Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

“சொந்தமாக வீடு இல்லை” என மேடைகளில் கண் கசியப் பேசுகிறார் அண்ணன் தலைவர். “சும்மா அடிச்சுவிடுறார்ப்பா… அவர்கிட்ட இல்லாத பணமா?” என ஆன்லைன் ஆட்கள் பின்னூட்டங்களில் பிரளயம் கிளப்புகிறார்கள். வீடு விவகாரத்தில் அவர் அல்லாடுவது உண்மைதான் என்கிறார்கள். தற்போது லீஸுக்கு இருக்கும் வீட்டைக் காலிசெய்யச் சொல்லி கடுமையான நெருக்கடிகளைக் கொடுக்கும் உரிமையாளர், வீட்டை விலைபேசுவதாகச் சொல்லி, வெளி ஆட்களையும் அவ்வப்போது அழைத்து வருகிறாராம். “நானே விலை கொடுத்து வாங்கிக்கொள்கிறேன்” என அண்ணன் தலைவர் சொல்ல, ஐந்து விரல்களை நீட்டி விலை சொன்னாராம் உரிமையாளர். அண்ணன் தலைவருக்கு மயக்கம் வராத குறையாம். #கதை கேளு... கதை கேளு... நிஜமான கதை கேளு!

கிசுகிசு

வேளாண் சட்டங்களை வாபஸ் பெற பிரதமர் மோடி முடிவெடுத்த தகவல், கடைசிவரை வெளியே யாருக்கும் கசியாமல் இருந்தது. தலைநகரின் புலனாய்வு ஊடகங்கள்கூட பிரதமரின் இந்த திடீர் அறிவிப்பில் மிரண்டுபோயின. “அரசின் ரகசியங்கள் இந்த மாதிரி ரகசியமாகக் காப்பாற்றப்பட வேண்டும். ஆனால், நாம் இங்கே ஒரு முடிவெடுத்தால், அடுத்த நொடியே விஷயம் வெளியே போய்விடுகிறது...” என நெருங்கிய அதிகாரிகளிடம் ரொம்பவே வருத்தப்பட்டாராம் முதன்மையானவர். எதிர்த்தரப்புக்கு நெருக்கமான சில அதிகாரிகள், கோட்டையில் இன்னமும் கோலோச்சுவதுதான் முதன்மையானவரின் சங்கடத்துக்குக் காரணமாம். #பூனையை மடியிலேயே வெச்சுக்கிட்டு `சத்தம் வருது... சத்தம் வருது’ன்னா..?!

ஆடு திருடியவர்களைப் பிடிக்கப்போய் உயிரை இழந்த காவல்துறை அதிகாரி குறித்த விஷயம், முதன்மையானவரை ரொம்பவே பாதித்துவிட்டதாம். அதனால்தான், ‘நிவாரணமாக 50 லட்சம் வழங்கலாம்’ என அதிகாரிகள் சொன்னதை மாற்றி, ஒரு கோடியாக உயர்த்தி அறிவிக்கச் சொன்னாராம். குற்றவாளிகள் பிடிபட்ட நிலையில், ‘என்கவுன்ட்டர் செய்யலாமா?’ எனக் காவல்துறை தரப்பில் கேட்க, “அதெல்லாம் வேண்டாம்” எனச் சொல்லப்பட்டுவிட்டதாம். #குற்றமே தண்டனை!

பிரகாசமான நடிகரின் படம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில், அந்தப் படத்துக்கு வட்டார வசனம் எழுதிய கிராமத்து எழுத்தாளர், தனக்குக் கிடைத்த 50,000 ரூபாய் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். இந்த நிலையில் அந்த எழுத்தாளரின் வங்கிக் கணக்கைச் சமூக வலைதளங்களில் பரப்பிவரும் பழக் கட்சி நிர்வாகிகள், ‘பணத்தைத் திருப்பிக் கொடுத்த மாவீரனுக்கு நாம் பணம் கொடுப்போம்’ என வைரலாக்கிவருகிறார்கள். திருப்பிக் கொடுத்த தொகையைக் காட்டிலும் பன்மடங்கு தொகை அந்த எழுத்தாளரின் வங்கிக் கணக்கில் வரவாகிவருகிறதாம். #ஜெய்... காலண்டர் லட்சுமி!

இலைக் கட்சியில் பெரிய பிரளயம் வெடிக்கும் என எதிர்பார்த்திருந்த ஆளும் தரப்புக்கு சற்றே ஏமாற்றம். மழை வெள்ளம் உள்ளிட்ட பிரச்னைகளால், இலைக் கட்சியின் கோஷ்டி மோதல் எவ்விதப் பரபரப்புமின்றி பிசுபிசுத்துப்போனதால், அந்தக் கூடாரத்தின் முக்கியப் புள்ளியான ஒருவரை வளைத்து, கட்சியை உடைக்கும் திட்டத்தைக் கையில் கொடுக்கப்போகிறார்களாம். ‘வே’-யா, ‘வி’-யா எனப் பட்டிமன்றம் நடத்தாத குறையாக இரு மாஜிக்களின் பெயர்களையும் பரிசீலித்து வருகிறார்கள். ‘அவர்கிட்ட ஒப்படைச்சா கச்சிதமா முடிச்சுடுவார்’ எனப் பெரும்பான்மை ஆட்கள் ‘வி’ புள்ளியையே கைகாட்டுகிறார்களாம். #விஜயமாகட்டும்!

கிசுகிசு

கதர்க்கட்சியில் தமிழகத் தலைவர் பதவிக்கு மாற்றம் வரப்போவதாகக் கிளம்பிய பரபரப்பு அப்படியே அமுங்கிப்போனதில் போட்டி போட்டு காய்நகர்த்தியவர்களுக்குப் பெரிய ஏமாற்றம். அசைக்க முடியாத ஆளாகத் தற்போதைய தலைவர் கெட்டியாக நாற்காலியைப் பிடித்துக்கொள்ள, “இவர் சமர்த்து வேற யாருக்கு வரும்? சீனியர்ங்கிற செல்வாக்கை நிரூபிச்சுட்டார்யா…” எனப் புகழ்ந்து அவரை நெருங்கத் தொடங்கியிருக்கிறார்களாம் சற்றே விலகியிருந்தவர்கள். இந்த நிலையிலும் மனம் தளராமல் மறுபடியும் டெல்லியின் மனதை அசைத்து, மாற்றல் அறிவிப்பை வெளியிடவைக்கப் போராடிவருகிறார் ஒளிமிகுந்த பெண் எம்.பி. #நாற்காலிப் போராட்டம்!

பிரகாச நடிகருக்கு எதிராகத் தனிப்பட்ட தாக்குதல்கள் வேண்டாம், அவர் வெளியே செல்லும்போது விமர்சிப்பதோ, கேரோ செய்வதோ கூடாது என ஆஃப் தி ரெக்கார்டு ஆர்டர் போட்டிருக்கிறாராம் தோட்டத்து இளையவர். ஆளும் தரப்பு அதிரடிகாட்ட முனைப்போடிருக்கும் தகவல் கசிந்த பிறகுதான் கப்சிப் மனநிலைக்கு இளையவர் வந்தாராம். ‘எதுவாயினும் அவர்களை நீதிமன்றத்தில் சந்திப்போம்’ என்கிறாராம் தன்னிடம் கொதிப்போடு வரும் நிர்வாகிகளிடம். #போர்... ஆமா போர்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism