Published:Updated:

கரைவேட்டி டாட்காம்

கரைவேட்டி டாட்காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட்காம்

- ‘வட்டம்’ பாலா

கரைவேட்டி டாட்காம்

- ‘வட்டம்’ பாலா

Published:Updated:
கரைவேட்டி டாட்காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட்காம்

அண்ணனுக்குப் பிடிக்காத எம்.ஜி.ஆர் பாட்டு!

கரைவேட்டி டாட்காம்

அரசு விழாவாக இருந்தாலும், கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் மேடையில் குட்டித்தூக்கம் போடுவது கம்பம் தொகுதியின் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வான எஸ்.டி.கே.ஜக்கையனின் வழக்கம். சமீபத்தில் தேனியில் நடந்த அரசு விழாவில், ரவீந்திரநாத் எம்.பி அருகே அமர்ந்த ஜக்கையன், வழக்கத்தைவிடவும் அயர்ந்து தூங்கிவிட்டார். அருகிலிருந்த ரவீந்திரநாத் அதை கவனித்தபோதிலும், அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை. ‘‘மேடைக்கும் அண்ணனுக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி. ஏறினவுடனேயே தூங்கிடுவாரு. அதனாலேயே எந்த நிகழ்ச்சியா இருந்தாலும், வரவேற்புரையைக் கேட்டு வாங்கி, முதல் ஆளாப் பேசிட்டு, தூக்கம் போட்டுடுவார். எம்.ஜி.ஆர் பாடல்களில் அண்ணனுக்குப் பிடிக்காதது ‘தூங்காதே தம்பி தூங்காதே’தான்’’ என்று சிரிக்கும் ரத்தத்தின் ரத்தங்கள், ‘‘இப்படியே தூங்கிக்கிட்டிருந்தா எங்க கதி?” என்று நொந்துகொள்ளவும் செய்கிறார்கள்!

காய்கறி மாலை... கலாய்த்த காவலர்!

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயத்துக்குப் பயன்படும் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிறையும் நிலையில் உள்ளன. அதனால், ‘தாமிரபரணி ஆற்றுப் பாசனத்திலுள்ள அனைத்துக் கால்வாய்களுக்கும் தண்ணீர் திறக்க வேண்டும்’ என்பது விவசாயிகளின் கோரிக்கை. அதை வலியுறுத்தி நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பாக, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. கரைவேட்டிகளுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்களில், நிர்வாகி ஒருவர் காய்கறிகளை மாலையாகக் கட்டி கழுத்தில் போட்டிருந்தார். அதைப் பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், மாலையைக் கழற்றும்படி வற்புறுத்தியிருக்கிறார். அதனால் கடுப்பான மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன், ‘‘இன்னும் ஆறு மாசத்துல ஆட்சி மாறிடும். அதுக்குப் பிறகு எங்களை இப்படிப் பேச முடியாது’’ என்றார் எச்சரிக்கும் தொனியில். சட்டென அந்த சப் இன்ஸ்பெக்டர், ‘‘இன்னும் அஞ்சு மாசத்துல நானே ரிட்டயர்டு ஆகிடுவேன் சார்’’ என்று சொல்லவும், அந்த இடமே சிரிப்பலையால் அதிர்ந்தது!

கரைவேட்டி டாட்காம்

வரிசைகட்டும் வட்டங்கள்!

தேனி மாவட்டத்திலுள்ள, தனது போடி தொகுதிக்குள் நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் தவறாமல் கலந்துகொள்கிறார் ஓ.பி.எஸ். பொதுவாக தேனி மாவட்டத்தில் அவர் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், அந்தந்தப் பகுதியின் கட்சி நிர்வாகிகள் மட்டுமே உடன் செல்வது வழக்கம். ஆனால், தேர்தல் நெருங்கி வருவதால், அவரது கடைக்கண் பார்வைபட்டு எம்.எல்.ஏ ஆகிவிட மாட்டோமா என்று கட்சியினர் பலரும் ஏங்குவதால், அவர் செல்லும் இடங்களிலெல்லாம் நிர்வாகி களின் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக, கம்பம், ஆண்டிப்பட்டி தொகுதியில் சீட் கேட்க விரும்பும் நிர்வாகிகள் பலரும் அவரை மொய்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், ஓ.பி.எஸ் கையில் ஒரு லிஸ்ட் இருக்கிறது. தான் தர்மயுத்தம் நடத்திய காலத்தில், தன்னுடன் இருந்தவர்களின் பெயர்கள் அடங்கிய அந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே பரிந்துரை செய்வதாக அவர் முடிவெடுத்துவிட்டார் என்கிறார்கள்!