Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

ஆளும் தரப்பு சினிமா புள்ளியின் வருமானங்கள், மதுரைக்கார ஃபைனான்ஸியர் ரூட்டில்தான் வெளிப்புழக்கத்துக்கு விடப்பட்டு லாபம் பார்க்கப்படுகிறதாம். ‘மூன்று பைசா இன்டரஸ்ட்’ என மதுரைக்காரருக்குக் கைமாறி, அவர் ரூட்டில் ‘ஐந்து பைசா’வாக மாறி சினிமாக்காரர்களுக்குக் கொடுக்கப்படுகிறதாம். இந்த விஷயங்களைத்தான் ரெய்டு போன அதிகாரிகள் துருவித் துளைத்தெடுத்தார்களாம். ஆனாலும், பல ரெய்டுகளைப் பார்த்த அனுபவத்தில், வாரிசுக்கு எதிராக மதுரைக்கார ஃபைனான்ஸியர் எதுவும் வாய் திறக்கவில்லையாம். ஆவணங்களாகவும் பெரிதாக எதுவும் சிக்கவில்லையாம். ரெய்டு விஷயங்கள் மதுரைக்காரர் கவனத்துக்கு முன்கூட்டியே சொல்லப்பட்டதாகவும் கிசுகிசுக்கிறார்கள். அசுர நடிகர், இசை ஹீரோ, பாக்ஸிங் நாயகன் என முன்னணி நட்சத்திரங்களுடனான பணப் பரிமாற்றங்கள் குறித்தும் விசாரணையில் துருவ, அதற்கு மட்டும் உரிய விளக்கங்களைச் சொன்னாராம் மதுரைக்காரர். #‘அதுக்கு மட்டும் கத்துதா அந்தப் பல்லி’ மொமன்ட்!

கிசுகிசு

சொல்லிக்கொடுக்கும் துறையில் மாணவர்களுக்கான திட்டங்கள் தாமதமாகிக்கொண்டே போக, அது குறித்து அதிகாரிகளிடம் பெயரளவுக்குக்கூட விசாரணை நடத்த மறுக்கிறாராம் அன்பான அமைச்சர். பல பள்ளிகளுக்குப் புத்தகப் பைகள் வழங்கப்படாதது குறித்து சமீபத்தில் அமைச்சரிடம் ஒருவர் முறையிட, “இப்போதான் ரெடியாகுது. சீக்கிரமே கொடுத்துடுவோம்” என்றவர், அது குறித்து அதிகாரிகளைத் துளைத்தெடுப்பார் எனப் பலரும் நினைத்தார்களாம். ஆனால், ஏன் தாமதம் என்றுகூட அமைச்சர் விசாரிக்கவில்லையாம். #அதிகாரிகள்மீது அப்படி என்னதான் அன்போ?!

கிசுகிசு

இலைக் கட்சியின் சீனியர் தலைவரை சின்ன தலைவி தேடிப்போய் சந்திக்க, துணிவானவருக்குத் தூக்கிவாரிப்போட்டதாம். சின்ன தலைவியின் அத்தனை நகர்வுகளையும் சரியாகக் கணித்துவைத்திருந்தவர், இந்த விஷயத்தைக் கொஞ்சமும் யோசிக்கவில்லையாம். விஷயம் அவர் கவனத்துக்கு முன்னரே தெரியவந்திருந்தால், அந்த சீனியர் தலைவரையும் தன் பக்கம் இழுத்துப்போட்டிருப்பாராம். இதே வரிசையில் தனிமையில் தத்தளிக்கும் சீனியர்கள் யார் யார் என லிஸ்ட் எடுக்கச் சொல்லியிருக்கும் துணிவானவர், அவர்களுக்கான சாதகங்களைக் கட்சிக்காரர்கள் மூலமாகச் செய்துகொடுக்கச் சொல்லியிருக்கிறாராம். #அத்தனைக்கும் ஆசைப்படு!

கிசுகிசு

அரசியலை நோக்கிக் கால்வைக்க எல்லாவித முஸ்தீபுகளையும் செய்யத் தொடங்கியிருக்கிறார் மெர்சலான நடிகர். இந்த நிலையில் அவரின் தந்தை 76,000 ரூபாயைக் கட்ட முடியாத விஷயத்துக்காக வீட்டுப் பொருள்களை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட, மெர்சலான நடிகர் கொந்தளித்தாராம். “என்னைக் கேவலப்படுத்தவே இப்படிப் பண்றார்… அவரால இந்தக் குறைவான தொகையைக் கட்டியிருக்க முடியாதா?” எனக் குடும்பத்தினரிடம் குமுறினாராம். “இது என் விவகாரம். நான் பார்த்துக்குறேன். நான் அவர்கிட்ட போய் கடன் கேட்டேனா என்ன?” எனச் சமாதானம் பேசியவர்களிடம், பதிலுக்குப் பாய்ந்தாராம் அப்பா. இருவருக்கும் இடையே சமாதானம் செய்துவைக்காவிட்டால், அடுத்தடுத்து இத்தகைய சங்கடங்கள் தொடர வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள் குடும்பத் தரப்பில். #நீயும் நானுமா... கண்ணா... நீயும் நானுமா?

கிசுகிசு

காவிக் கட்சியின் காக்கி மாஜி, அடுத்தகட்டமாக மில்க் மினிஸ்டர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார். பால் பாக்கெட்டுகளில் மில்லி அளவில் குறைவாக்கி பேக் பண்ணப்படும் வகையில், கோடிக்கணக்கான அளவில் மோசடி நடப்பதாகக் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார் காக்கி மாஜி. மில்க் மினிஸ்டருக்கு எதிராக அவர் வகிக்கும் துறைக் குள்ளேயே இருக்கும் அதிகாரிகள் சிலர்தான் இந்த விவரங் களைக் காக்கி மாஜியின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்களாம். ‘இப்படியெல்லாம் மோசடி செய்ய முடியுமா?’ என அதிர்ந்துபோன காக்கி மாஜி, கடையில் சில பால் பாக்கெட்டுகளை வாங்கிவரச் சொல்லி டெஸ்ட் செய்து பார்த்தாராம். மில்லி அளவில் குறைவு தெரியவர, அதன் பிறகுதான் கொந்தளித்தாராம். காக்கி மாஜி மீதான கடுப்பைவிட, போட்டுக்கொடுத்த அதிகாரிகள் மீதுதான் கடும் கோபத்தில் இருக்கிறாராம் மில்க் மினிஸ்டர். #பாழாப்போச்சு!