Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

வருத்தப்படாத வாலிபர் நடிக்கும் படங்களின் அடுத்தடுத்த அதிரிபுதிரி வெற்றி, திரைத்துறையை மட்டுமல்ல… அரசியல் வட்டாரத்தையும் அழுத்தமாக கவனிக்க வைத்திருக்கிறது. “பையன் சினிமாவில் மட்டும் சாதிக்க நினைக்கிறாரா இல்லை, சமூகம், சந்துபொந்து என அரசியலை நோக்கி வருகிற எண்ணமெல்லாம் இருக்கிறதா?” என அவருக்கு நெருக்கமான ஆட்களைத் துருவத் தொடங்கியிருக்கிறது உளவுத் தரப்பு. வருத்தப்படாத வாலிபருக்குப் பெருகிவரும் மக்கள் ஆதரவுதான் உளவுத்தரப்பை இந்த அளவுக்கு உஷார்படுத்தியிருக்கிறதாம். “எதிர்காலத் திட்டமெல்லாம் எதுவும் கிடையாது… கனவு, இலக்கு எல்லாமே சினிமா மட்டும்தான் சார்…” என நெருக்கமானவர்கள் சொன்ன பிறகுதான் சம்பந்தப்பட்டவர்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு பிறந்ததாம். #ஓம்மேல ஒரு கண்ணு..!

கிசுகிசு

சென்னை பயணம் முடிந்து விமானத்தில் கிளம்புவதற்கு முன்பு, மாஜி காக்கியுடன் சில நிமிடங்கள் மனம்விட்டுப் பேசினாராம் பிரதமர். கூட்டத்துக்கான ஏற்பாடுகள் சிறப்பாக அமைந்ததைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர், ‘கலை நிகழ்ச்சிகளை யார் ஏற்பாடு செய்தது?’ எனக் கேட்டாராம். சமீபத்தில் கலை இலக்கியப் பிரிவுக்குத் தலைவரான இரண்டெழுத்து சினிமாக்காரரின் பெயரைச் சொன்னாராம் மாஜி காக்கி. ஏற்கெனவே இந்தப் பதவியிலிருந்த நடனப் பெண்மணியை, மாஜி காக்கி தடாலடியாகத் தூக்கியது சர்ச்சையாக வெடித்துவரும் நிலையில், புதிதாகப் பொறுப்புக்கு வந்தவரை பிரதர் கவனம் வரை கொண்டுபோய், தன் தேர்வு சரியானதுதான் என நிரூபித்திருக்கிறார் மாஜி காக்கி. இதனால் அம்மணியின் ஆத்திரம் இன்னும் அதிகமாகியிருக்கிறதாம். விரைவில் தடாலடி பிரஸ் மீட் நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள். #ஆட்டமா... தேரோட்டமா? நோட்டமா... ‘சதி’ராட்டமா?

கிசுகிசு

பவன்காரர் டெல்டா பக்கம் விசிட் அடித்தபோது, போராட்டக்காரர்கள் மூலமாகச் சங்கடம் ஏற்பட்டதால், டி.ஜி.பி விளக்கம் கொடுக்கும் அளவுக்கு விவகாரம் முற்றிப்போனது. இதையடுத்து பவன்காரர் எங்கே போனாலும் பாதுகாப்பு, போக்குவரத்து நிறுத்தம் என அநியாய கவனம் காட்டப்படுகிறதாம். சமீபத்தில் பவன்காரர் திருவாரூர் போய் வர, பல மணி நேரத்துக்குப் போக்குவரத்தை நிறுத்தி தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட மக்களை போலீஸ் படுத்தியெடுத்துவிட்டதாம். “இந்த மாதிரி இன்னும் நாலு ஊர்களுக்குப் பவன்காரர் போனார்னா, மக்களே அவரை மாற்றச் சொல்லிப் போராடத் தொடங்கிடுவாங்க…” என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.#ஓ... வண்டி அந்த ரூட்ல போகுதா?!

கிசுகிசு

இலைக் கட்சியின் பணிவானவரையும் துணிவானவரையும் வரவைத்து, முக்கால் மணி நேரத்துக்கும் மேலாகப் பேசிய பவர்ஃபுல் தலைவர், “ஆளும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை நான் இன்னும் தொடங்கவில்லை. இன்னும் சில மாதங்கள் பொறுத்திருந்து பாருங்கள்…” எனப் பூடகமாகச் சொன்னாராம். பவர்ஃபுல் தலைவர் ஆங்கிலத்தில் பேசிய விஷயம் பணிவானவருக்கும் துணிவானவருக்கும் சரியாகப் புரியவில்லையாம். ஆளும் அரசுமீது பவர்ஃபுல் தலைவருக்கு இருக்கும் கோபத்தை உடன் நின்றவர்கள் தெளிவாகச் சொன்ன பிறகுதான் இருவருக்கும் நிம்மதி பிறந்ததாம். கூடவே, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காவிக் கட்சியுடன்தான் கூட்டணி என்பதும் அந்தச் சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுவிட்டதாம். #எஸ்டிடின்னா வரலாறுதானே!?

கிசுகிசு

இலைக் கட்சி சார்பாக டெல்லிக்குச் செல்லும் இருவர் பட்டியலில், பணிவானவர் ரூட்டில் சைலன்ட்டாக இடம்பிடித்த இதிகாசப் புள்ளியை வியந்து பார்க்கிறார்கள் பலரும். அனுமானப் பட்டியலில் அவர் பெயர்கூட அடிபடாத நிலையில், ‘விசுவாசத்தின் அடையாளம் அவர்தான்’ எனச் சொல்லி டிக் அடித்தாராம் பணிவானவர். டெல்லியில் ஏற்கெனவே கோலோச்சும் தன் வாரிசுக்கு, உற்ற துணையாக இருப்பார் என்பதற்காகத்தான் இப்படியொரு விசுவாசியைத் தன் சார்பாக அறிவித்தாராம் பணிவானவர். சமூகரீதியாகவும் கட்சிரீதியாகவும் தனக்குக் கிடைத்த வெற்றியாகவே இதை நினைக்கிறாராம் பணிவானவர். ‘இவரை மட்டும் எப்பவும் கணிக்கவே முடியலையே…’ எனத் துணிவானவரே நொந்துபோனாராம். #அவரை அவராலேயே கணிக்க முடியாதே பாஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism