Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

‘பத்து லட்சத்துக்குக் குறையாமல் அரசுக்கு கொரோனா நிதி கொடுப்பவர்கள் மட்டுமே முதன்மையானவரை நேரில் சந்திக்க முடியும்’ எனக் கோட்டையில் இருப்பவர்கள் ஆஃப் தி ரெக்கார்டு ஆர்டர் போட்டிருக்கிறார்களாம். இதனால் குறைந்த நிதி கொடுப்பவர்களால், முதன்மையானவரை நெருங்கவே முடியவில்லையாம். அணுக முடியாத அவஸ்தையைக் குடும்பத்தினர் மூலமாக முதன்மையானவரின் கவனத்துக்குக் கொண்டுபோயும் பலன் இல்லையாம். யார் மூலம் தீர்வு காண்பது எனத் தெரியாமல் திண்டாடுகிறார்கள் பலரும்… #டேய் போஸ்ட் ஆபீஸுக்கு போன் போட்றா…

கிசுகிசு

பலரும் மிக ஆவலோடு எதிர்பார்த்த கற்பிக்கும் துறையின் வாரியப் பதவி திண்டுக்கல் புள்ளிக்குப் போக, எதிர்க்கட்சியினர் கூப்பாடு போட்டார்கள். “ஒவ்வொரு தேர்தலிலும் அவர் சீட் கேட்பார். கொடுக்க முடியாத சூழலைப் புரிஞ்சுக்கிட்டு களப்பணி ஆற்றுவார். அந்த விசுவாசத்துக்குத்தான் இந்த வெகுமதி” என்றாராம் முதன்மையானவர். இதற்கிடையில் உட்கட்சிக்குள்ளேயே திண்டுக்கல் புள்ளிக்கு எதிரான காய்நகர்த்தல்களைச் சிலர் செய்கிறார்களாம். ‘திருமதி.முதன்மை’ ரூட்டில் அவரை வீழ்த்தவும் முயற்சி நடக்கிறதாம். #வெல்வாரா வீழ்வாரான்னு பட்டிமன்றம் நடத்திடலாம்போல இருக்கே…

மருத்துவப் பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துத் திரும்பியிருக்கும் சூப்பர் நடிகர், தன் வெளிநாட்டுப் பயணத்துக்கு உதவிய டெல்லி ஆட்களுக்கு நெகிழ்ந்துபோய் நன்றி சொன்னாராம். பிரதமரை நேரில் சந்தித்து நன்றி கூற விரும்புவதாக அவர் சொல்ல, ‘அவருடைய நலம்தான் முக்கியம். இப்போதைக்கு டெல்லி வர வேண்டாம்’ எனத் தகவல் சொல்லப்பட்டதாம். பெரிய இடத்துப் பரிவும் அக்கறையும் சூப்பர் நடிகரை இன்னமும் தெம்பாக்கியிருக்கிறதாம். #வந்துட்டேன்னு சொல்லு..!

டோக்கன் கட்சியில் போட்டியிட்டு, டெல்டா மாவட்டத்திலேயே கணிசமான வாக்கு வாங்கிய பாரம்பர்ய வழக்கறிஞரை வளைக்கச் சொல்லியிருக்கிறது ஆளும் தலைமை. பாரம்பர்யம், விசுவாசம் உள்ளிட்ட விஷயங்களைச் சொல்லி, ‘அவர் அணி மாற மாட்டார்’ என்றாராம் இனிஷியல் தலைவர். ஆனால், கடந்த வாரம் அணில் அமைச்சரை அவருடைய வீட்டிலேயே சந்தித்து அணி மாற தேதி குறித்துவிட்டாராம் அந்த வழக்கறிஞர். அணில் அமைச்சருக்கும் வழக்கறிஞருக்கும் கடந்தகாலத்தில் இருந்த பசைப்பழக்கம்தான் இணைப்புக்குப் பாலமாகியிருக்கிறதாம். #பணம் பந்தியிலே… குணம் குப்பையிலே…

‘காவிக் கட்சியோடு கைகோத்ததுதான் தோல்விக்குக் காரணம்’ எனச் சொன்ன மாஜியை நேரடியாகக் கண்டிக்க முடியாமல், அவருடைய சகோதரருக்கு போன் பண்ணினாராம் துணிவானவர். “கொஞ்ச நாளைக்கு வாயை அடக்கிட்டு அவரை அமைதியா இருக்கச் சொல்லுங்க” என முதன்மையானவர் சொல்ல, “தோல்விக்கு நானும் ஒரு காரணம்னு சொல்லி அவர் என்கிட்ட பேசியே ரெண்டு மாசம் ஆச்சு” என்றாராம் சகோதரர். #உடுக்க உடையில்லைன்னு உறவுக்காரிக்கிட்ட போனா, அவ எருக்கந்தழையக் கட்டிக்கிட்டு எதிரே வந்தாளாம்…

“வீடு சம்பந்தப்பட்ட சர்ச்சை மட்டும் கிளம்பியிருக்காவிட்டால் நிச்சயம் மினிஸ்டர் பதவி உங்களுக்குத்தான் கிடைத்திருக்கும்” என டெல்லி சோர்ஸுகள் தகவல் அனுப்ப, கொந்தளித்தாராம் மன்னர் தலைவர். “திட்டமிட்டு வீடு சர்ச்சையைக் கிளப்பிவிட்டு பதவியைக் கொத்திட்டுப் போயிட்டார்” எனத் தமிழ்க்கடவுள் பெயர்கொண்டவரின் கைங்கர்யத்தைச் சிலர் சொல்ல, ‘உரியவங்களுக்கு என் அருமையைப் புரியவைப்பேன் பாருங்க’ எனச் சபதம் போடுகிறாராம். #கோட்டையில்ல கொடியுமில்ல… அப்பவும் நான் ராஜா!

கிசுகிசு

தன்னைச் சந்தித்து கட்சி குறித்த கவலைகளைப் பகிர்ந்துகொள்ளும் நிர்வாகிகளிடமும், நலன் விரும்பிகளிடமும், ‘எதுவானாலும் இவர்கிட்ட சொல்லுங்க’ என மருத்துவ உறவினரைக் கைகாட்டுகிறாராம் சின்னத் தலைவி. “கட்சிக்குள் பல குழப்பங்கள் நடப்பதே அவராலதான். அவர்கிட்டயே போய் எப்படிப் புலம்ப முடியும்?” எனப் பொறுமுகிறார்கள் பலரும். #தலைவலியே மருத்துவராலதான்…

பத்திரப் பதிவுத்துறையில் நடக்கும் நிர்வாகக் குளறுபடிகளை சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் கடுமையாகக் கண்டித்தது. இது குறித்து அதிகாரிகளை வறுத்தெடுத்தாராம் உரிய துறையின் அமைச்சர். ‘சமீபத்தில் நடந்த டிரான்ஸ்ஃபர் விவகாரத்தைச் சுட்டிக்காட்டித்தான் கோர்ட் கண்டித்தது. அந்த டிரான்ஃஸ்பருக்கு உத்தரவிட்டதே அமைச்சர்தான்’ என்கிறார்கள் அதிகாரிகள் தரப்பில். #அய்யா... ராசா... நீதான்யா தப்பான தீர்ப்பைச் சொல்லிட்ட…

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism