேர்தல் நேரத்தில் கூறிய `நீட் ரத்து' உள்ளிட்ட பலவற்றை செய்யாமல் இருப்பதுதான். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்களா? என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். இதுவரையில் அவற்றை செய்திருக்க வேண்டும், ஆனால் செய்யவில்லை. தளவானூர், எல்லீஸ் சத்திரம் தடுப்பணைகள் உடைந்த பின்னரும் இதுவரை சரி செய்யப்படாமல் இருக்கிறது. அவை சரி செய்யப்பட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது. நான் கூறுவதும் இதுதான், நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இப்போது வெள்ளத்தை சந்திக்கிறோம், வரும் காலங்களில் வறட்சி ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, இதுபோன்ற தடுப்பணைகளை கட்டினால் வரும் தண்ணீர் அப்பகுதியில் தேக்கமடைந்து அதன்பின்னரே கடலுக்குச் செல்லும்.

அன்புமணி ராமதாஸ் பேட்டி - திண்டிவனம்
அன்புமணி ராமதாஸ் பேட்டி - திண்டிவனம்

ஆகவே, இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். மணல் குவாரிகளுக்கு நீதிமன்றம் சொல்லும் அளவு சுமர் 3 முதல் 4.30 அடி ஆழம் மட்டும்தான். ஆனால் இவர்கள் 60 முதல் 80 அடி வரையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக மணலை எடுக்கக்கூடாது. ஒரு நாட்டின் இதயமே மணல்தான், அதை எடுத்துவிட்டால் எப்படி? பாலாறு, கொசஸ்தலை, காவேரியில் நிறைய பார்த்துவிட்டோம். இதெல்லாம் தவறான போக்கு. 'தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் மூடப்பட வேண்டும்' என்று நீதிமன்றத்தில் நான் போட்ட பொதுநல வழக்கும்கூட 5 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் போதைப்பொருட்கள் சொல்வதற்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கிறது. ஆனால், அது போதுமானதல்ல. அவர்கள் எடுக்கும் நடவடிக்கை 5% கூட கிடையாது. இதற்காக அதீத வேகம் காட்ட வேண்டும். அடுத்த தலைமுறையை காக்க வேண்டுமென்றால், இவற்றை தடுக்க வேண்டும். விற்பவர்களை காட்டிலும் அதனை சப்ளை சொல்பவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆ.ராசா பேசியது அவருடைய கருத்து.

ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை
ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை

முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை என்பது.... இவர்கள் ஆட்சிக்கு வந்தால், அவர்களை சோதனை செய்வது; அவர்கள் ஆட்சிக்கு வந்தால், இவர்களை சோதனை செய்வதுதான். அதைவிட அந்த வழக்கு என்ன ஆகிறது என்பதுதான் முக்கியமானது. அதன்பின், அந்த வழக்கின் நிலை என்ன என்பதே தெரியாமல் போகிறது. இதுபோன்ற சோதனைகள் இன்று அரசியல் ஆகிவிட்டது. அ.தி.மு.க எதிர்க்கட்சியாக செயல்படவில்லை, பா.ஜ.க தான் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது என்று அண்ணாமலை கூறுவது அவருடைய கருத்து. அதில் நான் சொல்வதற்கு ஏதுமில்லை. அவர் சொல்வதற்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஆனால், உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுவதே பா.ம.க தான்" என்றார்.