Published:Updated:

நீட் விலக்கு, மதுவிலக்கு... பாமக சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

அன்புமணி ராமதாஸ்

பா.ம.க சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் நீட் விலக்கு, மதுவிலக்கு உட்பட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நீட் விலக்கு, மதுவிலக்கு... பாமக சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

பா.ம.க சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் நீட் விலக்கு, மதுவிலக்கு உட்பட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Published:Updated:
அன்புமணி ராமதாஸ்

பா.ம.க சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம், சென்னை திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில், இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். ஜி.கே.மணி உட்பட பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு விருந்தினர்கள் என அனைவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஜி.கே.மணி தலைவராக இருந்த நிலையில், கட்சியின் புதிய தலைவராக, இளைஞரணித் தலைவராக இருந்த அன்புமணி பா.ம.க-வின் தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணியை, ராமதாஸ் கட்டித் தழுவி வாழ்த்துகள் கூறினார். இந்தச் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், "தமிழ்நாட்டில் கல்வி - வேலைவாய்ப்புக்கான வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை, சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

அன்புமணி - ராமதாஸ்
அன்புமணி - ராமதாஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழ்நாட்டுக்கான நீட் விலக்கு சட்டத்துக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை அடுத்த இரு மாதங்களில் பெறத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயிர்க்கொல்லியாக மாறிவரும் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்யத் தமிழக அரசு உடனடியாகச் சட்டம் இயற்ற வேண்டும்.

உடனடியாக மதுவிலக்கைச் செயல்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணிகள் முழுவதையும், தனியார் வேலைவாய்ப்புகளில் 80 விழுக்காடும் தமிழர்களுக்கே வழங்கப்படுவதை உறுதி செய்யச் சட்டம் இயற்ற வேண்டும்.

சமையல் எரிவாயு விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மானியம் வழங்க வேண்டும்.

சென்னையில் மக்களின் வாழ்வுரிமையைக் காக்கத் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த பா.ம.க நிர்வாகி கண்ணையனுக்கு வீர வணக்கம்.

வாழ வழியில்லாத மக்களைக் குடியிருக்கும் பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும்" உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism