Published:Updated:

உடன்பிறப்பே... பா.ம.க உடன்பிறப்பே!

மயிலம் முருகன் கோயிலில்...
பிரீமியம் ஸ்டோரி
மயிலம் முருகன் கோயிலில்...

என்னுடைய தொகுதியில் தாலுகா அலுவலகமே கிடையாது. செஞ்சி, திண்டிவனம் தாலுகாக்களுக்குத்தான் தொகுதி மக்கள் செல்ல வேண்டும்.

உடன்பிறப்பே... பா.ம.க உடன்பிறப்பே!

என்னுடைய தொகுதியில் தாலுகா அலுவலகமே கிடையாது. செஞ்சி, திண்டிவனம் தாலுகாக்களுக்குத்தான் தொகுதி மக்கள் செல்ல வேண்டும்.

Published:Updated:
மயிலம் முருகன் கோயிலில்...
பிரீமியம் ஸ்டோரி
மயிலம் முருகன் கோயிலில்...

‘பா.ம.க தலைமையில் 2026-ல் தமிழ்நாட்டில் ஆட்சி’ என அன்புமணி ராமதாஸ் முழங்கிவரும் வேளையில், பா.ம.க எம்.எல்.ஏ சிவக்குமாரோ ‘தி.மு.க அரசின் புகழ் பாடிவருகிறார்’ என்று குமுறுகிறார்கள் பாட்டாளிச் சொந்தங்கள்.

பா.ம.க நிறுவனர் ராமதாஸின், தைலாபுரம் தோட்டத்துக்குப் பக்கத்திலேயே இருக்கிறது மயிலம் தொகுதி. இங்கு எம்.எல்.ஏ-வாக இருப்பவர் பா.ம.க-வைச் சேர்ந்த சிவக்குமார். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வான இவர், முதலமைச்சர் ஸ்டாலினைத் தொடர்ச்சியாகப் புகழ்ந்து பேசுவதும், அமைச்சர்களுடன் நிழலாகப் பயணிப்பதும் பா.ம.க தொண்டர்களை கொதிப்படையச் செய்திருக்கிறது. அண்மையில், அமைச்சர் சேகர் பாபுவை, மயிலம் முருகன் கோயிலுக்கு வரவேற்பது தொடர்பாக எம்.எல்.ஏ தரப்பு நபருடன், பா.ம.க நிர்வாகி ஒருவர் பேசும் ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவில், “சேகர் பாபுவை தி.மு.க-வினர் வரவேற்கப்போறாங்க, சரி... நம்ம எம்.எல்.ஏ எதுக்குப் போறாரு.. பேசாம அவர் கார்ல தி.மு.க கொடியைக் கட்டிக்கச் சொல்லு. நான் என்ன தி.மு.க-வா... நான் வரலை...” என வெளிப்படையாகவே ஆதங்கத்தை கொட்டித் தீர்த்திருக்கிறார் அந்த நிர்வாகி.

உடன்பிறப்பே... பா.ம.க உடன்பிறப்பே!

இது பற்றி பா.ம.க-வைச் சேர்ந்த சிலரிடம் பேச்சுக்கொடுத்தோம். “பா.ம.க உடன்பிறப்பு என்று சொல்லுமளவுக்கு, எப்போதும் தி.மு.க அமைச்சர் மஸ்தான் பின்னாலேயே சென்றுகொண்டிருக்கிறார் சிவக்குமார். அண்மையில், ‘100 ஆண்டுகளில் செய்யாத சாதனையை முதலமைச்சர் ஸ்டாலின் ஓராண்டில் செய்திருக்கிறார்’ என அரசு நிகழ்ச்சியொன்றில் புகழ்ந்து பேசியவர், விழுப்புரத்திலும் அவ்வாறே புகழ் பாடினார். ஆனால், அய்யா, சின்னய்யா பற்றி அவர் எந்த மேடையிலும் பேசுவது கிடையாது. பா.ம.க தலைவராக அன்புமணி பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாக ‘போதைப்பொருள்களை தமிழ்நாடு அரசு தடை செய்யக் கோரி’ மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. அன்றைய தினம்கூட தி.மு.க அமைச்சர்கள் தலைமையில் நடந்த அரசு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டார். பின்னர் மஸ்தானிடம் அனுமதி பெற்று வந்து, பாதியில் எங்களோடு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இவருடைய செயல்பாடுகள் எல்லாம் அய்யாவுக்குத் தெரியுமா என்றே தெரியவில்லை” என்றனர் ஆதங்கத்தோடு.

சிவக்குமார்
சிவக்குமார்

குற்றச்சாட்டுகள் தொடர்பாக எம்.எல்.ஏ சிவக்குமாரிடம் பேசியபோது, “என்னுடைய தொகுதியில் தாலுகா அலுவலகமே கிடையாது. செஞ்சி, திண்டிவனம் தாலுகாக்களுக்குத்தான் தொகுதி மக்கள் செல்ல வேண்டும். என் தொகுதி செஞ்சி, திண்டிவனம் தாலுகாக்களில் ஓர் அங்கமாக இருப்பதால், அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்கிறேன். மற்றபடி என்னுடைய தொகுதி சாராத நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொள்வதில்லை. அரசு நிகழ்ச்சிகளில் நான் தொடர்ச்சியாகக் கலந்து கொள்வதற்கும், இணக்கமாகச் செயல்படுவதற்கும் காரணம்... நான் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக இருந்தாலும், என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தையும் பெற்றுத்தர வேண்டும் என்பதால்தான். என்னை வெட்டிப் போட்டாலும் சரி, தி.மு.க-வுக்கு நான் போக மாட்டேன். கட்சி மாற வாய்ப்பே கிடையாது” என்றார்.

நம்புங்க மக்களே!