Published:Updated:

‘சிலை, சமாதிக்கு ஆர்வம் காட்டுவார்கள்... மக்கள் திட்டங்களுக்கு பணமில்லை’ - குற்றம்சாட்டும் திலகபாமா

திலகபாமா
பிரீமியம் ஸ்டோரி
திலகபாமா

சாமானிய மக்களுக்கான திட்டங்களுக்குப் பணமில்லை என்று சொல்பவர்கள், இது போன்ற விஷயங்களுக்கு கோடிகளில் செலவிடுகிறார்கள்.

‘சிலை, சமாதிக்கு ஆர்வம் காட்டுவார்கள்... மக்கள் திட்டங்களுக்கு பணமில்லை’ - குற்றம்சாட்டும் திலகபாமா

சாமானிய மக்களுக்கான திட்டங்களுக்குப் பணமில்லை என்று சொல்பவர்கள், இது போன்ற விஷயங்களுக்கு கோடிகளில் செலவிடுகிறார்கள்.

Published:Updated:
திலகபாமா
பிரீமியம் ஸ்டோரி
திலகபாமா

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சூழல் சார்ந்த பிரச்னைகளில் ஆர்வம் காட்டிவருகிறது பா.ம.க. பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு, தருமபுரி காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றக் கோரி நடைப்பயணம், நெய்வேலி என்.எல்.சி-யை மூட வலியுறுத்தி பேரணி, கொசஸ்தலை ஆற்றில் புதிய அணைகள் கட்டும் ஆந்திர அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் என தீவிரமாகக் களத்தில் இறங்கியிருக்கிறது பா.ம.க. கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் பரந்தூர் மக்களைச் சந்தித்து விட்டு வந்த குழுவில் ஒருவரான திலகபாமாவைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

`` ‘மாற்றம்... முன்னேற்றம்...’ தானே பா.ம.க-வின் நிலைப்பாடு... அப்படியிருக்க, பரந்தூர் விமான நிலையம் கட்ட எதிர்ப்பு தெரிவிப்பவர்களைச் சந்திக்கக் காரணம்?

``வளர்ச்சிப் பணிகள் தேவை என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. சரிதான். அதேவேளையில், அது எப்படி செயல்படுத்தப்படுகிறது, மக்கள் கருத்துகள் கேட்கப்பட்டனவா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியதும் எங்கள் கடமையல்லவா! அரசாங்கம் திடீரென்றுதான் 4,000 ஏக்கரை கையகப்படுத்துவதாக அறிவிக்கிறது. கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்த ரொம்பவே யோசித்தார்கள். அரசியல் தலைவர்கள் யாரும் உள்ளே போகவே கூடாது என்று தடைகூட விதித்தார்கள். எனவேதான், தலைவர் அன்புமணி சொன்னபடி, ஏழு பேர்கொண்ட குழுவினர் பரந்தூருக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டோம்.”

‘சிலை, சமாதிக்கு ஆர்வம் காட்டுவார்கள்... மக்கள் திட்டங்களுக்கு பணமில்லை’ - குற்றம்சாட்டும் திலகபாமா

``நேரடி விசிட்டுக்குப் பிறகு, என்ன முடிவு எடுத்திருக்கிறது பா.ம.க?”

``அங்கே நடக்கிற எந்த விஷயமும் வெளியே தெரியாமல் அரசு அப்படியே அமுக்கப் பார்க்கிறது. மக்களே இல்லாமல் கருத்துக்கேட்புக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். அங்கே 12 கிராமங்களில் 144 தடை விதிக்கப்பட்டிருக்கிறது. `கூடுதலாகப் பணம் கேட்பதற்காக மக்கள் போராடுகிறார்கள்’ எனத் திட்டமிட்டு செய்திகளைப் பரப்புகிறது. எங்களிடம் இந்த விஷயங்களைச் சொல்லி அழுதவர்கள் பெரும்பாலும், தி.மு.க துண்டைக் கழுத்தில் அணிந்திருந்த ஆளுங்கட்சி அபிமானிகள்தான். அதிகாரிகளிடம் இது குறித்துப் பேசினால், `நீங்களே மாற்று இடங்களைச் சொல்லுங்கள்’ எனப் பொறுப்பில்லாமல் பேசுகிறார்கள். வணிக வளாகங்கள் இருந்தால் வேறு இடத்துக்கு மாற்றிக்கொள்ளலாம்; விவசாயத்தை எப்படி இடம் மாற்ற முடியும்... `விவசாய நிலங்களை எடுக்காமல் விமான நிலையம் கொண்டுவர வேண்டும்’ என்பதுதான் பா.ம.க-வின் நிலைப்பாடு. மீனம்பாக்கத்தைச் சுற்றியிருக்கிற கட்டடங்களை இடித்துவிட்டுக்கூட இன்னொரு விமான நிலையம் கொண்டுவரலாம்.’’

``மது ஒழிப்பு விஷயத்தில் பா.ம.க-விடம் முன்பிருந்த வேகம் இப்போது இல்லையே?’’

``நானே ஒரு டாஸ்மாக் கடையை, எங்கள் ஊரில் தீவைத்து எரித்தேன். ஆனால், அன்று மாலையே கடை மீண்டும் இயங்கியது. ஆனால், இன்னும் என்மீதான அந்த வழக்கு முடியவில்லை. ‘டாஸ்மாக் வருமானத்தில்தான் ஆசிரியர்களுக்குச் சம்பளமே கொடுக்கிறோம்’ என்று முட்டாள்தனமான வாதத்தை ஓர் அமைச்சரே முன்வைக்கும் இடத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.”

``2024 பாராளுமன்றத் தேர்தலில், தி.மு.க-வுடன் பா.ம.க கூட்டணி வைக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றனவே?’’

``தமிழ்நாட்டில் ஜோசியக்காரர்கள் அதிகமாகிவிட்டார்கள். அவர்கள் இஷ்டத்துக்கு ஒரு கருத்தைச் சொல்கிறார்கள். அப்போதைய அரசியல் சூழலைப் பொறுத்துத்தான் அதை முடிவுசெய்ய முடியும். இப்போதைய சூழலில் எங்கள் சொந்தக்காலில் வலுவாக நிற்பதற்கான முயற்சிகளைத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறோம். இப்போது இது குறித்து, கேள்வி கேட்டுவிட்டார்களே என்பதற்காக அலட்சியமாக பதில் சொல்வதற்கு நான் செல்லூர் ராஜூவோ, கே.டி.ராஜேந்திர பாலாஜியோ அல்ல.’’

``சாதிரீதியான விமர்சனங்களைச் சரிசெய்வதற்கு என்ன மாதிரியான முன்னெடுப்புகளைச் செய்துவருகிறது பா.ம.க?’’

``சாதிரீதியாக எங்கள்மீது சுமத்தப்படுவது திட்டமிட்ட அவதூறு. ஒட்டுமொத்த தமிழர்களுக்கான, எல்லா சமுதாயங்களுக்குமான பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்கிற கட்சியாகத்தான் பா.ம.க இருக்கிறது. தமிழ்நாட்டின் இரண்டு பெரிய கட்சிகளும், மூன்றாவது ஒரு ஆள் வருவதை விரும்பவில்லை. அவர்களின் அவதூறுதான் இது.”

``உங்கள் கட்சித் தலைவரே, ‘சாதியால் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன’ என வெளிப்படையாகப் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுகிறாரே?”

``பெரும்பான்மைச் சமூகமான வன்னியர் சமூகத்தின் சிக்கல்களை இதுவரை யாரும் பேசியதில்லை. அதேவேளையில் ஒட்டுமொத்த சமுதாயங்களுக்கான பிரச்னைகளை பா.ம.க எப்போதெல்லாம் பேசத் தொடங்குகிறதோ, அப்போதெல்லாம் வன்னிய சமூகத்தை மறந்துவிட்டோம் என்கிற அவதூறு திட்டமிட்டு திராவிட இயக்கங்களால் பரப்பப்பட்டிருக்கிறது. அதை எதிர்கொள்ளும்போது இப்படிப் பேசவேண்டிய தேவையும் இருக்கிறது. எதிராளியின் ஆயுதத்தை நாங்களும் கையிலெடுக்கவேண்டிய சூழல் இருக்கிறது.’’

``அதற்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?’’

``வலுவான, அறிவார்ந்த ஒரு தலைவராக அன்புமணி இருப்பது அவர்களுக்கு பயம். தி.மு.க-விலும் அறிவார்ந்த தலைவர்கள் இருந்தாலும் ஊழல் புகார்களுக்குள், கமிஷன் புகார்களுக்குள் சிக்காதவர்கள் யாருமில்லையே! எங்களைப்போல் ஆக்கபூர்வமான அரசியலை தி.மு.க முன்னெடுப்பதில்லை. பேனா, சிலை வைப்பது, சமாதிகள் கட்டுவது போன்ற விஷயங்களில்தான் கவனத்தைச் செலுத்துகிறார்கள். சாமானிய மக்களுக்கான திட்டங்களுக்குப் பணமில்லை என்று சொல்பவர்கள், இது போன்ற விஷயங்களுக்கு கோடிகளில் செலவிடுகிறார்கள். பெரியார் தேவையில்லாத சடங்குகளில் சிக்கக் கூடாது என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஆனால், திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு பெரியாரின் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள்.’’

``தி.மு.க-வை இவ்வளவு விமர்சிக்கும் பா.ம.க., பா.ஜ.க அரசின்மீது சாஃப்ட் கார்னருடன் இருப்பது ஏன்?’’

``சாஃப்ட் கார்னருடன் நடந்துகொள்கிறோம் என்பது தவறான பார்வை. கட்சியினரை, பழைய மாதிரி வழக்குகளை நோக்கி நகர்த்திவிடக் கூடாது என்பதில் எங்கள் தலைவர் தெளிவாக இருக்கிறார். காரணம், பலர்மீது முப்பது வருடங்களுக்கு முன்பாகப் போடப்பட்ட வழக்குகளே இன்னும் முடியாமல் இருக்கின்றன. டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டத்தால், நானே பாஸ்போர்ட் முடக்கப்பட்டு வெளிநாடுகளுக்குப் போக முடியாமல் இருக்கிறேன்.”