Published:Updated:

சசிகலா அண்ணன் மகன் விவேக் ஜெயராமனிடம் 3 மணிநேரம் விசாரணை! - கொடநாடு வழக்கில் அடுத்தது என்ன?

சசிகலா - விவேக்
News
சசிகலா - விவேக்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலா சகோதரர் மகன் விவேக் ஜெயராமனிடம் போலீஸ் விசாரணை நடத்தியது.

`கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மறுவிசாரணை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் அவசர அவசரமாக வழக்கு முடிக்கப்பட்டது. பலரிடம் விசாரணையே நடத்தவில்லை என்ற புகார் பரவலாக உள்ளது. இந்த நிலையில் சசிகலா சகோதரர் மகனும், ஜெயா தொலைக்காட்சியின் உரிமையாளர்களில் ஒருவருமான விவேக் ஜெயராமனிடம் போலீஸார் மூன்று நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

கொடநாடு எஸ்டேட்
கொடநாடு எஸ்டேட்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கோவை காவலர் பயிற்சிப் பள்ளியில் வைத்து மதியம் 2 மணியளவில் விவேக்கிடம் விசாரணை தொடங்கியது.

மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், நீலகிரி போலீஸ் டீம் அவரிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்டனர். கொடநாடு எஸ்டேட் உரிமையாளர்களில் விவேக் ஜெயராமனும் ஒருவர். ஆனால், அதிமுக ஆட்சியில் விவேக்கிடம் ஒருமுறைகூட விசாரணை நடத்தப்படவில்லை. சமீபத்தில் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் போலீஸ் விசாரணை நடத்தியது.

விவேக் ஜெயராமன் 
விவேக் ஜெயராமன் 

அவரிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. இதன் காரணமாகத்தான் விவேக்குக்கு சம்மன் அனுப்பி போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். எஸ்டேட்டில் என்ன மாதிரியான பொருள்கள் இருந்தன, திருட்டுப்போனவை எவை போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல, ``உங்களுக்கு யார் மேலாவது சந்தேகம் இருக்கிறதா?’’ என்றும் விவேக்கிடம் கேட்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட மூன்று மணி நேர விசாரணைக்குப் பிறகு, மாலை 5 மணியளவில் விவேக் அங்கிருந்து புறப்பட்டார். கொடநாடு வழக்கில் சசிகலா குடும்பத்தினரை முதன்முறையாக விசாரிப்பதால், இது வழக்கின் முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது.

விவேக் ஜெயராமன்
விவேக் ஜெயராமன்

விவேக்கை விசாரித்த கையோடு, கொடநாடு எஸ்டேட் வழக்கில் அடிபடும் அதிமுக புள்ளிகளை விசாரிக்கவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.