Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

விசில் கட்சியிலிருந்து விலகுபவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. சமீபத்தில் விலகிய ‘தாம்பரம்’ புள்ளியிடம் சில நாள்களுக்கு முன்னர்தான் சின்ன தலைவி போனில் பேசியிருந்தார். ‘அன்போடு பேசியவர், அடுத்த சில நாள்களிலேயே எதற்காக விலகினார்?’ என இனிஷியல் புள்ளியிடம் விசாரித்தாராம் சின்ன தலைவி. தன்மீதான குறைகளையும் குற்றச்சாட்டுகளையும் மறைத்து, “உங்களுக்குக் கடிதம் எழுதுகிற ஆட்களையெல்லாம் உண்மையானவர்கள் என நம்புவதை இனியாவது நிறுத்துங்கள்” என விவகாரத்தையே வேறு மாதிரி திருப்பிவிட்டாராம் இனிஷியல் புள்ளி. #முழுப் பூசணிக்காயை குக்கர்லவெச்சு மறைக்கிறாரே?

பதவிக்கு வந்த நாளிலிருந்து சர்ச்சைப் பேச்சுகளால் சமூக வலைதளங்களின் விமர்சனத்துக்குத் தொடர்ந்து ஆளாகிவருகிறார் மாஜி காக்கி. ‘மோடி, தாடி வளர்க்கக் காரணமே கொரோனா வேதனைதான்’ என லேட்டஸ்டாக மாஜி காக்கி பேசிய பேச்சும், அதற்குக் கிளம்பிய விமர்சனங்களும் டெல்லியின் கவனம் வரை போய்விட்டன. மாஜி காக்கிக்கு ஆகாத காவி நிர்வாகிகள்தான் வீடியோ ஆதாரத்துடன் இந்த உள்ளடி வேலையைச் செய்திருக்கிறார்களாம். #மே... யார் அந்தக் கறுப்பு ஆட்டுக்குட்டி!?

கிசுகிசு

டெலிபோன் ஒட்டுக்கேட்பு விவகாரம், மத்திய அரசுக்குப் பெரிய தலைவலியை உண்டாக்கிவருகிறது. இதற்கிடையில், “என் தொலைபேசி பல வருடங்களாக ஒட்டுக்கேட்கப்படுகிறது. என்னுடைய அத்தனை நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டுவருகின்றன. மத்திய அரசு செய்வது தவறென்றால், மாநில அரசு செய்வது மட்டும் நியாயமா?” எனப் பத்திரிகையாளர்களிடம் வெடிக்கத் தயாரானாராம் அண்ணன் தலைவர். “வேணாம்ணே... அநியாயத்துக்குக் கலாய்ச்சிடுவானுக” என்று சொல்லி, தம்பிகள் போராடித் தடுத்தார்களாம். #ஒரு மீம் கன்டென்ட் மிஸ்ஸாகிடுச்சே!

இலைக்கட்சியில், மகளிரணிப் பொறுப்பை ரொம்பவே எதிர்பார்த்தவர் கோகுலமானவர். ஆனால், தடாலடிப் பெண்மணிக்கு அந்தப் பதவி போக, கோகுலமானவருக்குக் கடுமையான கோபமாம். “ஆட்சியில் இருந்தப்ப அவருக்கு வாரியப் பதவி; இப்போ மாநிலப் பதவி. ஒரே ஆளுக்கு ஏன் இப்படி வாரி வாரிக் கொடுக்கணும்?” எனக் கொந்தளித்தாராம். அணி மாறும் பட்டியலில் அவர் பெயரும் சேர்ந்துவிடக் கூடாது என முன்னணி நிர்வாகிகள் மூலமாக கோகுலமானவரைச் சமாதானப்படுத்திவருகிறார்கள். #சாமி வந்து கேட்டிடுமா... வீண் பழியைத் தீர்த்திடுமா?

பிரகாச நடிகர், தன் பிறந்தநாளன்று சட்ட நிபுணரின் உரத்த குரலைத் தன் படத்துக்குத் தலைப்பாக அறிவிக்க, மத்திய உளவுத்துறை வரை என்கொயரி பறக்கத் தொடங்கிவிட்டது. என்ன கதை, எதற்காக இந்தத் தலைப்பு எனச் சம்பந்தப்பட்டவர்களைத் துருவி எடுத்துவிட்டார்களாம். ‘அடித்தட்டு மக்களுக்கான கதையே தவிர, அரசுக்கு எதிரான ஏதும் இல்லை’ எனச் சொல்லப்பட்ட பிறகுதான், உளவு அமைப்பினர் அமைதியானார்களாம். #கற்றவை... பற்ற வை!

கிசுகிசு

அணில் அமைச்சரின் தூண்டுதல் பேரில்தான், ரெய்டு நடவடிக்கை நடப்பதாகத் தன் விசுவாசிகளிடம் சொன்னாராம் பாதிக்கப்பட்ட மாஜி. இரு தரப்புக்கும் இடையே சமாதானம் செய்துவைக்க சிலர் மெனக்கெட, “எனக்கு எதிரான வழக்குகளுக்கு அவர்தான் காரணம். ரெய்டு மட்டுமில்ல, அடுத்தடுத்தும் என்ன நடக்கப்போகுதுன்னு பாருங்க’ எனச் சவால்விட்டாராம் அணில் அமைச்சர். “என்ன வேணும்னாலும் நடக்கட்டும். நானா அவரான்னு பார்த்துடுறேன்’ என பதிலுக்குச் சீறியிருக்கிறார் பாதிக்கப்பட்ட மாஜி. #ரொம்ப டெரரான ஆட்களா இருப்பாங்கபோலயே!

துறை குறித்த சிறு விஷயங்களைக்கூட, முதன்மையானவர் கவனத்துக்குக் கொண்டுபோன பிறகே நடவடிக்கை எடுக்கிறாராம் ஜாக்கிங் மினிஸ்டர். சமீபத்தில் மீசை மினிஸ்டர், அவர் துறைரீதியான தடாலடி உத்தரவுகளை அறிவித்தபோது, ‘ஜாக்கிங் மினிஸ்டர் மாதிரி நடந்துக்கய்யா’ என்றாராம் முதன்மையானவர். “முதன்மையானவர் கவனத்துக்கு எதைச் சொல்லணும், எதைத் தவிர்க்கணும்னுகூடத் தெரியாம ஸ்கூல் பசங்க மாதிரி ஸ்கோர் பண்ணி உயிரை வாங்குறாங்களே…” என சீனியர்களிடம் புலம்பினாராம் மீசை மினிஸ்டர். #சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism