Published:Updated:

நீலகிரி: தேயிலைச் செடிகளை சேதப்படுத்தியதாகப் புகார்; அதிமுக முன்னாள் அமைச்சர்மீது வழக்கு பதிவு!

புத்திசந்திரன்

புத்திசந்திரன் தேயிலைத் தோட்டத்தில் அத்துமீறி நுழைந்து பொக்லைன் இயந்திரத்தின் மூலம் தேயிலைச் செடிகளைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

நீலகிரி: தேயிலைச் செடிகளை சேதப்படுத்தியதாகப் புகார்; அதிமுக முன்னாள் அமைச்சர்மீது வழக்கு பதிவு!

புத்திசந்திரன் தேயிலைத் தோட்டத்தில் அத்துமீறி நுழைந்து பொக்லைன் இயந்திரத்தின் மூலம் தேயிலைச் செடிகளைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
புத்திசந்திரன்

கடந்த 2011- 2016 காலகட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியின்போது தமிழக உணவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் நீலகிரியைச் சேர்ந்த புத்திசந்திரன். அ.தி.மு.க-வின் நீலகிரி மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர். சொந்த ஊரான மஞ்சூர் பகுதியில் தேயிலைத் தொழிற்சாலை அமைக்கும் ஆரம்பகட்டப் பணியின்போது, அவர் அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் அத்துமீறி நுழைந்து பொக்லைன் இயந்திரத்தின் மூலம் தேயிலைச் செடிகளை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதோடு, நிலத்தை ஆக்கிரமிக்கும் வகையில் கொலை மிரட்டல் விடுப்பதாக விவசாயி ராஜூ என்பவர் மஞ்சூர் காவல் நிலையத்தில் புத்திசந்திரன் மீது புகாரளித்திருந்தார்.

 புகார்
புகார்

இது குறித்து காவல்துறையினர் இரு தரப்பினரிடையே விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்த நிலையில், இந்திய தண்டனைச் சட்டம் 427, 447, 506(1) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் மீது வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.

இது குறித்து தகவல் தெரிவித்த காவல்துறையினர், ``கடந்த 21-ம் தேதி இரவு மஞ்சூர் பகுதியிலுள்ள ராஜூவின் தேயிலைத் தோட்டத்தில் இரவு 10 மணியளவில் பொக்லைன் இயந்திரத்தை வைத்து 300 தேயிலைச் செடிகளை புத்திச்சந்திரன் சேதப்படுத்தி,

தேயிலை பயிர்கள் அழிப்பு
தேயிலை பயிர்கள் அழிப்பு

கொலை மிரட்டல் விடுத்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இவர் மீதும், பொக்லைன் ஓட்டுநர் மீதும் வழக்கு பதிவுசெய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது" என்றனர்.