Election bannerElection banner
Published:Updated:

எதிர்பார்த்த தொகுதிகளில் ஏமாற்றம்?! - ஆறு இடங்களில் மட்டுமே பா.ம.க முன்னிலை

பா.ம.க
பா.ம.க

தர்மபுரி மற்றும் பென்னாகரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்களை விட வாக்கு வித்தியாசமானது அதிகமாக இருக்கிறது.

அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில், 18 தொகுதிகளில் தி.மு.கவை எதிர்த்தும் 3 தொகுதிகளில் காங்கிரஸை எதிர்த்தும் தலா ஒரு தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்தும் போட்டியிட்டது. அவற்றில் தற்போது வரை, தர்மபுரி, காஞ்சிபுரம், மயிலம், நெய்வேலி, பென்னாகரம், சேலம் மேற்கு ஆகிய தொகுதிகளில் பா.ம.க முன்னிலை வகித்து வருகிறது. இந்த ஆறு தொகுதிகளில், தர்மபுரி மற்றும் பென்னாகரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்களை விட வாக்கு வித்தியாசமானது அதிகமாக இருக்கிறது.

பா.ம.க தொகுதிப் பட்டியல்
பா.ம.க தொகுதிப் பட்டியல்

வன்னியர்களுக்கான 10.5 சதவிகித தனி இட ஒதுக்கீடானது ஓரளவுக்கு அ.தி.மு.கவுக்கும் பா.ம.கவுக்கும் கைகொடுக்கவே செய்திருக்கிறது. எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி மாபெரும் வெற்றியைப் பெற அங்கே கணிசமாக உள்ள பா.ம.க வாக்குகளே காரணம் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனாலும், பா.ம.கவின் கோட்டையாகப் பார்க்கப்படும், ஜெயங்கொண்டம், மேட்டூர், சோளிங்கர், ஆகிய தொகுதிகளில் பா.ம.க பின்னடைவைச் சந்தித்திருப்பது அந்தக் கட்சியினர் மத்தியிலேயே மிகப்பெரிய சோர்வைக் கொடுத்திருக்கிறது.

4.30 மணி வரையிலான வாக்கு எண்ணிக்கை நிலவரங்களின் அடிப்படையில் இது எழுதப்பட்டுள்ளது. அடுத்தடுத்த கட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளிவரும் போது இந்த முடிவுகளில் மாற்றம் இருக்கலாம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு