Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

மனுநீதிச் சோழனைப்போல் தமிழக முதல்வர் ஆட்சி நடத்துகிறார்” எனப் பெயரில் ‘உண்மை’கொண்ட அமைச்சர் வானளாவப் புகழ, பெரிய இடத்திலிருந்து ஏகக் கொந்தளிப்பாம்.

கிசுகிசு

மனுநீதிச் சோழனைப்போல் தமிழக முதல்வர் ஆட்சி நடத்துகிறார்” எனப் பெயரில் ‘உண்மை’கொண்ட அமைச்சர் வானளாவப் புகழ, பெரிய இடத்திலிருந்து ஏகக் கொந்தளிப்பாம்.

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

இலைக் கட்சியின் துள்ளும் எம்.எல்.ஏ மீதான பாலியல் புகார், கட்சிக்குள் பூதாகரத்தைக் கிளப்பிவிடுமோ எனப் பலருக்கும் அச்சமாம். இலைக் கட்சியின் மகளிரணி நிர்வாகிகள் பலர் குறித்த செல்போன் பேச்சு வெளியே வந்திருக்கும் நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் பலவீனம் குறித்த பேச்சுகளும் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றனவாம். அவையெல்லாம் வெளியே வந்தால், கட்சி மானமே கப்பல் ஏறிவிடும் அபாயம் இருக்கிறதாம். அதனால், மகளிரணி நிர்வாகிகளை அமைதியாக்கி, விவகாரத்தை சைலன்ட்டாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. #கட்சிக்கு ஆடியோவுலதான் கண்டம்போல!

கிசுகிசு

திடீரென இலைக் கட்சிமீது காவிக் கட்சியின் சாத்வீகத் தலைவர் பாய்ந்த பின்னணி பலருக்கும் புரிபடவில்லையாம். இத்தனைக்கும் ஏற்கெனவே இலைக் கட்சியில் இருந்தபோது, பணிவானவருக்கும் துணிவானவருக்கும் இணக்கமாக இருந்தவர்தான் சாத்வீகத் தலைவர். இலைக் கட்சியைத் தாக்கியதோடு மட்டுமல்லாமல், காவிக் கட்சியின் மாஜி காவல் அதிகாரியை ஒரேயடியாகப் புகழ்ந்தும் பேசியதால், ‘கூட்டணியை உடைக்கிற அசைன்மென்ட்டுடன் இயங்குகிறாரோ’ என இரு கட்சியினருக்கும் சந்தேகம். இதற்கிடையில் இலைக் கட்சியின் ஆன்லைன் அணியினர், ‘எங்கள் தயவில் எம்.எல்.ஏ-வான நீங்கள் பதவியை உதறிவிட்டு மீண்டும் போட்டியிடத் தயாரா?’ என ரவுண்டுகட்ட, அதற்கும் பதிலடி கொடுக்க ரெடியானாராம் சாத்வீகத் தலைவர். காவிக் கட்சியின் மாஜி காக்கி படாதபாடுபட்டு அவரைச் சமாதானப்படுத்தினாராம். #ஃபர்னிச்சரை படீர்னு உடைக்கப் பாக்குறீங்களே... ஏன் கோப்பால்?!

கிசுகிசு

“மனுநீதிச் சோழனைப்போல் தமிழக முதல்வர் ஆட்சி நடத்துகிறார்” எனப் பெயரில் ‘உண்மை’கொண்ட அமைச்சர் வானளாவப் புகழ, பெரிய இடத்திலிருந்து ஏகக் கொந்தளிப்பாம். “ஆட்சியின் நல்ல நடவடிக்கைகளைப் பற்றி மட்டும் பேசுங்க. இஷ்டத்துக்குப் புகழ்ந்து பேசி, மக்களை முகம் சுளிக்கவெக்காதீங்க…” எனக் கறார் காட்டப்பட்டதாம். “முதல்வரைப் பாராட்டித்தானே பேசினார். அதற்கு ஏன் பாயுறாங்க?” எனப் புரியாமல் புலம்புகிறார்களாம் அமைச்சருக்கு ஆதரவானவர்கள். #‘ஏன்யா... நான் சரியா பேசுறனா?’ மொமன்ட்!

கிசுகிசு

“தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியது தவறுதான். அதுக்கான பழியைத் தீர்த்துட்டீங்க. மேற்கொண்டும் இடைஞ்சல் கொடுக்காதீங்க. நான் சட்டப்படிப் பார்த்துக்குறேன்” என ஆளுந்தரப்பிடம் ஆள் அனுப்பிப் பேசினாராம் மாஜி மில்க் மினிஸ்டர். ‘இனி, பழிவாங்கல் இருக்காது’ எனத் தூதுபோனவர் நம்பிக்கையாகச் சொன்னாராம். அடுத்த நாளே மதுரை ஆவினில் விஜிலன்ஸ் அதிகாரிகள் சோதனை நடத்த, ரொம்பவே சோர்ந்துபோனாராம் மாஜி. “என்னை நிரந்தரமா உள்ளேவெக்க முயற்சி நடக்குது” என ஆதங்கப்பட்டவர், அடுத்தபடியாக டெல்லியை நோக்கி ஆளனுப்பியிருக்கிறாராம். #இவ்வளவு பயத்தை உள்ள வெச்சுக்கிட்டா... அவ்வளவு பேச்சுப் பேசுனீங்க?!

கிசுகிசு

பல மாஜிக்களின் வீட்டில் ரெய்டோற்சவம் நடந்த நிலையில், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ரொம்பவே முன்னெச்சரிக்கையாக, பதுக்கவேண்டியவற்றைப் பதுக்கி, பாதுகாப்பாக இருந்தார் அன்பான மாஜி அமைச்சர். தன்னை நோக்கி யாரும் வராததால், ‘பழிவாங்கும் பட்டியலில் தன் பெயர் இல்லைபோல’ என நினைத்துப் பதுக்கிய ஆவணங்களைப் பழைய இடத்துக்கே கொண்டுவந்தாராம். இந்த நிலையில், அவர் சம்பந்தப்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தி அத்தனை ஆவணங்களையும் `லபக்’கியிருக்கிறார்கள் விஜிலன்ஸ் அதிகாரிகள். ‘இன்னும் சில நாள்கள் எச்சரிக்கையாக இருந்திருக்கலாமோ’ என வருந்துகிறாராம் அன்பான மாஜி. #வட போச்சே!

கிசுகிசு

‘உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடக் கூடாது’ என உயர் நீதிமன்றத்தில் ஆளும் தரப்பு அழுத்தமாகச் சொன்னாலும், உள்ளுக்குள் உதறல் குறைய வில்லையாம். ‘தேர்தலைச் சில காலம் தள்ளிப்போட்டால் முழுமையான வெற்றியை அறுவடை செய்ய முடியும்’ என்பதில் உறுதியாக நிற்கிறார்களாம் கட்சியின் சீனியர்கள். தேர்தலைத் தள்ளிப்போடச் சொல்லி உயர் நீதிமன்றத்தைச் சிலர் நாடியதை, மிகுந்த நம்பிக் கையாகப் பார்த்தார்களாம். ‘பொங்கல் பரிசு உள்ளிட்ட பல விஷயங்களில் ஆளும் தரப்புக்கு எதிர்ப்பான மனநிலை இப்போது நிலவுகிறது’ என்பதை முதன்மை யானவர் கவனத்துக்கும் சொல்லியிருக்கிறார்களாம். #‘பொங்க’ வெச்சுருவாய்ங்கனு பயம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism