Published:Updated:

``அக்னிபத் திட்டம் தேவையில்லாதது; முழு ஈடுபாடு இல்லாமல் போய்விடும்” - அன்புமணி ராமதாஸ்

அன்புமணி - மோடி

``மத்திய அரசின் அக்னிபத் தேவையில்லாத திட்டம். ராணுவத்தில் ஈடுபடுபவர்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும். நான்கு ஆண்டுகள்தான் வேலை என்பதால் ராணுவத்தில் முழுமையாக ஈடுபட மாட்டார்கள்.” - அன்புமணி ராமதாஸ்

``அக்னிபத் திட்டம் தேவையில்லாதது; முழு ஈடுபாடு இல்லாமல் போய்விடும்” - அன்புமணி ராமதாஸ்

``மத்திய அரசின் அக்னிபத் தேவையில்லாத திட்டம். ராணுவத்தில் ஈடுபடுபவர்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும். நான்கு ஆண்டுகள்தான் வேலை என்பதால் ராணுவத்தில் முழுமையாக ஈடுபட மாட்டார்கள்.” - அன்புமணி ராமதாஸ்

Published:Updated:
அன்புமணி - மோடி

அரியலூர் மாவட்டம் கீழக்குடியிருப்பு பகுதியில் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு, மீண்டும் நிலத்தை மீட்டுத் தந்ததற்கான பாராட்டுவிழாவில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ். ``ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரித் திட்டத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு, நிலத்தை அரசின் உத்தரவுக்கு இணங்க மீண்டும் விவசாயிகளிடம் விரைவில் வழங்க வேண்டும். அவர்களுக்கான அடிப்படை வசதிகள், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிலம் வைத்திருந்ததற்கான இழப்பீடு ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பா.ம.க தலைவராக அன்புமணி ராமதாஸ்
பா.ம.க தலைவராக அன்புமணி ராமதாஸ்

அரசு சிமென்ட் ஆலையால் ஏற்படும் விபத்துகள், சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2026 தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைமையில் ஆட்சி அமையும். அதற்கான வியூகம் 2024-ல் எடுக்கப்படும். மத்திய அரசின் அக்னிபத் தேவையில்லாத திட்டம். ராணுவத்தில் ஈடுபடுபவர்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும். நான்கு ஆண்டுகள்தான் வேலை என்பதால் ராணுவத்தில் முழுமையாக ஈடுபட மாட்டார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனவே, ராணுவத்தில் சேர்பவர்கள் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்ய வேண்டுமென்றால் அவர்கள் முழுமையாக ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். எனவே இந்தத் திட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று கொரோனா பேரிடரைச் சிறப்பாகக் கையாண்டார்கள். ஆனால், அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாதது மக்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது.

ராமதாஸ் - அன்புமணி
ராமதாஸ் - அன்புமணி

நீட் தேர்வுக்காக 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும். நீட் விலக்கு என்பது சாத்தியமான ஒன்றுதான். எனவே மத்திய அரசு தமிழ்நாட்டுக்குக் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்காவது நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகள் உயிரிழப்பது தவிர்க்கப்பட வேண்டும். காவல் நிலையங்களில் வெளியில் மட்டுமல்லாமல் காவல் நிலையங்களுக்கு உள்ளேயும் சிசிடிவி கேமரா பொருத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வகையான உயிரிழப்புக்குக் காரணமான காவலர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவது வரவேற்கத்தக்கது.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளால், பல்வேறு நோய்கள் மற்றும் சாலை விபத்தால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுவருவதைக் கருத்தில்கொண்டு டாஸ்மாக் கடைகளை மூட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்

தொடர்ந்து, ``எண்ணிக்கையில் வேண்டுமென்றால் அ.தி.மு.க எதிர்க்கட்சியாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கான தேவையான டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும், ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து போராடி, அதில் வெற்றிபெற்றுவருவது பாமக-தான்.

அன்புமணி
அன்புமணி

எனவே, பாமக-தான் எதிரிக் கட்சியாக இல்லாமல் உண்மையான எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறது” என்றார். மேலும் அதிமுக-வில் நிலவும் உட்கட்சிப்பூசல், சசிகலா குறித்துக் கேட்டபோது, ``அது உட்கட்சிப் பிரச்னை அதற்கு நான் கருத்து தெரிவிப்பது சரியானதல்ல” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism