விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசுமீது தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீஸில் புகார் கொடுத்து வருகிறார்கள் பா.ம.க-வினர். `ராமதாஸ் பற்றி அவதூறு பரப்புகிறார்’ என்பதுதான் வன்னி அரசு மீதான புகார். என்னதான் பிரச்னை? விசாரித்தோம்.

பா.ம.க உயர்மட்ட நிர்வாகிகள் சிலர் நம்மிடம், “இப்போது என்றில்லை... கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தனது ட்விட்டர் பக்கத்தில் டாக்டர் ஐயாமீது தொடர்ச்சியாக அவதூறுகளைப் பதிவிடுகிறார் வன்னி அரசு. சமீபத்தில் கடலூரில் அம்பேத்கர் சிலைக்கு மனநலம் பிறழ்ந்த ஒருவர் செருப்பு மாலை போட்டுவிட்டார். அதற்கு, ‘பா.ம.க-தான் காரணம், தைலாபுரத்தில் பயிற்சி கொடுக்கிறார்கள்’ என்று பதிவிட்டார். இது தொடர்பாக எங்கள் கட்சி நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். வன்னி அரசுமீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. உடனே, ‘ஆ... பயந்துட்டோம்! நான் எத்தனையோ கேஸைப் பார்த்தவன்’ என ட்விட்டரில் வம்பிழுக்கிறார். எங்கள் கட்சியின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் வன்னி அரசுமீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் கோருகிறோம்’’ என்றார்கள்.

வன்னி அரசிடம் பேசினோம். “என்னுடைய முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் யாரையும் கொச்சைப்படுத்தியோ அநாகரிகமாகவோ நான் பதிவிட்டது இல்லை. சமூகநீதிக்கு எதிராகச் செயல்படும் மருத்துவர் ராமதாஸின் செயல்பாடுகளை மட்டுமே அம்பலப்படுத்தி வருகிறேன். மருத்துவக் கல்லூரி ஊழலில் மருத்துவர் அன்புமணிக்குத் தொடர்பிருக்க முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றத்தில் சி.பி.ஐ சொன்ன விஷயங்களைத்தான் நான் பதிவு செய்துவருகிறேன். அதற்கு மிகவும் அநாகரிகமாக பா.ம.க-வினர் பின்னூட்டம் இடுகிறார்கள். தொலைபேசியில் அழைத்து மிரட்டுகிறார்கள். அதனால்தான், `இதற்கெல்லாம்தான் தைலாபுரத்தில் பயிற்சி கொடுக்கிறார்களா...’ என்று பதிவிட்டேன். மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அம்பேத்கர் சிலை மட்டும் எப்படித் தெரிகிறது? இதுபோல இதற்கு முன்னரும் பல சம்பவங்கள் நடந்துள்ளன. என்மீதான புகாரை சட்டரீதியாகச் சந்திப்பேன்’’ என்றார்.

அவரிடம், ‘‘ஒரு கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்துகொண்டு, மற்றொரு கட்சியின் நிறுவனரைக் கடுமையான வார்த்தைகளால் விமர்சிப்பது சரிதானா?’’ என்று கேட்டதற்கு, “எங்கள் கட்சித் தலைவர்கூட, ‘பொதுச்சமூகத்தில் மருத்துவர் ராமதாஸுக்கு மரியாதை இருக்கிறது. அது பாதிக்கும் வகையில் செயல்படக் கூடாது’ என என்னைக் கண்டித்திருக்கிறார். ஆனாலும், நான் பயன்படுத்திய வார்த்தைகளிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. அதற்கான விளக்கத்தை நீதிமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

வன்னி அரசின்மீது மட்டுமல்ல, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் சிலரின்மீதும் பா.ம.க-விலிருந்து புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அது தொடர்பாக அந்தக் கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகனிடம் பேசினோம்.

“மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மகன், மருமகன் ஆகியோர்மீது கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தொடர்ச்சியாக குருவின் அம்மாமீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கு அந்தப் பகுதியில் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. குருவின் சகோதரி செந்தாமரை எங்கள் கட்சியில் பொறுப்பில் இருக்கிறார். அவரும் உதவி செய்யும்படி என்னிடம் கோரிக்கை விடுத்தார். உடனே என் கட்சி நிர்வாகிகளை அழைத்து உதவி செய்யச் சொன்னேன். தஞ்சாவூர் மருத்துவமனையில் அவர்களைச் சேர்த்து உதவி செய்தனர். யார் யாரோ தாக்கப்பட்டால் அறிக்கைவிடும் மருத்துவர் ராமதாஸ், குருவின் மகன் தாக்கப்பட்டது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடாதது ஏன்?

இது குறித்து என் கட்சி நிர்வாகிகள் ஃபேஸ்புக்கில் எழுதினர். அந்த ஆத்திரத்தில்தான் அவர்களின்மீது புகார் அளித்துள்ளனர். எங்கள் கட்சி நிர்வாகிகளும் என்னைத் தரக்குறைவாகப் பேசிய பா.ம.க-வினர்மீது பல்வேறு ஊர்களில் புகார் அளித்துள்ளனர். தேர்தல் நேரப் பரபரப்புக்காக உள்நோக்கத்துடன் இது போன்ற விஷயங்களில் பா.ம.க-வினர் ஈடுபடுகிறார்கள்’’ என்றார் வேல்முருகன்.

இரு தரப்பின் குற்றச்சாட்டுகள் குறித்து பா.ம.க-வின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலுவிடம் பேசினோம். “அரசியல் பப்ளிசிட்டிக்காக அவர்கள் ஏதோ செய்துகொண்டிருக்கிறார்கள். நாங்கள் சட்டத்தையும் நீதித்துறையையும் நம்புகிறோம். அதனால், சட்டரீதியாகப் புகார் அளித்துள்ளோம். இதில் பதில் சொல்வதற்கு வேறு ஒன்றும் இல்லை’’ என்றார்.