Published:Updated:

கரை வேட்டி டாட் காம்

கரை வேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரை வேட்டி டாட் காம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், வேலூர் மாநகராட்சியில் போட்டியிட்ட தங்கள் கட்சி வேட்பாளரை, ஆளுங்கட்சியினர் கடத்தி மிரட்டியதாக அறிக்கை வெளியிட்டார் பெரியவர்.

கரை வேட்டி டாட் காம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், வேலூர் மாநகராட்சியில் போட்டியிட்ட தங்கள் கட்சி வேட்பாளரை, ஆளுங்கட்சியினர் கடத்தி மிரட்டியதாக அறிக்கை வெளியிட்டார் பெரியவர்.

Published:Updated:
கரை வேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரை வேட்டி டாட் காம்

‘சிலை திறக்கலையோ சிலை...’

சென்னையில் கருணாநிதி சிலையைத் திறந்த கையோடு, தமிழ்நாடு முழுவதும் அவர் சிலையைத் திறக்க உடன்பிறப்புகள் ஆயத்தமாகிவருகின்றனர். ஏற்கெனவே கோவையிலுள்ள ஒரு மூத்த நிர்வாகி, 2018-ம் ஆண்டிலிருந்தே, “தலைவருக்குச் சிலை திறக்கறோம். பார்த்துப் பண்ணுங்க...” என்று எக்கச்சக்கமாக வசூல் செய்தாராம். ஆனால், திட்டம் கிணற்றில் போட்ட கல்லாகக் கிடக்க, தற்போது முன்னாள் பொறுப்பாளர் ஒருவர் கருணாநிதிக்கு சிலை திறப்பதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறாராம். ஏற்கெனவே வசூல் செய்தவரைப்போல் அல்லாமல், ஆட்சியரிடம் அனுமதிக் கடிதம், முதல்வரிடம் சிலை திறப்பதற்கான தேதி வரை தீவிரம் காட்டுகிறாராம். இதனால், உடன்பிறப்புகளுக்கு என்ன பதில் சொல்வது என்று மூத்த நிர்வாகி முழித்துக்கொண்டிருக்கிறார்!

கரை வேட்டி டாட் காம்

‘‘ராஜினாமா பண்ணிட்டுப் போயிடுவேன்!”

துறையின் அமைச்சர்களுக்கே தெரியாமல் அந்தந்தத் துறைகளில் பணியிடங்களை நிரப்புவது, நிதிகளை மடைமாற்றம் செய்வது போன்ற விவகாரங்களில் கைதேர்ந்தவர், யூனியன் பிரதேசத்தின் முதன்மையானவர். கடந்தகாலத்தில், அவரது பதவி பறிக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணமே இந்தத் தன்னிச்சையான செயல்பாடுகள்தான். இது தெரியாமல், ‘இனிமேல் நாமதான்... வாரியத் தலைவர் பதவிகளை வாங்கிடலாம். அஞ்சு வருஷத்துக்கு அடிச்சு விளையாடலாம்’ என்று, ஆட்சிக்கு வந்த மகிழ்ச்சியில் கூட்டுக் கட்சி எம்.எல்.ஏ-க்களும் குஷியானார்கள். ஆனால், முதன்மையானவரோ, ‘இனி வாரியத் தலைவர் பதவிகள் இல்லை’ என தடாலடியாகக் கைவிரித்துவிட்டார். கடுப்பாகிப்போன எம்.எல்.ஏ-க்கள், ‘‘வாரியம்தான் தரவில்லை… வேலை உள்ளிட்ட மற்ற விஷயங்களிலாவது எங்களுக்கு வாய்ப்பு கொடுங்களேன்” எனக் கெஞ்ச ஆரம்பித்தனர். ஆனால், ‘‘இப்படியெல்லாம் தொல்லை கொடுத்தா, ராஜினாமா பண்ணிட்டுப் போயிடுவேன். அதனால எனக்கு எந்த நஷ்டமும் இல்லை” என்று முதன்மையானவர் சீற, “ஆளுங்கட்சி எம்.எல்.ஏ என்ற பெயரிலாவது இருப்போம்” என்று அமைதியாகியிருக்கிறார்கள் எம்.எல்.ஏ-க்கள்!

படம் காட்டிய கவுன்சிலர்கள்!

பட்டாசு மாநகராட்சியில், சமீபத்தில் மாநகர் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்திருந்த மலர்க் கட்சி கவுன்சிலர், ‘மாநகராட்சியின் கூட்ட அரங்கில் பாரதப் பிரதமர் போட்டோவை மாட்ட வேண்டும்’ எனக் கூறியதோடு தான் கொண்டுவந்திருந்த படத்தை மாட்ட முயன்றார். அப்போது குறுக்கிட்ட ரத்தத்தின் ரத்தங்கள், ‘அப்படியெனில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் படங்களையும் மாட்ட வேண்டும்’ எனத் தங்கள் கட்சித் தலைவர்களின் படங்களோடு குரல் கொடுத்தனர். இதையடுத்து, எழுந்த கதர்க் கட்சியினரும் தங்கள் பங்குக்கு, “முன்னாள் பிரதமர், தலைவர்களின் படங்களையும் மாட்ட வேண்டும்’’ எனக் குரல் எழுப்பினர். ஆளாளுக்கு படம் காட்டியதில் அதிர்ந்துபோன மாநகராட்சி மேயர், ‘‘கூட்ட அரங்கில் எந்தத் தலைவரின் படமும் இடம்பெறாது’’ எனச் சொல்லவும், அமைதியான கவுன்சிலர்களின் கண்கள் அனைத்தும் மன்ற அரங்கில் தொங்கிக்கொண்டிருந்த ஆளுங்கட்சித் தலைவர்களின் படங்களில் நிலைகுத்தி நின்றன!

கரை வேட்டி டாட் காம்

செம்மரம் கடத்தும் ஆம்புலன்ஸ்... ஆசிபெற்ற வேட்பாளர்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், வேலூர் மாநகராட்சியில் போட்டியிட்ட தங்கள் கட்சி வேட்பாளரை, ஆளுங்கட்சியினர் கடத்தி மிரட்டியதாக அறிக்கை வெளியிட்டார் பெரியவர். தேர்தலில் தோற்றுப்போன வேட்பாளர் தரப்பு, தேர்தலில் செலவிட்ட தொகையை மீட்பதற்காகச் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டுவருவதாகச் செய்திகள் அலையடிக்க ஆரம்பித்தன. அண்மையில், இந்தச் செய்தியை உறுதிப்படுத்தும்விதமாக ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகளுடன் அவர் தரப்புக்குச் சொந்தமான ஆம்புலன்ஸை சித்தூர் போலீஸார் பறிமுதல் செய்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, சில தினங்களுக்கு முன்பு அலமேலுமங்காபுரம் பகுதியில் ரூ.1.5 கோடிக்கு ஒரு வீட்டை வாங்கியதோடு, புதுவசூரில் ரூ.2 கோடிக்கு மற்றுமொரு பெரிய வீட்டையும் கட்டிக்கொண்டிருக்கிறதாம் அவர் தரப்பு. ‘இவ்வளவு தூரம் இவர் வளரக் காரணமே நம்ம தலைவரோட ஆசிதான்’ எனச் சொந்தக் கட்சியினரே பஞ்சாயத்தைப் பற்றவைக்கிறார்கள்!

“கட்சியில் வாய்ப்பு கேட்டால், மட்டம் தட்டுவீர்களா..?’’

ஆளுங்கட்சியில் மாவட்டப் பொறுப்பிலும், எம்.எல்.ஏ-வாகவும் இருக்கும் அவதாரப் பெயர்கொண்ட புள்ளிக்கு, வாய்தான் பிரச்னையே. உட்கட்சித் தேர்தலின்போது வாய்ப்பு கேட்ட சிறுபான்மையினர், பட்டியலினத்தவரிடம் ‘‘உங்களுக்குத்தான் எழுச்சித் தலைவர் இருக்கிறாரே... அவரிடம் போய் வாய்ப்பு கேளுங்கள்’’ எனக் கூறியிருக்கிறார். இதனால் கொதித்தெழுந்தவர்கள், ‘‘ஆண்டாண்டுக்காலமாக தி.மு.க-வுக்கு உழைத்துவரும் எங்களை, ஓட்டுக்கு மட்டும் பயன்படுத்துவீர்களா... கட்சியில் வாய்ப்பு கேட்டால், எங்கள் சாதி, மதத்தைக் கூறி மட்டம் தட்டுவீர்களா..?’’ என அவதாரப்புள்ளியை எதிர்த்து, சாலைமறியல் செய்யக் கிளம்பினார்கள். விடுவாரா அவதாரப்புள்ளி... லோக்கல் போலீஸை வைத்து, கூட்டத்தைக் கலைத்தார். ஆனாலும், கோபம் கலையாத கட்சியினர், இப்போது அவதாரப்புள்ளி குறித்து கட்சித் தலைமைக்குப் பக்கம் பக்கமாகக் கடிதம் எழுதிவிட்டு, நடவடிக்கைக்காகக் காத்திருக்கின்றனர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism