Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

மன்னர் மாவட்டத்தில் யாருக்கு அதிகாரம் என இரு மந்திரிகளுக்கு இடையே இப்போதே மல்லுக்கட்டு. இதற்கிடையில் டெல்லி செல்லும் பொறுப்புக்கு அறிவிக்கப்பட்ட புள்ளியும் அதே மாவட்டத்துக்காரராக அமைய, கோஷ்டிப்பூசல் கொடிகட்டிப் பறக்கிறது. இதெல்லாம் போதாது என, ‘நான் உதயநிதியின் ஆள்’ எனச் சொல்லி ‘கோட்டை’யின் முத்தான எம்.எல்.ஏ-வும் குடைச்சல் கொடுக்க, கட்சிக்காரர்கள் கதறிக்கிடக்கிறார்கள். #ஒண்ணா இருக்க கத்துக்கணும்!

‘ஸ்கூல் பேக்குகளில் மாஜிக்களின் புகைப்படங்களே இருக்கட்டும்’ எனப் பெருமிதம் காட்டியதில், முதன்மையானவரின் இமேஜ் ரொம்பவே உயர்ந்துவிட்டதாம். தேர்தல் முடிந்த பிறகும் முதன்மையானவருக்கு வழிகாட்டும் ஐபேக் டீம் இது குறித்து அறிக்கை கொடுத்து, ‘இதேபோல் மாதம் ஒரு விஷயம் மேற்கொள்ளுங்கள். இமேஜை ஏற்றிக்கொள்வது ரொம்ப முக்கியம்’ என்றதாம். #பில்டப் முக்கியம் பிகிலேய்ய்ய்ய்!

காவிக் கட்சியின் வீடியோ புள்ளிக்கு எதிராகக் கதர்க்கட்சியின் பிரகாசப் பெண்மணி தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். கைதுசெய்தே தீர வேண்டும் என்பதில் பிரகாசப் பெண்மணி கறாராக இருக்க, அவரை அமைதியாக்கச் சிலரைத் தூது அனுப்பினார்களாம். ‘இது கட்சிப் பிரச்னை இல்லை. பெண்களுக்கான பிரச்னை’ எனச் சொல்லி அம்மணி கொந்தளிக்க, தலைதெறித்த கணக்காக ஓடிவந்தார்களாம்! #ஓ... ஒரு தென்றல் புயலாகி வருதே...

காவிக் கட்சியின் பிரசாரப் பீரங்கியாக இருக்கும் அம்மணி ஒருவரின் நிர்வாணப் புகைப்படம் விசில் கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கிய ஒருவரின் கையில் சிக்கியதாம். புகைப்படத்தைக் காட்டி சில மிரட்டல் வேலைகளை அந்தப் பிரமுகர் செய்ய, ‘‘தாராளமாகப் புகைப்படத்தை வெளியிட்டுக் கொள்ளுங்கள். இந்த மிரட்டலெல்லாம் என்னிடம் எடுபடாது’’ எனப் பொளேர் பதில் கொடுத்தாராம். ஒரு படத்தின் காட்சிக்காக எடுக்கப்பட்ட நிர்வாணப் புகைப்படமாம் அது! #நனைய பயந்தா நதியில குளிக்க முடியுமா?!

கிசுகிசு

ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட தமிழ்நாட்டுப் பெண்ணுக்கு மாநில சார்பில் அறிவிக்கப்பட்ட உதவித்தொகை அறிவிப்பாகவே நிற்கிறதாம். ‘துறைரீதியாக வழங்கப்பட்ட தொகையை அரசு வழங்கிய தொகையாக எண்ணிக்கொள்ளுங்கள்’ என்கிறார்களாம் அதிகாரிகள். ‘துறைரீதியான தொகை தனி. முதல்வர் அறிவித்த தொகை தனி’ என விளக்கிச் சொல்லி விம்முகிறார்களாம் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர். #சொன்னாங்களே.... செய்வாங்களா...

பட்டியல் இனத்தவர்கள் குறித்து அவதூறாகப் பேசி, கைதுக்கு ஆளாகி அல்லாடும் நடிகை, இந்தச் சிக்கலுக்குக் காரணமே அழகுக்கலை நிபுணர் ஒருவர்தான் எனக் குமுறுகிறாராம். தனிப்பட்ட தகராறைப் பெரிதாக்கி, தனக்கு நெருக்கமான அதிகாரிகள் மூலமாக தன்னைக் கைதுசெய்ய வைத்த அழகுக்கலை நிபுணர் பற்றியும், அவருடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பற்றியும் வெளியே வந்ததும் பகிரங்கமாக முழங்கவும் ரெடியாகிவிட்டாராம். #என்னைப் பேசச் சொல்லாத... நான் கண்டபடி...

உள்ளாட்சித் தேர்தலில் உரிய வெற்றியை அடைந்தே தீருவது என்பதில் உறுதியாக இருக்கிறார் அண்ணன் தலைவர். அதற்காக மீண்டும் நிதி திரட்டி வெற்றி வாய்ப்புள்ள நிர்வாகிகளுக்கு இப்போதே பசை பரிசளிக்க நினைக்கிறாராம். இதற்காக ‘தாராளமய’ ஆட்களை அண்ணன் தலைவர் அணுக, ‘‘உங்களுக்குக் கொடுத்து ஆளுங்கட்சி ஆட்களைப் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை…’’ என்கிறார்களாம். தாராளமய ஆட்களுக்கு ஆளுங்கட்சித் தரப்பில் அவ்வளவு நெருக்கடியாம்! #கடைத்தேங்காய எடுத்து...

ஆளுங்கட்சியைச் சேர்ந்த யார் உதவி கேட்டாலும், மறுக்காமல் செய்துகொடுக்கிறாராம் மன்னர் மந்திரி. புதிய வழித்தடங்கள், பேருந்துகள், இடமாற்றங்கள் என எந்த உதவிக்கும் கட்சிக்காரர்களிடம் பசையை எதிர்பார்க்கக் கூடாது எனக் கறார் உத்தரவு போட்டிருக்கிறாராம். ‘பெரிய ஆட்களிடம் பசையைப் பார்க்கலாம். கட்சிக்காரர்களிடம் வேண்டாம்’ என இவர் பின்பற்றும் பாணியை மற்ற மந்திரிகளும் பின்பற்ற வேண்டுமென நினைக்கிறார்கள் கட்சி நிர்வாகிகள். #ஒரு வெளக்கைவெச்சு ஓராயிரம் வெளக்கேத்தலாம்!