Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

இலைக் கட்சி விவகாரத்தில் பணிவானவர் திடீரென மீடியாக்களைச் சந்தித்த பின்னணியில், டெல்டா மாவட்டத்தின் ட்ரீட்மென்ட் புள்ளிதான் இருந்தாராம். பெரும்பான்மை ஆதரவு இருக்கும் தைரியத்தில் துணிவானவர் எதற்கும் துணிவார் என்கிற தகவல் வந்ததால், பணிவானவரைப் பாய்ச்சல் காட்டச் சொன்னாராம். பிரஸ் மீட் கொந்தளிப்பைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத துணிவானவர், டெல்டா மாவட்டத்தின் இன்னொரு ‘பெருந்தலை’ மாஜியிடம் பேசினாராம். “சாதிரீதியான ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்தி வருகிறார்கள். அமைதியாக இருந்து காரியம் சாதிப்பதே சரி…” என அவர் சொன்ன பிறகே, பொறுத்திருந்து பாய முடிவெடுத்தாராம் துணிவானவர். #சூதானமா இருக்கணும் குமாரு!

கிசுகிசு

டெல்டா மாவட்டங்களில் காவிக் கட்சி வளர்வதாக அடுத்தடுத்துப் பரப்பப்படும் செய்திகள், முதன்மையானவரைக் கடுமையான கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம். ‘இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த மாவட்டங்களைக் கழகக் கோட்டையாக மாற்றிய நம் சீனியர் நிர்வாகிகளைக் களமிறக்கவேண்டிய காலம் இது’ என மந்திரிகள் சிலரிடம் சொன்னாராம் முதன்மையானவர். விரைவில் டெல்டா மாவட்டங்களில் கட்சிரீதியான களையெடுப்பும், புதிய நியமனங்களும் நடக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். #உரம்லாம் போடுவீங்களா?

கிசுகிசு

இலைக் கட்சியில் சலசலப்பு நடந்துகொண்டிருக்கையில், ‘எங்கள் கூட்டணியைத் தவிர்த்ததுதான் தோல்விக்குக் காரணம்’ எனக் கப்பல் தலைவரின் மனைவி காரசாரம் காட்டிப் பேசினார். இலைக் கட்சியின் துணிவானவர்தான் கடைசி நேரத்தில் கப்பல் தலைவரின் கட்சியைக் கூட்டணியிலிருந்து கழற்றிவிட்டாராம். அதனால் அம்மணிக்கு உள்ளிருந்த கோபம், சர்ச்சையான நேரத்தில் வெடித்ததாம். சின்ன தலைவிக்கு ஆதரவாக அம்மணி அறிக்கை வெளியிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறார்கள். #குட் காம்பினேஷன்!

கிசுகிசு

அதிகாரிகள் மாற்றத்தில் பெரிய இடத்தைக் குறிவைத்தார் ஹெல்த்தியாக இருந்த ஐ.ஏ.எஸ். முதன்மையானவருக்கு நெருக்கமான வட்டத்தின் ஆதரவையும் பெற்றுவைத்திருந்தார். ஆனால், அந்த பவர்ஃபுல் பதவியில் அவர் போய் உட்கார்ந்தால், தங்களுக்குப் பெரிய தலைவலியாகிவிடும் என ‘நார்த்’ லாபி பக்காவாக ஸ்கெட்ச் போட்டு, சாதாரணத் துறைக்கு மாற்றலாக வைத்ததாம். ஆனாலும், ஆய்வு, அதிரடி என ஜபர்தஸ்து காட்டிக்கொண்டுதான் இருக்கிறார் அந்த ஐ.ஏ.எஸ். #வீரம்னா என்னான்னு தெரியுமா... பயப்படாத மாதிரி நடிக்கிறது!

கிசுகிசு

இலைக் கட்சியின் சலசலப்புகளை சைலன்ட்டாக கவனித்துக்கொண்டிருக்கிறார் சின்ன தலைவி. பணிவானவர் தரப்பிலிருந்து பேச வந்த ஆட்களை இந்த முறை சின்ன தலைவி சந்திக்கவில்லையாம். இக்கட்டான நேரங்களில் தனக்கு செல்வாக்கைத் தேடிக்கொள்ளவே பணிவானவர் தன் பக்கம் ஆட்களை அனுப்புவதாகத் தெளிவாக உணர்ந்துகொண்டாராம். பணிவானவர் தரப்பில் அவருடைய தம்பியே அனுப்பப்பட்டபோதும், ‘இப்போதைக்கு நாம் எந்த உத்தரவாதமும் கொடுக்கவேண்டியதில்லை’ எனச் சொல்லிவிட்டாராம் சின்ன தலைவி. #இதெல்லாம் ரொம்பத் தப்புங்க!

கிசுகிசு

நடுநிலைக் கட்சியிலிருந்து ஆளுங்கட்சிப் பக்கம் வந்த தொழிலதிபர், கான்ட்ராக்ட், கமிஷன் எனப் புகுந்து விளையாடுகிறாராம். ‘நான் சொல்வதுதான் நடக்கும்’ எனப் பலதரப்பட்ட துறைகளிலும் தலையீடு செய்து பந்தா காட்டுகிறாராம். ‘மிகப்பெரிய கோடீஸ்வரர், ஏன் இந்த அளவுக்கு இறங்கி வருகிறார்?’ எனக் கட்சிக்குள்ளேயே ஆதங்கக் குரல்கள் அதிகரித்திருக்கின்றன. நாளுக்கு நாள் அவரது அலப்பறைகள் அதிகமாகிக் கொண்டே போகின்றனவாம். #கரம் புறம் நீட்டாதீர்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism