Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

டம்மி பணியிடங்களில் நியமிக்கப்பட்டிருக்கும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பட்டியலை முதன்மையானவர் கவனத்துக்கு அனுப்பி, “இவர்களை உரிய இடங்களில் நியமித்தாலே அரசு நிர்வாகம் அருமையாக இயங்கும்” எனச் சொல்லியிருக்கிறார்களாம் ஓய்வுபெற்ற அதிகாரிகள் சிலர். முதன்மையானவர் அதைச் சட்டை செய்ய மாட்டார் எனப் பலரும் நினைத்திருக்க, அந்தப் பட்டியலைக் கையிலெடுத்து, ‘அதிகாரிகளின் தற்போதைய நிலை குறித்த விவரங்கள் தன் டேபிளுக்கு வர வேண்டும்’ என உத்தரவு பறந்திருக்கிறதாம். விரைவில் அதிகாரிகள் மாற்றம் நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லையாம். #மாற்றம் ஒன்றே மாறாதது!

கிசுகிசு

போன் அழைப்புகள் மட்டுமல்லாமல், வாட்ஸ்அப் பேச்சுகளும் டேப் செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் ஏக பரபரப்பு. உளவுத்துறையின் வாழ்த்து அதிகாரி வாட்ஸ்அப் உரையாடல்களைப் பதிவுசெய்யும் அனுமதியைப் பெற்றிருப்பதாகச் சொல்லிக் கிறுகிறுக்க வைக்கிறார்கள். உளவு அதிகாரியோ, ‘அர்த்தமற்ற வதந்தி’ எனச் சிரிக்கிறாராம். காவிக் கட்சியின் மாஜி அதிகாரி, “டேப் விஷயத்தை விரைவில் ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்துவேன்” எனச் சவால்விட்டிருக்கிறாராம். #காதோடுதான் நான் பேசுவேன்!

கிசுகிசு

கதர்க் கட்சியிலிருந்து பிரிந்து தனிக்கட்சி நடத்திவரும் நறுமணத் தலைவரை, காவிக் கட்சியின் சிபாரிசுதான் டெல்லிக்கு அனுப்பி அழகுபார்த்தது. அடுத்தபடியாக அவரைக் காவிக் கட்சியிலேயே சேரவைக்க முயற்சி நடக்கிறதாம். மத்திய மந்திரியாக்கினால் இணைப்பு சாத்தியம் என்கிறார்களாம் இரு தரப்புக்கும் நெருக்கமானவர்கள். #றெக்க கட்டி பறக்குதய்யா அய்யாவோட சைக்கிள்!

கிசுகிசு

“நீட் விவகாரத்தில் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?” என முதன்மையானவர் சவால்விட, இலைக் கட்சியின் துணிவானவரும் பதிலுக்குப் பாய்ந்திருக்கிறார். “நான் ரெடி, எங்கே வைத்துக்கொள்ளலாம் விவாதத்தை?” எனத் துணிவானவர் கேள்வி கேட்க, முதன்மையானவருக்கு உரை தயாரித்துக் கொடுப்பவர்கள் உறைந்துபோனார்களாம். காரணம், ‘உரையைப் படித்தபோதே, இப்படி பதிலடி கொடுத்தால் என்ன செய்வது?’ என முதன்மையானவர் கேட்டாராம். துணிவானவரால் பதிலடி கொடுக்க முடியாது என அடித்துச் சொன்னார்களாம் உரை தயாரித்தவர்கள். முடிவு வேறுவிதமாக அமைய, முதன்மையானவருக்கு முகம் சிவந்துபோனதாம். #நான்தான் ஆரம்பத்துலயே சென்னேம்ல!

கிசுகிசு

கப்பல் தலைவரின் மனைவி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுக்கச் சுழன்றடிக்கிறார். வெற்றி தோல்வியைவிட கட்சிக்காக உழைக்கும் நிர்வாகிகளைக் கண்டறியவே இந்தப் பயணம் என்கிறாராம். “அடுத்தடுத்த தேர்தல்களில் நிச்சயம் உங்களின் உழைப்புக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத்தருவேன்” என உத்வேகம் கொடுக்கிறாராம். சில நிர்வாகிகளின் போன் எண் வாங்கி கப்பல் தலைவரையே பேசவைத்து பிரமி-ப்பூட்டினாராம். #டைட்டானிக் பார்ட் - 2!

கிசுகிசு

ஊடக வெளிச்சமுள்ள புள்ளிகளை வளைக்கும் வேலையைத் தீவிரமாகக் கையிலெடுத்திருக்கிறாராம் அணில் அமைச்சர். சமூக வலைதளங்களில், ஊடகங்களில் தீவிரமாக இயங்குபவர்களை லிஸ்ட் எடுக்கச் சொல்லியிருக்கிறாராம். ‘பசையைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்’ என்று பக்கா உத்தரவாதம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். “பொது வாழ்வில் எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம் வரப்போகிற நேரம்... ஊடகங்கள் அதைக் கெடுத்துவிடக் கூடாது” என ஆதரவாளர்களிடம் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறாராம். #என்னமோ பெருசா நடக்கப்போகுது!