Published:Updated:

அரியலூர்: ``அரசாணை வெளியிட்டால் மட்டும் போதாது; பட்டாவும் வழங்க வேண்டும்!" - அரசை வலியுறுத்தும் பாமக

பாமக பாலு

`ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி-அனல்மின் திட்டத்துக்கு வழங்கப்பட்ட நிலங்களைத் திரும்ப ஒப்படைப்பதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், நில உரிமையாளர்களுக்குப் பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.' - பாலு

அரியலூர்: ``அரசாணை வெளியிட்டால் மட்டும் போதாது; பட்டாவும் வழங்க வேண்டும்!" - அரசை வலியுறுத்தும் பாமக

`ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி-அனல்மின் திட்டத்துக்கு வழங்கப்பட்ட நிலங்களைத் திரும்ப ஒப்படைப்பதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், நில உரிமையாளர்களுக்குப் பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.' - பாலு

Published:Updated:
பாமக பாலு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி-அனல்மின் திட்டத்துக்கு இடம் கொடுத்த நில உரிமையாளர்களிடம் நிலங்களை ஒப்படைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு அண்மையில் வெளியிட்டது. அரசின் இந்த அறிவிப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுவருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து பா.ம.க செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு தலைமையில் அந்தக் கட்சியினர் கீழ குடியிருப்பு, கூவத்தூர், கல்லாத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களைச் சந்தித்தனர். இனிப்புகளை வழங்கி மக்கள் குறைகளைக் கேட்டறிந்த வழக்கறிஞர் பாலு, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

கையகப்படுத்தப்பட்ட நிலங்கள்
கையகப்படுத்தப்பட்ட நிலங்கள்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது அவர், ``ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்துக்கு நிலங்களைக் கொடுத்த உரிமையாளர்களிடம் அவர்களின் நிலங்களைத் திரும்ப ஒப்படைப்பதற்கான அரசாணையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது. அதற்கு அரசுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கல்லாத்தூர் கிராமம்
கல்லாத்தூர் கிராமம்

அதேநேரத்தில், அரசாணை வழங்குவதற்கு பா.ம.க தரப்பில் பலகட்ட போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். இதற்காக நீதிமன்றம் வரை சென்று முழுமூச்சாகச் செயல்பட்டு இந்தப் பகுதி மக்களுக்காகக் கடுமையாகப் பாடுபட்ட இயக்கம் பா.ம.க என்பதை இங்கு கூற விரும்புகிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பா.ம.க-வின் சட்டப் போராட்டங்கள் காரணமாகவே தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதேசமயம், தற்போது ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி-அனல்மின் திட்டத்துக்கு வழங்கப்பட்ட நிலங்களைத் திரும்ப ஒப்படைப்பதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், நில உரிமையாளர்களுக்குப் பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அரசின் நலத்திட்டங்களை அந்த மக்கள் பெற முடியும்.

பா.ம.க பாலு
பா.ம.க பாலு

மேலும், இந்தத் திட்டத்தில் விடுபட்ட இரண்டு கிராமங்களுக்கு நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைப்பதற்கான அரசாணை இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் அந்தப் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, விடுவிக்கப்பட்ட இரு கிராமங்களுக்கும் அரசாணை வழங்க வேண்டும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism