Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

இலைக் கட்சியின் துணிவானவர் திடீரென டெல்லி செல்ல விரும்புகிறாராம். பிரதமரைச் சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறாராம். ‘ஆம்’, ‘இல்லை’ என்று பிரதமர் அலுவலகத்திலிருந்து எந்தத் தகவலும் இன்னமும் சொல்லப்படாத நிலையில், இந்த விஷயம் மட்டும் எப்படியோ வெளியே கசிந்திருக்கிறது. ‘எதற்காக இந்தச் சந்திப்பு?’ என ஆளுங்கட்சியைவிட அதிக கவலையில் இருப்பது இலைக் கட்சியின் பணிவானவர்தானாம். #குப்பு குப்புனு வியர்க்க உடுறானுங்க... காஞ்சபாடில்ல!

உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, கட்சியை வலுப்படுத்த வியூகப் புள்ளியிடம் சமீபத்தில் பேசியிருக்கிறார் நடுநிலைக் கட்சித் தலைவர். “உங்களை நியமித்து அதற்குக் கொடுக்கிற அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. உங்களின் ஆலோசனைகளை மட்டும் சொல்லுங்கள்” எனக் கேட்க, “நாடாளுமன்றத் தேர்தல் வரை வெயிட் பண்ணுங்க… உங்க கட்சிக்கு அருமையான கூட்டணியை செட் பண்றது என் பொறுப்பு” என்றாராம் வியூகப் புள்ளி. #தன்னந் தனிச்சிருக்க... தத்தளிச்சு தானிருக்க!

கிசுகிசு

காவிக் கட்சியில் விரைவில் நிர்வாகிகள் மாற்றம் நடக்கப்போகிறதாம். தனக்குச் சரியாக இருப்பார்கள் என அனுமானித்துவைத்திருக்கும் ஆட்களைப் பவரான பொறுப்புகளுக்குக் கொண்டுவந்தால்தான் கட்சியைத் திறம்பட நடத்த முடியும் என நினைக்கிறாராம் மாஜி காக்கி. அதனால், பட்டியலை ரெடி செய்து டெல்லியிடம் ஒப்புதல் கேட்டிருக்கிறாராம். அதனால், மாஜி காக்கியைக் காக்கா பிடிக்க காவிக் கட்சி நிர்வாகிகள் போட்டி போடுகிறார்கள். #மலே... நல்லாருக்கியா... மலே!

‘அண்ணன் தலைவரின் அம்மா மலையாளி’ எனக் காவிக் கட்சியின் மன்னர் தலைவர் பிரஸ் மீட்டில் ஆவேசமாகச் சொன்னார். இதற்கு பதிலடியாக அண்ணன் தலைவர் பகடி செய்து சிரிக்க, மன்னர் தலைவருக்கு ரொம்பவே கோபம் வந்துவிட்டதாம். பழைய வழக்குகளை வைத்து அண்ணன் தலைவரை உள்ளே தள்ளுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லி ஆளுங்கட்சியில் தனக்கு நெருக்கமாக இருக்கும் சீனியர்கள் பலரிடமும் சொல்லிவருகிறாராம். #லேடன்ட்ட பேசுறியா... பின்ன்ன் லேடன்!

கிசுகிசு

காமெடிக்குப் பெயர்போன தெர்மாக்கோல் மாஜி, முதல்வரைப் பாராட்டிப் பேசியது பரபரப்பானது. “அவரைக் கண்டிச்சு வையுங்க… அப்புறம் ரெய்டுக்கு பயந்து ஆளாளுக்கு ஆளுங்கட்சியைப் பாராட்ட ஆரம்பிச்சிடுவாங்க” என்று துணிவானவரிடம் சீனியர் நிர்வாகிகள் பலரும் பேசினார்களாம். விஷயம் தெரிந்து முந்திக்கொண்ட தெர்மாக்கோல் மாஜி, ‘அடுத்த வாரமே ஆளுங்கட்சியை வறுத்தெடுத்துடுறேன்’ என்று துணிவானவருக்கு போன் பண்ணிச் சொன்னாராம். #அது போன வாரம்... நான் சொல்றது இந்த வாரம்!

மதுரைக்கார அண்ணனுக்குப் பொழுதைக் கழிப்பதே பெரும்பாடாக இருக்கிறதாம். “வீட்டுக்குள்ளேயே நாள் முழுக்க எப்படி அடைஞ்சு கிடக்க முடியும்?” எனப் பொருமுகிறாராம். ரகசியமாகப் பேசிக்கொண்டிருந்த நிர்வாகிகளையும் முதன்மையானவர் மிரட்டிவைத்திருப்பதால், யாரிடமும் கட்சி விஷயங்களைப் பேச முடியாத கையறு நிலையாம். ‘விரைவில் அண்ணன் அதிரடி முடிவை எடுத்தாலும் ஆச்சர்யத்துக்கில்லை’ என்கிறார்கள் விழுதுகள். #இன்னுமாடா இந்த ஊரு நம்மள நம்புது?!

முதன்மையானவரின் வாரிசு நிறுவனம், மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கப்போகிறது எனத் தெரிந்தவுடனேயே ‘தான் தயாரித்து வைத்திருக்கும் படத்தை வாங்கிக்கொள்ள முடியுமா?’ எனக் கதவைத் தட்டினார் காவிக் கட்சியின் ஹீரோயின். எடுத்த வரையிலான படத்தைத் திரையிட்டும் காட்டினார். படம் பிடித்துப்போக, கட்சி வேறுபாடுகளைக் கடந்து அக்ரிமென்ட் கையெழுத்தாகி அம்மணிக்குப் பணம் கொடுக்கப்பட்டதாம். #கட்சி வேற... கல்லாப்பொட்டி வேற!