Published:Updated:

அதிமுக மா.செ-க்கள் கூட்டம்; 1,00,000 ரூபாயை அபேஸ் செய்த மர்ம நபர்! - போலீஸ் விசாரணை

அதிமுக அலுவலகம்

கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகத்துக்கு காலை 11 மணி அளவில் வந்தார். அவரைக் காண தொண்டர்கள் முட்டி மோதியதால், நெரிசல் ஏற்பட்டது.

அதிமுக மா.செ-க்கள் கூட்டம்; 1,00,000 ரூபாயை அபேஸ் செய்த மர்ம நபர்! - போலீஸ் விசாரணை

கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகத்துக்கு காலை 11 மணி அளவில் வந்தார். அவரைக் காண தொண்டர்கள் முட்டி மோதியதால், நெரிசல் ஏற்பட்டது.

Published:Updated:
அதிமுக அலுவலகம்

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், இன்று நடைபெற்றது. இதில் அமைப்புரீதியாக அ.தி.மு.க-வைச் சேர்ந்த 75 மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

தலைமை அலுவலகத்துக்கு வந்த எடப்பாடி
தலைமை அலுவலகத்துக்கு வந்த எடப்பாடி
கே.ஜெரோம்

முன்னதாக, கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகத்துக்கு காலை 11 மணி அளவில் வந்தார். அவரைக் காண தொண்டர்கள் முட்டி மோதியதால், நெரிசல் ஏற்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தென்காசி மாவட்டம், கடையம் தெற்கு ஒன்றியத்தின் துணைச் செயலாளர் உச்சிமாகாளி (41) என்பவர் தன்னுடைய பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாயை மர்ம நபர் ஒருவர் அபேஸ் செய்திருக்கிறார். இது குறித்து உச்சிமாகாளி, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பணத்தை பறிகொடுத்த உச்சிமாகாளி
பணத்தை பறிகொடுத்த உச்சிமாகாளி

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் சி.சி.வி.டி கேமரா இல்லாததால், யார் திருடினார்கள் என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் நிலவுவதாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.