Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

காவிக் கட்சியின் வாக்குவங்கி, ஆஹா ஓஹோ என வளராவிட்டாலும் ஓரளவு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அடியெடுத்து வைத்திருப்பதில், காக்கி மாஜிக்கு அளவில்லா சந்தோஷமாம். ஆனால், ‘இலைக் கட்சி நிர்வாகிகளின் மறைமுக ஆதரவால்தான் வாக்குகள் வசமாகின’ எனக் காக்கி மாஜிக்கு எதிராக டெல்லிக்குத் தகவல்கள் அனுப்பியிருக்கிறார்களாம் காவிக் கட்சியின் உள்ளடிப் புள்ளிகள். ‘தனித்து நிரூபிப்பதாகச் சொல்லிச் சொதப்பியவர், சாமர்த்தியமாகக் கூட்டணி அமைத்திருந்தால் கட்சியின் கீழ்த்தட்டு நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்திருப்பார்கள்’ எனவும் புகாரில் பொருமியிருக்கிறார்களாம். இதற்கிடையில், “தமிழகத்தில் கவனம் செலுத்தியதுபோல், அந்தமானில் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் பிரசார வியூகங்களை வகுத்து வாகை சூட வையுங்கள்” என டெல்லித் தலைமை மாஜி காக்கியை அங்கே அனுப்பிவைத்திருப்பதுதான் ஹைலைட். #தனிச்சு நின்னீங்க... தீவுக்குப் போறீங்க... தனித்தீவாகிடாதீங்க!

கிசுகிசு

சிறைக்குள் இருக்கும் மீடியா விரும்பி மாஜியை, துணிவானவர் தன் ஆதரவாளர்களோடு சந்திக்கச் சென்றார். ஆனால், இந்தச் சந்திப்பு குறித்துப் பணிவானவருக்குத் தகவல் சொல்லப்படவில்லையாம். துணிவானவருக்கு எதிராக திடீர் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட பின்னணிக்குப் பணிவானவரின் ஆதரவாளர்கள்தான் காரணமாம். இதனால், மீண்டும் இலைக் கட்சிக்குள் பனிப்போர் கிளம்பியிருக்கிறதாம். இன்னும் சில நிர்வாகிகள் மூலமாகக் கூடுதல் குடைச்சலைக் கொடுக்கவும் பணிவானவர் தயாராகிவருகிறாராம். #மர்ம யுத்தம்!

கிசுகிசு

டெல்டா மாவட்டத்தில், கோட்டைப் பகுதியின் நகராட்சி சேர்மன் பதவியை வலியுறுத்திக் கேட்கிறதாம் பம்பரக் கட்சி. ஏற்கெனவே சேர்மனாக இருந்த ஜெயமான பெண்மணி இந்தமுறை வென்றிருப்பதால், அவரையே சேர்மனாகத் தேர்வுசெய்யும்படி முதன்மையானவரிடம் கோரிக்கை வைத்தாராம் பம்பரக் கட்சியின் தலைவர். சுயேச்சைகளின் ஆதரவும் ஜெயமான பெண்மணிக்கு இருக்கிற தகவலையும் சொன்னாராம். ‘ஆம்’, ‘இல்லை’ என எந்த பதிலும் சொல்லாமல், புன்னகைத்தாராம் முதன்மையானவர். #தந்திரப் புன்னகை!

கிசுகிசு

ஆளுங்கட்சியின் வாரிசுப்புள்ளியை மாண்புமிகுவாக்க, ‘மே மாதம் சிறப்பாக இருக்கும்’ எனக் குறித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். ஆனால், கமிட்டாகியிருக்கும் படங்களை முடித்துக்கொடுத்த பிறகே பொறுப்புக்கு வர நினைக்கிறாராம் வாரிசு. அதனால், மே மாதத்துக்குப் பிறகு எப்போது நல்லகாலம் என என்கொயரி பறக்கிறதாம். இதற்கிடையில், கமிட்டாகியிருக்கும் படங்களைச் சீக்கிரம் முடிக்கச் சொல்லி வாரிசுக்குத் தெரியாமலேயே சம்பந்தப்பட்ட படங்களின் டெக்னீஷியன்களுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறதாம். #ஒப்பனை கலைத்த பின் கிரீடம்!

கிசுகிசு

பல வருடங்களாகத் துப்புத் துலக்க முடியாமல் இருக்கிறது கோட்டை மாநகரின் அரசியல் புள்ளியின் கொலை வழக்கு. அதைத் துப்புத் துலக்க, சி.பி.சி.ஐ.டி-யின் உயரதிகாரி உப்பு மாவட்டத்தின் ஜெயமான அதிகாரியை நியமித்தார். மாவட்ட எஸ்.பி-யாகப் பணியாற்றியபடியே அந்தக் கொலை வழக்கையும் கூடுதலாக விசாரிக்கத்தான் முதலில் உத்தரவிட்டிருந்தார்களாம். இதற்கிடையில், ‘அவர் வசம் அந்த வழக்கை மட்டும் ஒப்படையுங்கள்’ என முதன்மையானவர் தரப்பிலிருந்தே சொல்லப்பட, உடனடியாக உப்பு மாவட்டத்துக்கு வேறு அதிகாரியை நியமித்து, ஜெயமான அதிகாரியை சி.பி.சி.ஐ.டி துறைக்கே அதிகாரமான பதவிக்கு அழைத்து வந்துவிட்டார்களாம். ஆறு மாத காலத்துக்குள் வழக்கைத் துப்புத் துலக்கி, காவல்துறையின் கௌரவத்தைக் காப்பாற்றுவதாக உறுதி கொடுத்திருக்கிறாராம் ஜெயமான அதிகாரி. #ஜெயமாகட்டும்!

கிசுகிசு

மாவட்டவாரியான பயணத் திட்டங்களைத் தொடங்கத் தயாராகிவிட்டாராம் சின்ன தலைவி. பயணத்தை எங்கு தொடங்கி எங்கு முடிப்பது, யாரையெல்லாம் சந்திப்பது, எங்கெல்லாம் மேடைகள் அமைத்துப் பேசுவது எனத் திட்டங்களைத் தீவிரமாக உருவாக்கிவருகிறார்கள். இனிஷியல் புள்ளியைத் தவிர்த்து, மருத்துவப் புள்ளியை அழைத்துக்கொண்டு பயணிக்கப்போகிறாராம் சின்ன தலைவி. #ஹொய்யா... புது ரூட்டுலதான்... ஹொய்யா... நல்ல ரோட்டுலதான்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism