அலசல்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

சட்டம்-ஒழுங்கை கவனிக்கும் முக்கியக் காக்கி அதிகாரி, சீக்கிரமே ஓய்வுபெறவிருக்கிறார். அந்த இடத்தைப் பிடிக்க, காக்கி வட்டாரத்துக்குள் கடுமையான போட்டி. தமிழ் ஆட்களா, பிற மாநிலத்தவரா என்கிற அளவுக்குப் பிரச்னை பூதாகரமாகிவிட்டதாம். சிட்டியை கவனிக்கும் இரட்டை அதிகாரிகளில் ஒருவர்தான் அந்த இடத்துக்கு ஓகே செய்யப்படுவார் என பலமான பேச்சு இருக்கிறது. அதேநேரம் கடந்த தி.மு.க ஆட்சியில் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ‘எடக்கு மொடக்கு’ அதிகாரியை அந்த இடத்துக்குக் கொண்டுவர நினைக்கிறதாம் குடும்பம். ‘பவரான இடத்துக்கு யார்?’ என பெட் கட்டாத குறையாகப் பட்டிமன்றம் நடக்கிறது. # ‘அதுக்குள்ளயா!?’ மொமண்ட்

சின்ன தலைவிக்குச் சொந்தமான சினிமா நிறுவனம் விற்பனையான தகவல் இப்போதுதான் பரபரப்பாகியிருக்கிறது. நாம் இரண்டு வாரங்களுக்கு முன்னரே அது குறித்துச் சொல்லியிருந்தோம். இந்த நிலையில், தென் மாவட்டங்களில் வாங்கிப்போட்டிருக்கும் நிலங்களையும் விற்கிற வேலைகளில் இறங்கியிருக்கிறது சின்ன தலைவித் தரப்பு. பினாமி பெயரிலுள்ள நிலத்தையும் உரியவர்களுக்கே கைமாற்றிக் கொடுக்கிறார்களாம். லீகல் பிரச்னையில் இருக்கும் சொத்துகள் தவிர்த்து, மற்றவற்றை ஒரு மாதத்துக்குள் விற்றுக் காசாக்கத் திட்டமாம். ‘அப்படியென்ன பணத்துக்கு அவசரத் தேவை?’ எனத் தெரியாமல் திண்டாடுகிறார்கள் உடனிருப்பவர்கள். #காசு... பணம்... துட்டு... மணி... மணி!

கிசுகிசு

இலைக் கட்சியில் அங்கேயும் இங்கேயுமாகப் போக்குக் காட்டிக்கொண்டிருக்கும் மாஜிக்களிடம் தெளிவாகப் பேசினாராம் துணிவானவர். “சமூகப் பாசத்தில் நீங்கள் பணிவானவருடன் பேசிவருவது எனக்குத் தெரியும்… இனியும் அப்படி நெருக்கம் பாராட்டினால், நீங்கள் அவர் பக்கமே போய்விடுங்கள்…” என தடாலடியாகச் சொன்னாராம் துணிவானவர். தென் மாவட்டத்தில் அவர் பெரிதாக நம்பும் ‘நவரச’ மாஜிதான் இருதலைக்கொள்ளி மாஜிக்களை இப்படி எச்சரிக்கும்படி போட்டுக்கொடுத்தாராம். “யார் பக்கம் பவர்னு தெரியறதுக்கு முன்னாலேயே இப்படி தடாலடி காட்டுறாரே…” என எச்சில் விழுங்கியிருக்கிறார்கள் அந்த மாஜிக்கள். #கடுப்பேத்துறாங்க மை லார்ட்!

கதர்க் கட்சியின் மாநிலப் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள மிக கவனமாக இருந்தார் தற்போதிருக்கும் தலைவர். யூத்தான ஆட்கள் சிலர் டெல்லியின் வாரிசைச் சந்தித்து பதவியைக் கைப்பற்ற வியூகம் வகுத்தபோதுகூட, ‘அதற்கெல்லாம் வாய்ப்பில்லை’ என கெத்தாக இருந்தார். ஆனால், சமீபத்தில் நடந்த உட்கட்சித் தகராறு டெல்லி வரை போக, தற்போதைய தலைவருக்கு உதறல் வராத குறையாம். ‘தலைவர் மாற்றம் ஏற்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை’ என அவருக்கு ஆதரவான டெல்லி சோர்ஸுகள் சொல்ல, தன்னிலை விளக்கம் கொடுக்க, வாரிசிடம் நேரம் கேட்டிருக்கிறாராம் தலைவர். #‘சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு?’ மொமன்ட்!

கிசுகிசு

ரிசர்வ் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு மரியாதைக் குறைவு செய்யப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு போனிலேயே உத்தரவு போட்டிருக்கிறாராம் கோட்டையின் உச்ச அதிகாரி. ‘அரசியல் தலையீடு இருந்தால், என் கவனத்துக்குத் தெரியப்படுத்துங்கள். நானே உரியவர்களிடம் சொல்லி கடும் நடவடிக்கை எடுக்கவைக்கிறேன்’ என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்குச் சொல்லியிருக்கிறாராம். தலித் ஊராட்சி மன்றத் தலைவர்களின் தற்போதைய நிலை குறித்து தனிப்பட்ட அறிக்கையும் கேட்டிருக்கிறாராம். #நெசமாத்தான் சொல்றியா?!