Published:Updated:

``மின்சார மீட்டருக்கு வாடகை வசூலிக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!"-அன்புமணி கோரிக்கை

பாமக தலைவர் அன்புமணி

``அத்தியாவசியத் தேவைகளுக்கே மக்கள் பணமில்லாமல் தவிக்கும் நிலையில், அவர்களால் மின்சார மீட்டருக்கு வாடகை செலுத்த முடியாது." - அன்புமணி ராமதாஸ்

``மின்சார மீட்டருக்கு வாடகை வசூலிக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!"-அன்புமணி கோரிக்கை

``அத்தியாவசியத் தேவைகளுக்கே மக்கள் பணமில்லாமல் தவிக்கும் நிலையில், அவர்களால் மின்சார மீட்டருக்கு வாடகை செலுத்த முடியாது." - அன்புமணி ராமதாஸ்

Published:Updated:
பாமக தலைவர் அன்புமணி

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் கொண்டுவரப்படவிருக்கும் மின்சாரக் கட்டண உயர்வு குறித்த அறிக்கையை கடந்த வாரம் வெளியிட்டிருந்தார். அதில் புதிய மின்சாரக் கட்டண உயர்வு குறித்து காரணங்களுடன் அவர் விளக்கமளித்திருந்தார்.

இந்த நிலையில், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், மின்சார மீட்டருக்கு வாடகை வசூலிக்கும் திட்டத்துக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

அதில், ``மின்சாரக் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்திருக்கும் தமிழ்நாடு அரசு, அதனுடன் மின்சார மீட்டருக்கு வாடகை வசூலிக்கவும் தீர்மானித்திருக்கிறது. நகர்ப்புற வீடுகளில் ஏற்கெனவே பொருத்தப்பட்டிருக்கும் டிஜிட்டல் மீட்டர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ.120-ம், இனி பொருத்தப்படவிருக்கும் ஸ்மார்ட் மீட்டர்களுக்கு ரூ.350-ம் வாடகை வசூலிக்கப்படவிருக்கிறது. இது சாதாரண மக்கள் மீதான பொருளாதாரத் தாக்குதல். மின்சாரக் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பைக் கடந்த 18-ம் தேதி வெளியிட்ட மின்துறை அமைச்சர், நுகர்வோரிடம் இதுவரை வசூலிக்கப்பட்டுவந்த ரூ.50 வரையிலான நிலைக்கட்டணம் ரத்துசெய்யப்படுவதாக அறிவித்தார். ரூ.50 கட்டணத்தை ரத்துசெய்ததைக் கொண்டாட்டமாக அறிவித்துவிட்டு, யாருக்கும் தெரியாமல் ரூ.350 கட்டணத்தை மக்கள்மீது திணிப்பது நியாயமல்ல.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாமக தலைவர் அன்புமணி
பாமக தலைவர் அன்புமணி

இன்றைய சூழலில் ஒரு டிஜிட்டல் மீட்டரின் விலை ரூ.749 முதல் ரூ.2,000 தான். அதற்கு இரு மாதங்களுக்கு ரூ.120 வாடகை என்பது அநீதி. அதேபோல், ஒரு ஸ்மார்ட் மீட்டரின் இன்றைய விலை ரூ.6,000 முதல் ரூ.7,500-தான். இந்தியாவுக்கு குறைந்தது 30 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் தேவைப்படும் நிலையில், அவற்றை அதிக அளவில் தயாரிக்கும்போது, ஒரு மீட்டரின் விற்பனை விலை ரூ.2,000 முதல் ரூ.3,000 என்ற அளவுக்குக் குறையும். அவ்வாறு இருக்கும்போது அதற்காக இரு மாதங்களுக்கு ரூ.350 வாடகை வசூலிப்பது எந்த வகையில் நியாயம்... தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி தமிழ்நாட்டில் இரு மாதங்களுக்கு ரூ.350-க்கும் குறைவான மின் கட்டணம் (250 யூனிட்டுகள்) செலுத்தும் குடும்பங்களின் மொத்த எண்ணிக்கை 1.8 கோடி.

தமிழ்நாடு மின்சார வாரியம்
தமிழ்நாடு மின்சார வாரியம்

இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான குடும்பங்கள் செலுத்தும் ஒட்டுமொத்த மின்கட்டணத்தைவிட, அதிக தொகையை மின்சார மீட்டருக்கான வாடகையாக மட்டும் வசூலிக்க நினைப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்... அத்தியாவசியத் தேவைகளுக்கே மக்கள் பணமில்லாமல் தவிக்கும் நிலையில், அவர்களால் மின்சார மீட்டருக்கு வாடகை செலுத்த முடியாது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நிலையைக் கருத்தில்கொண்டு மின்சார மீட்டருக்கு வாடகை வசூலிப்பது, மின்சாரக் கட்டணத்தை 52 சதவிகிதம் அளவுக்கு உயர்த்துவது போன்ற மக்களை பாதிக்கும் முடிவுகளைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.