Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

‘வெற்றியை மொத்தமாக அள்ளிக்கொடுத்ததற்கு இதுதான் நீங்கள் கொடுக்கும் பரிசா?’ எனக் கட்சித் தலைமைக்கு எதிராகக் கண்சிவக்கிறார்கள் மேயர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருந்த உடன்பிறப்புகள். பதவிக்குப் பலரும் முட்டிமோதிய நிலையில், தீர்வுக்கான ஒரே வழியாகத் தலைநகரின் மூன்று மாநகராட்சிகளையும் ஆதிதிராவிடருக்கு ஒதுக்கவைத்துவிட்டது ஆளும் தரப்பு. ‘பதிலுக்கு நாங்க காட்டப்போற உள்ளடி அரசியலையும் பார்க்கத்தானே போறாங்க’ என வியூகம் வகுக்கிறார்கள் வேதனையில் இருப்பவர்கள். #உடன்பிறப்புதான் வர்றாரு... உழட்டிவிடப் போறாரு..!

இலைக் கட்சியின் பல மாவட்ட அலுவலகங்கள், ஆளுமைப் பெண்மணிக்கு உதவியாளராக இருந்த மலர்ப் பிரமுகரின் பெயரில்தான் இன்றளவும் இருக்கின்றனவாம். முறைப்படி அதைக் கட்சிப் பெயருக்கு மாற்றச் சொல்லி, பல மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்திவருகிறார்களாம். ஆனாலும், இது குறித்து மலர்ப் பிரமுகரிடம் எப்படிக் கேட்பது எனப் புரியாமல் பணிவானவரும் துணிவானவரும் திண்டாடி வருகிறார்கள். #குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்... குழப்பத்திலே ரெட்டையருக்குத் திண்டாட்டம்!

மாநகராட்சி, நகராட்சித் தேர்தல்களில், தகுதியான மன்ற நிர்வாகிகளைக் களமிறக்கச் சொல்லி, மன்றத் தலைமைக்கு உத்தரவிட்டிருக்கிறாராம் ‘மாஸ்டர்’ பிளானிலிருக்கும் நடிகர். வெற்றிபெற முடியாவிட்டாலும் கணிசமான வாக்குகளை வாங்கி, கவனம் பெற வேண்டும் எனச் சொல்லியிருக்கிறாராம். ‘தேர்தல் நேரத்தில் எங்களை ஆதரிக்கச் சொல்லி ஓர் அறிக்கை மட்டும் வெளியிடுங்கள்… பல இடங்களில் வென்று காட்டுகிறோம்’ என மன்றத்தினர் சொல்ல, ‘பார்க்கலாம்’ என பதில் வந்திருக்கிறதாம். #நம்ம சனம் வெறித்தனம்!

நல்ல அறிவாளி என அறியப்பட்ட டெல்டா மாவட்ட மாஜி மந்திரி அவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சீட் கேட்டார். கிடைக்கவில்லை. ஆனாலும், நிராகரிப்பைத் தாங்கிக்கொண்டு தேர்தல் பணியாற்றினார். ஆளுங்கட்சியாக அமர்ந்த பிறகும் சிபாரிசு, கோரிக்கை, உதவி என எதற்காகவும் கட்சித் தலைமையை அணுகாமல், மாவட்டப் பணிகளை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தார். இதற்காகவே, ‘உங்களோட மாறாத மனசுக்கான பரிசு’ எனச் சொல்லி திடீர் பதவி கொடுத்து அவரை நெகிழவைத்தாராம் முதன்மையானவர். #நிராகரிப்புக்குப் பின் நெகிழ்ச்சி... மகிழ்ச்சி!

கிசுகிசு

ஒருவழியாக டெல்லியின் உச்சப்புள்ளியைச் சந்தித்து, முதன்மையானவரின் கடிதத்தை நேரில் கொடுத்துவிட்டார்கள் ஆளுங்கட்சிப் புள்ளிகள். இந்தச் சந்திப்பில், உச்சப்புள்ளியோடு நெருங்க மில்க் பிரமுகர் காட்டிய அக்கறையும் மெனக்கெடலும் அநியாயத்துக்கு இருந்ததாம். ‘எங்களுக்குள் எவ்வித வருத்தமும் இல்லை’ என்பதுபோல் காட்டிக்கொள்ள சிரிப்பும் நெருக்கமுமாக மில்க் பிரமுகர் பல வித்தைகள் காட்ட, உச்சப்புள்ளி அதைச் சட்டைசெய்யவே இல்லையாம். ‘இது தேவையா?’ எனக் கிசுகிசுத்துச் சிரித்தார்களாம் மற்ற எம்.பி-க்கள். #அசிங்கமாப்போச்சு குமாரு!

தன் மகனை மேயர் பதவிக்குக் களமிறக்க பக்காவாகக் காய்நகர்த்திவந்தார் மில்க் மினிஸ்டர். இல்லத்து ரூட் வழியாக முதன்மையானவரின் கவனத்துக்கு விஷயத்தைச் சொல்லி ஓகே வாங்கினார். சம்பந்தப்பட்ட சரகத்துக்குள் போட்டியாளர்கள் யாரும் வந்துவிடாதபடி பலரையும் அணுகிப் பேசி, உரிய கவனிப்புகளைச் செய்துவைத்திருந்தார். கூட்டணிக் கட்சியினரையும் வாய்ப்பு கேட்காதபடி வளைத்துப்போட்டிருந்தார். ஆனால், அவர் சம்பந்தப்பட்ட மாநகராட்சி ஆதிதிராவிடருக்கு ஒதுக்கீடு செய்யப்பட, ‘மொத்த முயற்சிகளும் பாழாப்போச்சே’ எனப் புலம்பிப் புரளுகிறாராம் மில்க் மினிஸ்டர். #அத்தனை ராஜதந்திரங்களும் நாசமாகிவிட்டதே!

பம்பரக் கட்சியின் தீர்மானக்குழுவிலிருந்த, மறைந்த டெல்டா மாவட்டத் தலைவர், தன் மனைவியை உள்ளாட்சித் தேர்தலில் நிறுத்தி, கட்சிக்கு முதல் வெற்றியைப் பெற்றுத் தந்தவர். அவர் மறைந்தாலும், கட்சி மாறாமல் இன்றைக்கும் பம்பரக் கட்சியிலேயே பயணிக்கிறார் அந்தப் பெண்மணி. சமீபத்திய ஒதுக்கீட்டில் பெண்கள் பொதுப்பிரிவுக்குக் கோட்டையான பகுதி ஒதுக்கப்பட்டிருப்பதால், அந்தப் பெண்மணிக்காக அந்த சீட்டைக் கூட்டணிப் பங்கீட்டில் வாங்க நினைக்கிறாராம் பம்பரத் தலைவர். நன்றிக்கடனாக இதைச் செய்யச்சொல்லி மகனுக்கு அசைன்மென்ட் கொடுத்திருக்கிறாராம். # ‘விசு’வாசத்துக்கு ‘ஜெயம்’ உண்டாகட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism