Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

அவ்வப்போது மனதில்பட்ட கருத்துகளை அப்படியே போட்டு உடைக்கும் ராஜ புள்ளியைக் கட்டுப்படுத்த முடியாமல் இலைக் கட்சி ரொம்பவே தடுமாறுகிறதாம்

கிசுகிசு

அவ்வப்போது மனதில்பட்ட கருத்துகளை அப்படியே போட்டு உடைக்கும் ராஜ புள்ளியைக் கட்டுப்படுத்த முடியாமல் இலைக் கட்சி ரொம்பவே தடுமாறுகிறதாம்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

புதிய பொறுப்புக்கு வந்ததுமே, கோஷ்டிப்பூசல்களைக் களைவதைத்தான் முதல் வேலையாகக் கையில் எடுத்திருக்கிறாராம் காவிக் கட்சியின் மாஜி காக்கி அதிகாரி. ‘கதர் கட்சியை மிஞ்சுகிற அளவுக்கு நம் கட்சியில் கோஷ்டிப்பூசல்கள் அதிகமாகிவிட்டன’ எனச் சொல்லி, எதிரும் புதிருமாக இருக்கும் நிர்வாகிகளுக்கு போன் போட்டு, சமாதானப்படுத்தும் வேலையைத் தீவிரமாகச் செய்கிறாராம். வேல் பிரமுகரையும் கோவை அம்மணியையும் சமாதானப்படுத்தும் வேலைதான் மாஜி காக்கிக்குப் பெரிய சவாலாக இருக்கிறதாம். #இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்கிறது!

கிசுகிசு

உள்ளாட்சித் தேர்தலைத் தனித்துச் சந்திக்க முடிவெடுத்திருக்கிறதாம் காவிக் கட்சி. கட்சி நிர்வாகிகளின் சுயபலம், லோக்கல் செல்வாக்கு என்ன என்பதை அறிய உள்ளாட்சித் தேர்தலை வாய்ப்பாகப் பயன்படுத்தச் சொல்லியிருக்கிறதாம் டெல்லி தலைமை. இதனால், இலைக் கட்சியோடு கூட்டணி இல்லை என்கிறார்கள் காவிக் கட்சி நிர்வாகிகள். இதில் பணிவானவருக்கும் துணிவானவருக்கும் பரம சந்தோஷமாம். ஆனாலும், அதைக் காட்டிக்கொள்ளாமல் ‘தனித்துப் போட்டியிடுகிற முடிவு ஏன்?’ எனக் கேட்டு வெசனத்தை வெளிப்படுத்துகிறார்களாம். #உள்ள சிரிக்கிறோம்... வெளிய அழுகிறோம்... நல்ல வேஷம்தான் வெளுத்து வாங்குறோம்!

ஓடியது போக மீதமிருக்கும் நிர்வாகிகளிடம் போனில் பேசத் தொடங்கியிருக்கிறார் நடுநிலைக் கட்சியின் தலைவர். “எந்தக் குறையாக இருந்தாலும் என்னிடம் சொல்லுங்கள். நானே சரிசெய்கிறேன்” என அவர் பேச, நிர்வாகிகளுக்கு ஏக நிம்மதியாம். கட்சியில் ரொம்பவே சிரமத்திலிருக்கும் நிர்வாகிகள் சிலருக்கு, கட்சி சார்பில் மாதா மாதம் ஊதியம் வழங்கவும் ஆவன செய்திருக்கிறார் நடுநிலைத் தலைவர். #சொன்னபடி கேளு... மக்கர் பண்ணாதே!

கார் ஓட்டி விபத்துக்குள்ளான நடிகை, ‘நான் குடிக்கவில்லை. மனசாட்சி இல்லாமல் வதந்தி பரப்பாதீர்’ என உருக்கமாகப் பதிவிட்டார். “நடந்தது என்ன என்பது குறித்து போலீஸ் தரப்பிலிருந்தே விளக்கம் வெளியிடலாம். பல சர்ச்சைகளுக்கு இது முடிவுகட்டும்” எனக் காவல்துறைத் தலைமை அதிகாரியிடம் கேட்டார்களாம். அவரிடமிருந்து எந்த பதிலும் வராததால்தான் நடிகையே விளக்கம் வெளியிட்டாராம். #நானே பாதிக்கப்பட்டேன்... நேரடியாக பாதிக்கப்பட்டேன் மொமன்ட்!

அவ்வப்போது மனதில்பட்ட கருத்துகளை அப்படியே போட்டு உடைக்கும் ராஜ புள்ளியைக் கட்டுப்படுத்த முடியாமல் இலைக் கட்சி ரொம்பவே தடுமாறுகிறதாம். நடவடிக்கை ஏதாவது எடுத்தால், கட்சி விவகாரங்கள் பலவும் சந்திக்கு வந்துவிடும் என்பதால் ஆக்‌ஷன் எடுக்காமல், அடக்கி வாசிக்கிறார்களாம். ‘மீடியா பேட்டிகளைத் தவிருங்கள்’ என்று மட்டும் சொல்லியிருக்கிறார்களாம். #அவங்களுக்கும் கண்ணுல வந்துபோவுமா இல்லையா?

கிசுகிசு

தேர்தல் நிதி எனத் தன் பெயர் சொல்லி வசூல் வேட்டை நடத்திய தம்பிகள், அதை முறைப்படி தனக்குக் கொண்டுவராதது குறித்து ரகசிய விசாரணை நடத்திவருகிறார் அண்ணன் தலைவர். நிதி கொடுத்தவர்களின் பெயர்ப் பட்டியலை வாங்கி, நன்றி சொல்வதுபோல் அவர்களுக்கு போன் போட்டு “ஆமா, நீங்க எவ்வளவு கொடுத்தீங்க?” எனக் கேட்கிறாராம். தவறு செய்த சில தம்பிகள் தடதடத்துக் கிடக்கிறார்கள். #என்கிட்டயே கதை சொல்றானுங்க... புஹாஹா!

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி மாறலாமா எனக் கணக்கு போட்ட தோட்டத்துத் தலைவர், பழைய கூட்டணியிலேயே நீடிக்க முடிவெடுத்துவிட்டாராம். ஆளுங்கட்சி ரூட் க்ளியராக இல்லாததுதான் காரணமாம். கூடவே கப்பல் தலைவருக்குக் காட்டும் கரிசனமும் தோட்டத்துத் தலைவரை வெறுப்பேற்றுகிறதாம். அதனால், இருக்கும் கூட்டணியிலேயே சீட்டுகளை அதிகம் பெறுவதற்கான திட்டங்களைத் தீட்டத் தொடங்கிவிட்டாராம். #இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism