Published:Updated:

``சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும்"- அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

``உயிர்களை பலிவாங்கும் சாலையாக மாறியிருக்கும் இந்த தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்த, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது." - அன்புமணி

``சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும்"- அன்புமணி ராமதாஸ்

``உயிர்களை பலிவாங்கும் சாலையாக மாறியிருக்கும் இந்த தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்த, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது." - அன்புமணி

Published:Updated:
அன்புமணி ராமதாஸ்

பா.ம.க தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகரித்துவரும் சாலை விபத்துகள் காரணமாக, சென்னை - திருச்சி சாலையை எட்டுவழி விரைவு சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

அந்த அறிக்கையில், ``உயிர்களை பலிவாங்கும் சாலையாக மாறியிருக்கும் இந்த தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்த, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. சென்னையிலிருந்து திருச்சி வரையிலான 334 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 2018 ஜனவரி முதல் 2022 ஜூன் மாதம் வரையிலான நான்கரை ஆண்டுகளில் நிகழ்ந்த சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த விவரங்களைத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் பெற்றிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற மொத்தம் 6,131 சாலை விபத்துகளில் 2,076 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 7,733 பேர் காயமடைந்திருக்கின்றனர்.

சாலை விபத்துகள்
சாலை விபத்துகள்

இந்த விபத்துகளுக்கு முக்கியக் காரணங்கள் சாலைகளில் போதுமான அளவில் சேவை சாலைகள் இல்லாததும், சாலைகளின் வடிவமைப்பு மிகவும் மோசமாக இருப்பதும்தான். சென்னை-திருச்சி இடையிலான இப்போதைய நான்குவழிச் சாலை 2000-வது ஆண்டில் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் 22 ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்று வரை அந்தச் சாலை மேம்படுத்தப்பட வில்லை. சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை நான்குவழிச் சாலையாக உயர்த்தப்பட்டபோது, அது தினமும் 35 ஆயிரம் வாகனங்கள் பயணிக்கும் திறன்கொண்டதாக இருந்தது. அப்போது அதைவிடக் குறைவான வாகனங்கள்தான் அந்தச் சாலையில் பயணித்தன. ஆனால், இப்போது சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறைந்தபட்சம் 1.4 லட்சம் வாகனங்கள் தினமும் பயணிக்கின்றன. இது அதன் கொள்ளளவை விட நான்கு மடங்கு அதிகம்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை சராசரியாக ஒன்றரை லட்சம் என்ற அளவை அடுத்த சில மாதங்களில் எட்டக்கூடும். அத்தகைய சூழலில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். அப்படி ஒரு நிலை ஏற்படுவதை அரசு தடுக்க வேண்டும். அதற்காக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை எட்டுவழி விரைவுச் சாலையாக மேம்படுத்த வேண்டும். அந்தச் சாலையில் தேவையான இடங்களில் சேவை சாலைகளையும், குறிப்பிட்ட தொலைவுக்கு ஓரிடத்தில் வாகனங்கள் அந்த சாலையில் இணையவும், வெளியேறவும் வசதிகள் செய்யப்பட வேண்டும். இதற்கான திட்டங்களை வகுத்து விரைவாக சாலை கட்டுமானப் பணிகளைத் தொடங்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார்.