Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

மாம்பழ மாவட்டத் தொகுதியொன்றில் போட்டியிட்டுத் தோற்ற பிரியமான பெண்மணி, மறுபடியும் மேயர் சீட் வாங்க தலைமையிடம் மூவ் செய்கிறாராம்.

கிசுகிசு

மாம்பழ மாவட்டத் தொகுதியொன்றில் போட்டியிட்டுத் தோற்ற பிரியமான பெண்மணி, மறுபடியும் மேயர் சீட் வாங்க தலைமையிடம் மூவ் செய்கிறாராம்.

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

கட்சி மாறிய பிறகும் இனிஷியல் தலைவரை நல்லவர் எனப் புகழ்ந்தார் விசுவாசத்தின் கடைசி விக்கெட்டாக நின்ற கல்வித்துறை மாஜி. அவரையே விஞ்சும்விதமாகக் கட்சி மாறிப்போன வருத்தத்தையெல்லாம் மறந்து, “தேர்தல் உள்ளிட்ட எந்தக் காரணத்தைச் சொல்லியும் பணம் வாங்காதவர்; தலைமை கொடுத்த பணத்தையும் தவிர்த்தவர்; கைச்சுத்தமானவர்” என மாஜியைப் பற்றிப் புகழ்கிறாராம் இனிஷியல் தலைவர். # ...நம்ம ரெண்டு பேரும் யாருனு ஊருக்கே தெரியும்!

‘டோக்கன் புகழ்’ கட்சியின் சென்னை நிர்வாகிகளைக் கூண்டோடு கொண்டுவர பக்தித் துறையைக் கையில்வைத்திருக்கும் மந்திரிக்குத்தான் அசைன்மென்ட் கொடுத்ததாம் ஆளுங்கட்சி. அவரைத் தாண்டி, தங்கள் பக்கம் இழுக்கும்படி ‘மைக் விரும்பி’ மாஜிக்கு உத்தரவிட்டதாம் எதிர்க்கட்சி. அவர் சொதப்ப, மாவீரன் பெயர்கொண்ட மாஜி புலிப்பாய்ச்சலில் சென்னை நிர்வாகிகளின் மண்டையைக் கழுவி தாய்க்கழகத்துக்கே கொண்டுவந்தாராம். #இரை தேடப் பறந்தாலும்... திசை மாறித் திரிந்தாலும்... கூடு வந்து கூடு!

மாம்பழ மாவட்டத் தொகுதியொன்றில் போட்டியிட்டுத் தோற்ற பிரியமான பெண்மணி, மறுபடியும் மேயர் சீட் வாங்க தலைமையிடம் மூவ் செய்கிறாராம். முதன்மையானவர் தொடங்கி மீசை மினிஸ்டர் வரை பலரிடமும் பேசிப் பகீரதப் பிரயத்தனம் பண்ணுகிறாராம். ‘இந்த முயற்சிகளையெல்லாம் தேர்தலில் பண்ணியிருந்தால், இந்நேரம் ஜெயிச்சு எம்.எல்.ஏ-வாகியிருக்கலாம்’ என அம்மணியின் முயற்சிகளைக் கிண்டலடிக்கிறார்கள் உடனிருக்கும் உடன்பிறப்புகள். #எது நடந்ததோ அது நன்றாகவே நடக்கவில்லை... அதானே மேடம்?

ஆர்வக்கோளாறில் தன் தொகுதியைத் தாண்டி, மீசைக்கார மினிஸ்டரின் தொகுதிப் பக்கம் போய் ஆய்வு நடத்தினாராம் நல்லெண்ண ரூட்டில் சீட் வாங்கிய ஹார்ட் புள்ளி. “என் தொகுதிக்கு நீயென்ன இன்சார்ஜா?” என மீசை மினிஸ்டர் வறுத்தெடுக்க, “என் தொகுதியோட எல்லை தெரியாமல் அந்தப் பக்கம் வந்துட்டேன். மன்னிச்சுடுங்க” என்றாராம் ஹார்ட் புள்ளி. “உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. அரசியல்னா என்ன, தொகுதின்னா என்னன்னு தெரியாத உன்னைய மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் சீட் கொடுத்த தலைமையைச் சொல்லணும்” எனப் பொளந்துகட்டினாராம் மீசை. கலங்கி நின்றராம் ஹார்ட் புள்ளி #பீசு பீசா கிழிக்கும்போதும்... ஏசுபோல பொறுமை பாரு!

தன்னைத் தாண்டி ‘அடுத்த வாரிசை’ யாரும் சந்திக்கக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறாராம் கற்பிக்கும் துறையின் அமைச்சர். மீறி யாராவது சந்தித்தால், அவர்களோடு அன்னம் தண்ணி புழங்கக் கூடாது என நாட்டாமை பாணியில் தள்ளிவைத்து உத்தரவிடுகிறாராம். இந்த விஷயத்தை ‘அடுத்த வாரிசின்’ கவனத்துக்குக் கொண்டுபோக, “அவர் ரூட்டிலேயே வாங்க... அதுதான் சரியா இருக்கும்” என அவரும் சொல்ல, சுவரில் அடித்த பந்தாகத் திரும்பியிருக்கிறார்கள் புகார் புள்ளிகள். #தேவாவே சொல்லிட்டாரு மொமன்ட்!பணிவானவருக்கும் துணிவானவருக்கும் மீடியேட்டராக இருக்கும் டெல்டா மாவட்ட ட்ரீட்மென்ட் தலைவர், இருவருடைய அழைப்புக்கும் காது கொடுக்காமல் இப்போது கப்சிப் காட்டுகிறாராம். வெளியே உடல்நிலையைக் காரணமாகச் சொன்னாலும், சாதி ரீதியான நெருக்கடிக்கு ஆளாகாமல் இருக்கத்தான் இந்த எஸ்கேப்பாம். #ஆமா சார்... நான் மௌன விரதம்!

கிசுகிசு

தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு எழுத வேண்டிய கடிதத்தை, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்துக்கு மாற்றி எழுதிய விவகாரம், சமூக வலைதளங்கள் வரை சந்தி சிரிக்க, அதிகாரிகளிடம் கொந்தளித்தாராம் முதன்மையானவர். ‘எந்த விஷயத்தை, எந்தத் துறைக்கு எழுதுவது என்பதைக்கூடவா அறியாமல் இருப்பது?’ என முதன்மையானவர் கேட்க, நிழலாக நிற்கும் அதிகாரிகள் வெலவெலத்துப்போனார்களாம். #கண்ணதாஸா... ஜேசுதாஸா...!?

கிசுகிசு

“நான் போன் வெச்சிருக்கிறது நான் பேசுவதற்கு மட்டும்தான். அடுத்தவங்க பண்ற போனை அட்டெண்ட் பண்றதுக்கு இல்லை” என வெளிப்படையாகவே சொல்கிறாராம் அணில் அமைச்சர். “உதவி கேட்கும் ஆட்களுக்கு இப்படிச் சொல்வது சரி… தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து உதவிய ஆட்களுக்கும் இப்படிச் சொல்லலாமா?” எனக் கேட்கிறார்கள் சிலர். இலை சேனலின் இளைய வாரிசும் 25 ஸ்வீட் பாக்ஸ் கொடுத்துவிட்டு அணில் அமைச்சரிடமிருந்து பதில் வராத வருத்தத்தில் இருக்கிறாராம். #ஸ்ஸ்ஸோஓஓ... போன எடுத்தா நச்சு நச்சுங்றானுங்க!கிசு கிசு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism