Published:Updated:

``மஹுவா மொய்த்ராவை 10 நாள்களுக்குள் கைது செய்யுங்கள்; இல்லையெனில்...” - எச்சரித்த பாஜக

மஹுவா மொய்த்ரா

``தீமைக்கு எதிரான சக்தியின் அடையாளமாகவே, காலங்காலமாகக் காளி தேவியை இந்துக்கள் வணங்கி வருகின்றனர். எனவே இந்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட வேண்டும்" - பா.ஜ.க தலைவர் சுகந்தா மஜும்தார்

``மஹுவா மொய்த்ராவை 10 நாள்களுக்குள் கைது செய்யுங்கள்; இல்லையெனில்...” - எச்சரித்த பாஜக

``தீமைக்கு எதிரான சக்தியின் அடையாளமாகவே, காலங்காலமாகக் காளி தேவியை இந்துக்கள் வணங்கி வருகின்றனர். எனவே இந்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட வேண்டும்" - பா.ஜ.க தலைவர் சுகந்தா மஜும்தார்

Published:Updated:
மஹுவா மொய்த்ரா

ஆவணப்பட இயக்குநரான லீனா மணிமேகலை இயக்கத்தில் வெளியாகவிருக்கும் `காளி' எனும் டெலி ஃபிலிம் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அந்த போஸ்டரில் காளி, சிகரெட் பிடிப்பது போன்றும். LGBTQ+ சமூகத்தின் பிரைட் கொடியை ஏந்தியிருப்பது போன்றும் படம் இடம்பெற்றிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-யான மஹுவா மொய்த்ரா, ``என்னைப் பொறுத்தவரைக் காளி இறைச்சி, மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வம். உங்கள் தெய்வத்தைக் கற்பனை செய்ய உங்களுக்குச் சுதந்திரம் உள்ளது" என காளி போஸ்டருக்கு ஆதரவாக நேற்று பேசியருந்தார்.

பா.ஜ.க தலைவர் சுகந்தா மஜும்தார் - மேற்குவங்கம்
பா.ஜ.க தலைவர் சுகந்தா மஜும்தார் - மேற்குவங்கம்

மஹுவா-வின் இத்தகைய கருத்துக்குக் கண்டனங்கள் எழுந்ததையடுத்து, அவர் சார்ந்த திரிணாமுல் காங்கிரஸ், ``மஹுவா கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து. அதற்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்ல. மேலும் இது போன்ற கருத்துகளைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது" என ட்வீட் செய்திருந்தது. இந்த நிலையில், மஹுவா மொய்த்ராவை கைது செய்யவேண்டும் என மேற்குவங்க பாஜக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய மேற்குவங்க மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார், ``இந்து மதத்தின் சனாதன தர்ம விதிமுறைகளின்படி, காளி தேவி ஒருபோதும் மது மற்றும் இறைச்சியை உட்கொள்ளும் தெய்வமாக வணங்கப்படுவதில்லை. தீமைக்கு எதிரான சக்தியின் அடையாளமாகவே, காலங்காலமாகக் காளி தேவியை இந்துக்கள் வணங்கி வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாஜக
பாஜக

ஆனால், மஹுவா-வின் கருத்து மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறோம்" எனக் கூறினார்.

மேலும் பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர், ``நுபுர் ஷர்மாவுக்கு எதிராக போலீஸ் நடவடிக்கை எடுப்பதில் திரிணாமுல் காங்கிரஸ் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஆனால், அவர்கள் மஹுவா மொய்த்ரா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாஜக தலைவர்களுக்கு வேறு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு வேறு என விதிகள் எதுவும் இருக்க முடியாது. 10 நாள்கள் வரை நாங்கள் காத்திருப்போம், அதற்குள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நாங்கள் நீதிமன்றத்துக்குச் செல்வோம்" எனத் தெரிவித்தார்.