Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

சில நாள்களுக்கு முன்பு, முதன்மையானவருக்குத் தங்கள் தயாரிப்பை நேரில் வழங்கிச் சிறப்பித்தது ஒரு நிறுவனம். மாணவர்களுக்கு உதவுகிற ஒரு திட்டத்தின் டெண்டரைப் பெறவே அந்த நிறுவனம் முதன்மையானவரைச் சந்தித்தாக அப்போதே பரபரப்பானது. ஆனால், உண்மை என்ன தெரியுமா? ‘தயவுசெய்து அரசு டெண்டரை எங்களுக்குக் கொடுக்காதீர்கள். அந்தத் துறையினர் கேட்கிற கமிஷனைக் கொடுக்கிற சக்தி எங்களுக்கு இல்லை’ என்றுதான் அந்த நிறுவனம் முதன்மையானவரிடம் சொன்னதாம். அரசு அறிவிக்கப்போகும் டெண்டரிலும் அந்த நிறுவனம் பங்கேற்கப்போவது கிடையாதாம். #உங்க பூசாரித்தனமும் வேணாம்... பொங்கச்சோறும் வேணாம்!

நீட் விவகாரத்தில் ஆளும் கட்சியின் மன்னர் பிரமுகர் பேசிய பழைய காணொலியைக் காட்டி, துணிவானவர் மீடியாக்களிடம் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் பயங்கரமாகப் பரவியது. ‘ஆளும் கட்சியின் இரட்டை நாடகத்தைப் பாரீர்’ என அந்தக் காணொலியைக் கோடிக்கணக்கானோர் பார்க்கும்படி வைரலாக்கச் சொன்னாராம் துணிவானவர். ‘சினிமாக்காரங்கதானே இப்படியெல்லாம் செய்வாங்க…’ எனச் சலித்துக்கொண்டே சகட்டுமேனிக்குப் பரப்பியிருக்கிறது இலைக் கட்சியின் ஆன்லைன் டீம்! #ராசா கையவெச்சா... அது ராங்கா போகுதேய்யா!

எதிரும் புதிருமாக மோதிக்கொண்ட மாஜி மில்க்கும், மன்னர் பெயர்கொண்ட மாஜி எம்.எல்.ஏ-வும் இப்போது இணைபிரியா நண்பர்களாக இருக்கிறார்கள். கடந்த வாரம் மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தவர்கள், அளவுகடந்த மகிழ்வில் அளவளாவ, கட்சிக்காரர்களுக்கே ஆச்சர்யம் தாங்கவில்லை. “சொத்துப் பட்டியலை வெளியிடுகிற அளவுக்கு எதிரியாக இருந்தவரை கட்சிக்குள் இழுத்துப்போட்டு, அவர் வாயை அடைக்கும்விதமாக உற்ற நண்பராகவும் மாறி, மாஜி மந்திரி காட்டுகிற அரசியல் ஆட்டம் பயங்கரமா இருக்கே” என வியந்துபோகிறார்கள். #பால் போலே கள்ளும் உண்டு... நிறத்தாலே ரெண்டும் ஒன்று!

சென்னை கோடம்பாக்கத்தின் லேண்ட் மார்க் அடையாளமாக இருக்கும் பெட்ரோல் பங்க் ஒன்றைக் குறிவைத்து, மதுரைக்கார அண்ணன் பெயரைச் சொல்லி சிலர் வளைக்கப் பார்க்கிறார்களாம். இதற்கான மிரட்டல், உருட்டல் வேலைகளுக்கு ஜெயமான ஐ.பி.எஸ் அதிகாரியின் பெயரையும் பயன்படுத்துகிறார்களாம். இந்தத் தகவல் உளவுத்துறை கவனத்துக்குப் போக, அவர்கள் முதன்மையானவருக்கு `நோட்’ வைத்திருக்கிறார்கள். “மதுரையார் பெயர் சொல்லி யார் அடாவடி செய்தாலும், தூக்கி உள்ளே போடுங்கள்” என உத்தரவு வந்துவிட்டதாம். #அண்ணன் பேரச் சொன்னியா..? அதுக்கப்புறம்தான் அடிச்சதே!

கிசுகிசு

பரோட்டாவுக்குப் பெயர்போன காமெடி நடிகர், மதுரையில் தன் இல்ல மணவிழாவைச் சமீபத்தில் நடத்தினார். விழாவில் இல்லத்தினருக்குச் சொந்தமான பத்து பவுன் தங்க நகை காணாமல்போக, விஷயம் பரபரப்பாகியிருக்கிறது. போலீஸே வீடு தேடிவந்து விசாரிக்க, நடிகரின் குடும்பத்தினர் புகார் கொடுக்கும்படி ஆகிவிட்டதாம். “கல்யாணத்துக்கு வந்த அத்தனை பேரையும் சந்தேகப்படுற மாதிரி பண்ணிட்டியேப்பா…” என உறவுக்காரர்கள் கொந்தளிக்க, ஆளும் கட்சியைச் சேர்ந்த பலரும் போலீஸுக்கு போன் மேல் போன் போட்டு நகையை மீட்டுக் கொடுக்கச் சொல்லி அழுத்தம் கொடுத்தார்களாம். விஷயம் மீடியாக்கள் வரை பரபரப்பாக, உறவுக்காரர்களிடம் காமெடி நடிகர் படாதபாடு படுகிறாராம். #கல்யாண கலாட்டா!

பாடநூல் கழகத்துக்கான புத்தகங்கள் அச்சிடும் பணியை யாருக்குக் கொடுப்பது, யாரைத் தவிர்ப்பது என்பதில் மிகுந்த கவனமாக இருக்கிறாராம் தலைவர் பொறுப்புக்கு வந்திருக்கும் நகைச்சுவைப் புயல். சிபாரிசு, கமிஷன் எனப் பல கோடிகள் கொட்டும் துறை என்பதால், தன்னால் எந்தக் குளறுபடிகளும் வந்துவிடக் கூடாது என்பதை அதிகாரிகளிடம் விளக்கிச் சொல்லி, ‘என் பொறுப்புக்கு பங்கம் வராம பார்த்துக்கங்க’ என்கிறாராம். அதேநேரம், கடந்த காலங்களில் டெண்டர் பணிகளில் நடந்திருக்கும் குளறுபடிகளையும் தீவிரமாக விசாரிக்கச் சொல்லியிருக்கிறாராம். #பங்கம் வருமா... வராதா? பட்டிமன்றமே நடத்தலாமே!

டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த இலைக்கட்சியின் ட்ரீட்மென்ட் புள்ளி, அநியாய அமைதிகாப்பது பணிவானவர், துணிவானவர் இருவரையுமே சந்தேகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ட்ரீட்மென்ட் புள்ளியின் வாரிசு, சின்ன தலைவியின் உறவுகளிடம் ரொம்பவே நெருக்கம் காட்டுகிறாராம். எந்த நேரத்திலும் சின்ன தலைவியை ட்ரீட்மென்ட் புள்ளி நேரில் சந்தித்தாலும் ஆச்சர்யத்துக்கில்லை என்கிறார்கள். #புலி வருது... புலி வருது!