Published:Updated:

கரைவேட்டி டாட்காம்

கரைவேட்டி டாட்காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட்காம்

- ‘வட்டம்’ பாலா, ஓவியம்: சுதிர்

கரைவேட்டி டாட்காம்

- ‘வட்டம்’ பாலா, ஓவியம்: சுதிர்

Published:Updated:
கரைவேட்டி டாட்காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட்காம்

‘என்னவானாலும் அண்ணனுக்கு இம்புட்டு கோபம் ஆகாது!’

சிறிய மாநிலத்தின் தமிழ்க்கடவுள் பெயர்கொண்ட எம்.எல்.ஏ., முதன்மையானவரோடு ‘வாட்ச் கடை, டென்னிஸ் கோர்ட், அப்பா பைத்தியம் சாமி கோயில்’ என இணை பிரியாமல் சுற்றிவந்தவர். ஆனாலும்கூட அமைச்சரவையில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த தமிழ்க்கடவுள் புள்ளி, முதன்மையானவருடனான தொடர்புகளைக் கத்தரித்துவிட்டு, தொகுதி நிகழ்ச்சிகளோடு தன்னைச் சுருக்கிக்கொண்டார். முதன்மையானவராகப் பொறுப்பேற்ற பிறகு, அரசுமுறைப் பயணமாக முதன்முறையாகத் தமிழ்க்கடவுள் புள்ளியின் தொகுதிக்குச் சென்றபோதும்கூட, முதன்மையானவரைச் சந்திக்காமல் தவிர்த்துவிட்டார் தமிழ்க்கடவுள் புள்ளி. ‘முதன்மையானவரை வரவேற்று ஒரு போஸ்டர்கூட அடிக்கவில்லையே மனுஷன்... என்னவானாலும் அண்ணனுக்கு இம்புட்டு கோபம் ஆகாது’ என்று புலம்புகின்றனர் தொண்டர்கள்.

சுதி ஏறி ஆடும் சூனா பானா!

‘பாடி சோடா’ ரேஞ்சுக்கு ஓவர் சேட்டை செய்கிறார்கள் வேலூரிலிருந்து பிரிந்து சென்ற மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் சிலர். சமீபத்தில், அந்த மாவட்ட அணி அமைப்பாளர் ஒருவர், நகரப் பொறுப்பாளர் ஒருவரை அடிப்பதற்காக ‘சுதி’ ஏற்றிய நிலையில், நடுரோட்டில் தொடை தெரிய வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வாய்ச்சவடாலுடன் அதிரடி ஆட்டம் போட்டார். ரோட்டில் போய்க்கொண்டிருந்த சின்னக் குழந்தைகளும்கூட, ‘யார், இந்த பூமர் அங்கிள்?’ என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு அதகளம் செய்த நிர்வாகியின் வீடியோ இணையத்திலும் வைரலாகவே, ‘பப்பு கம் கியர்...’ என இரு தரப்பினரையும் அழைத்த அமைச்சர், ‘அடக்கி வாசிக்கலைன்னா... ஒழிச்சிப்புடுவேன் ராஸ்க்கல்ஸ்’ என்று வடிவேலு பாணியில் எச்சரித்திருக்கிறார்.

கரைவேட்டி டாட்காம்

‘‘அய்யா சாமி... செய்தியைப் போட்டுடாதீங்க!’’

விவசாய மாவட்டத்தில், மலைப்பகுதியைக் குறிக்கும் ஊராட்சி மன்றத் தலைவராக மலைக்கடவுளின் மனைவி பெயர்கொண்டவர் இருந்துவருகிறார். இலைக் கட்சி சார்பில் தேர்தலில் நின்று வெற்றிபெற்ற அவர், பொறுப்புக்கு வந்த பிறகு கணவரோடு சேர்ந்து ஆளுங்கட்சிக்குத் தாவிவிட்டார். ஆனால், இலைக் கட்சியின் ஒற்றைத் தலைமைப் போட்டியில் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரை துணிவுத் தரப்பு ‘ஸ்வீட்டாக’ கவனிக்க... மறுபடியும் இலைக் கட்சிக்கே தாவிவிட்டார் கணவர். விஷயத்தை மோப்பம் பிடித்துவந்த சில பத்திரிகையாளர்களிடம், ‘அய்யா சாமி... இது வெளியே தெரிஞ்சா ஆளுங்கட்சியில சம்பாதிக்க முடியாது. தயவுசெய்து இந்தச் செய்தியைப் போட்டுடாதீங்க’ என்று காலில் விழாத குறையாகக் கெஞ்சியிருக்கிறார். விடுவார்களா நம் ஆட்கள்?