Published:Updated:

கரை வேட்டி டாட்காம்

கரை வேட்டி டாட்காம்
பிரீமியம் ஸ்டோரி
கரை வேட்டி டாட்காம்

- ‘வட்டம்’ பாலா

கரை வேட்டி டாட்காம்

- ‘வட்டம்’ பாலா

Published:Updated:
கரை வேட்டி டாட்காம்
பிரீமியம் ஸ்டோரி
கரை வேட்டி டாட்காம்

‘‘வாட்ச் வாங்கலியோ வாட்ச்!’’

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான ரங்கசாமியை, நேரு வீதியிலுள்ள அவரது நண்பரின் வாட்ச் கடையில் அடிக்கடி பார்க்கலாம். கடைக்கு வாட்ச் வாங்க வருபவர்களிடம், ‘அந்த கம்பெனி வாட்சைவிட இந்த கம்பெனி வாட்ச் நல்லா இருக்கும். வாங்கிக்கங்க’ என்று சேல்ஸ்மேனாக மாறி ஆலோசனையும் வழங்கிவருகிறார். ‘‘வேலையில்லா திண்டாட்டம், நிதிச்சிக்கல், தொடர் கொலைகள் உள்ளிட்ட விவகாரத்தில் மௌன சாமியாரா இருக்கும் நம்ம தலிவரு, தேர்தல் நெருங்கிவிட்ட இந்த நேரத்துலயும்கூட வாட்ச் வியாபாரம் செஞ்சுக்கிட்டிருக்காரே...’’ என்று கடுப்புடன் முணுமுணுக்கின்றனர் தொண்டர்கள்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் பின்னே ஓணாண்டிகளும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எடப்பாடியாரின் தாயார் மரணத்துக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கவிதை நடையில் ட்வீட் போட்டிருந்ததைப் பார்த்து பலரும் ஆச்சர்யப்பட்டார்கள். ஆனால், ‘இப்படி எழுதிக்கொடுப்பதற்கென்றே ஓணாண்டிப் புலவர்கள் பலரை மாதச் சம்பளத்துக்குத் தன்னுடன் வைத்திருக்கிறார் அமைச்சர்’ என்கிறார்கள். ‘வரும் தேர்தலில், ராஜேந்திர பாலாஜிக்கு சீட் கிடைப்பதே கஷ்டம்’ என்று மாவட்ட நிர்வாகிகள் பலரும் பேசிவர, ‘அருப்புக்கோட்டை உனக்கு, விருதுநகர் உனக்கு, சாத்தூர் உனக்கு’ என்று வாக்குறுதிகளை அள்ளி வீசிவருகிறாராம் அமைச்சர். இதை உண்மையென நம்பும் சிலரும், ‘நாளைய எம்.எல்.ஏ’ கனவுடன் அமைச்சர் பின் அணிவகுக்கின்றனராம்.

கரை வேட்டி டாட்காம்

‘‘ஜட்டியே போடாமத்தான் வருவேன்... மாஸ்க் போடச் சொல்லுறீங்களே!’’

வில்லன் நடிகரின் பெயர்கொண்ட கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், மாவட்ட கலெக்டர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் மாஸ்க் அணியாமல் கலந்துகொண்டிருக்கிறார். மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தது குறித்து தினமும் பிரஸ் ரிலீஸ் அனுப்பும் கலெக்டரும் இது பற்றிக் கண்டுகொள்ளவில்லை. இந்தநிலையில், செய்தித்துறை அதிகாரி ஒருவர், ‘‘கலெக்டர் நிகழ்ச்சியிலயாவது மாஸ்க் போட்டுட்டு வரலாமில்லியா... இந்த போட்டோவை நாங்க பத்திரிகைக்கு அனுப்பினா எங்களுக்குப் பிரச்னையாகும்’’ என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்தப் பிரமுகர் ‘‘கலெக்டர் மீட்டிங்ல நான் ஜட்டியே போடாமத்தான் வருவேன். நீங்க மாஸ்க் போடச் சொல்லுறீங்களே...’’ எனக் கோபமாகியிருக்கிறார். நொந்துபோனாராம் அந்த அதிகாரி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism